என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உலக அளவில், கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்கள் விற்பனை 5.9 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில், சென்ற ஆண்டில் மொத்தம் 5,57,706 ஜாகுவார் லேண்டு ரோவர் (ஜே.எல்.ஆர்) கார்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 5.9 சதவீதம் குறைவாகும்.

இதில் லேண்டு ரோவர் விற்பனை 3.8 சதவீதம் குறைந்து இருக்கிறது. ஜாகுவார் விற்பனை 11 சதவீதம் சரிவடைந்து 1.61 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டு சீன சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 14 சதவீதம் வரை சரிவடைந்தது. எனினும், கடந்த ஆறு மாதங்களில் விற்பனையில் இருமடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் சர்வதேச சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 1.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. டிசம்பரில் இந்நிறுவனம் மொத்தம் 52,814 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. லேண்ட் ரோவர் விற்பனை 9.3 சதவீதம் அதிகரித்தது. எனினும், ஜாகுவார் விற்பனை 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. காரை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் கியூ8 ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி கியூ8 விலை ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஆடி கியூ8 காரின் முன்புற கிரில் இருபுறங்களிலும் மெல்லியதாக இருக்கும் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்களும், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், பெரிய வீல் ஆர்ச்கள், 21 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒட்டுமொத்தமாக காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. அளவில் புதிய ஆடி கியூ8 மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். மாடல்களை விட சிறியதாக இருக்கின்றன.

உள்புறம் மூன்று டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள்: 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 இன்ச் கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், கனெக்ட்டெட் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்டிரானிக்கலி ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங், 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.
ஆடி கியூ8 மாடலில் பி.எஸ்.6 ரக 3.0 லிட்டர் TFSI யூனிட் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 340 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க், எட்டு ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது இசட்.எஸ். எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் ஜனவரி 27-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் எம்.ஜி. மோட்டார் விற்பனையகம் சென்று ரூ. 50,000 கட்டணத்தில் புதிய எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்ய முடியும்.
எம்.ஜி. இசட்.எஸ். இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது மாடல் ஆகும். முன்னதாக அந்நிறுவனத்தின் ஹெக்டார் கார் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் எம்.ஜி. இசட்.எஸ். கார்: ஐதராபாத், ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.
காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் புதிய காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டெட் முன்புற இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 50 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தினை குர்கிராமில் துவங்கியது.
ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 63,912 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஆக்டிவா மாடலை விட ரூ. 8000 விலை அதிகம் ஆகும்.
புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி: ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,412 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.

ஆக்டிவா 6ஜி மாடலில் ஹோண்டாவின் PGM-Fi எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம் முன்னதாக ஆக்டிவா 125 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் ஏ.சி.ஜி. ஸ்டார்ட்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்ட, பாஸ் ஸ்விட்ச், வெளிப்புற ஃபியூயல் ஃபில்லர் கேப், முன்புறம் 12 இன்ச் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 3-ஸ்டெப் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்: பிளாக், டேசில் எல்லோ மெட்டாலிக், பியல் பிரெஷியஸ் வைட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பியல் ஸ்பார்ட்டன் ரெட் மற்றும் க்ளிட்டர் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்திருக்கிறது.
பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, கடந்த 2019-ஆம் ஆண்டில் 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. சொகுசு கார்களை தயாரித்து வரும் பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம், 2019 காலண்டர் ஆண்டில், மொத்தம் 9,641 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதில் 9,000 பி.எம்.டபுள்யூ. கார்களும், 641 மினி கார்களும் அடங்கும். முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் குறைவு ஆகும். அப்போது விற்பனை 11,105 கார்களாக (10,405 பி.எம்.டபுள்யூ. கார்கள் + 700 மினி கார்கள்) இருந்தது.

