என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.
      • சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

      களக்காடு:

      நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகள் சுடலைவடிவு என்ற சுதா (வயது34). இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம நல்லூரை சேர்ந்த கிட்டுமணி (39) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆறுமுகவேல் (11) என்ற மகனும், மனிஷா (8) என்ற மகளும் உள்ளனர். கிட்டுமணி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

      இந்நிலையில் சம்பவத்தன்று கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கினர். பின்னர் பார்த்த போது, சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

      இதனால் அதிர்ச்சி அடைந்த கிட்டுமணி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

      • விழாவுக்கு கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார்.
      • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

      வள்ளியூர்:

      தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது.

      விழாவில் கல்லூரியின் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டி. சாந்தி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தொடக்க உரையாற்றினார். முதல்வர் து. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

      நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை தலைவர் எம். மனோகர் நன்றி கூறினார்.

      • அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
      • விழாவில் நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில்:

      தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சங்கரன்கோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, கடற்கரை, சேர்மத்துரை, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், கிறிஸ்டோபர், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • கைலாசகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
      • ஆத்திரம் அடைந்த கைலாசகுமார் வேம்புலதாவை சரமாரியாக வெட்டினார்.

      நெல்லை:

      அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