இந்திய மோட்டார் வாகன துறையில் தேக்கநிலை உருவாகி, கடந்த ஆண்டில் பல நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் சொகுசு கார்கள் விற்பனையும் சரிவைச் சந்தித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்கானதாகும்.
புதிய இ.கியூ. பிராண்டை தவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இ.கியூ.சி எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. எஸ்.யு.வி. கார் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. தோற்றத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இ.கியூ.சி. கார் பார்க்க சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய இ.கியூ.சி. எஸ்.யு.வி. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பி.ஹெச்.பி. பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் எஸ்.யு.வி. காரின் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் துவக்க விலை ரூ. 21.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டீசல் ஆட்டோமேடிக் பவர்டிரெயின் லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. டாப் எண்ட் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட் டீசல் ஆட்டோமேடிக் விலை ரூ. 24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் ஜீப் காம்பஸ் காரின் இரண்டு வேரியண்ட்களிலும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கிறது. தற்சமயம் ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேடிக் பவர்டிரெயின் காம்பஸ் டிரெயில்ஹாக் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
இந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் காம்பஸ் லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ள புதிய பவர்டெரியன் ஏற்கனவே டிரெயில்ஹாக் மாடல்களில் உள்ள பவர்டிரெயின் போன்றதாகும். இதில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியிட்டது. இதன் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர்: அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. என்ட்ரி லெவல் செட்டாக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சம் என்றும் பிரீமியம் வேரியண்ட் விலை ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் பூனே மற்றும் பெங்களூருவில் கிடைக்கும். அந்த வகையில் பெங்களூருவில் 14 விற்பனையகங்களிலும், பூனேவில் 4 விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதன்பின் மற்ற பகுதிகளில் விற்பனைக்கு வருகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் கே.டி.எம். விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விநியோகம் பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்ட்ரி லெவல் அர்பைன் மாடல்: சிட்ரஸ் ரஷ் மற்றும் சைபர் வைட் என இரண்டு நிறங்களிலும், பிரீமியம் வேரியண்ட்: ஹேசல்நட், புரூக்லின் பிளாக், சிட்ரஸ் ரஷ், வெலுட்டோ ரோஸோ மற்றும் இன்டிகோ மெட்டாலிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
2019 காலண்டர் ஆண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 16 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 16 சதவீதம் சரிவடைந்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், 2019-ஆம் ஆண்டில், உள்நாட்டில் மொத்தம் 1,26,701 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 16 சதவீதம் குறைவாகும். அப்போது அது 1,51,480-ஆக இருந்தது.
இந்நிறுவனம், டிசம்பர் மாதத்தில் மட்டும் 7,769 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 12,489 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 38 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 45 சதவீதம் குறைந்து 6,544 கார்களாக இருக்கிறது. அதே சமயம் ஏற்றுமதி 87 சதவீதம் உயர்ந்து 1,225 கார்களாக அதிகரித்து உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் நெக்சான் கார் இந்திய வெளியீட்டு விவரங்களௌ தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் இம்மாதம் 22-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து டாடா நிறுவனம் நெக்சான் இ.வி. காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் விலை ஜனவரி 28-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
நெக்சான் இ.வி. கார்: XM, XZ+ மற்றும் XZ+ LUX என மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இரண்டு டிரைவ் மோட்கள், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

டாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும்.
டாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு சார்ஜ் செய்யும் போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். வீட்டில் உள்ள சார்ஜர் பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்னிவல் எம்.பி.வி. கார் நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்.பி.வி. கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவின் முதல் நாளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய கார்னிவல் கார் நான்கு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கியா எம்.பி.வி. கார் பல்வேறு சீட்டிங் அமைப்புகளில் வெவ்வேறு விலையில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் என்ட்ரி லெவல் மாடலில் ஒன்பது பேரும், நடுத்தர மாடலில் எட்டு பேர், டாப் எண்ட் மாடலில் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் வெவ்வேறு விலைகளில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

இதில் ஏழு பேர் அமரக்கூடிய மாடலில் நப்பா லெதரால் ஆன இருக்கைகள், பின்புற இருக்கைகளில் பொழுதுபோக்கிற்கு இரண்டு 10.1 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. டாப் எண்ட் மாடலில் 18 இன்ச் அலாய், டூயஸ் பேன் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
புதிய கார்னிவல் காரில் 200 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையாளர்களிடம் கியா கார்னிவல் காருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் பத்து நகரங்களில் ஏத்தர் லிமிட்டெட் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வெளியிட இருக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் பெயரில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஏத்தர் 450 எக்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவின் பத்து நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
பத்து நகரங்கள் பட்டியலில் பூனே, மும்பை, பெங்களூரு, டெல்லி என்.சி.ஆர்., சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் கோயம்புத்தூர், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 450 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 மாடலில் 2.4kWh, IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பி.எல்.டி.சி. மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இது 7.1 பி.ஹெச்.பி. பவர், 20.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஏத்தர் 450 ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் வரை செல்லும் திறன் அளவுக்கு ஸ்கூட்டரை சார்ஜ் செய்திட முடியும்.
ஏத்தர் 450 மாடலில்: இகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள், 65 கிலோமீட்டர்கள் மற்றும் 55 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வழி செய்கின்றன.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் மோட் மற்றும் ஒ.டி.ஏ. மென்பொருள் அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.






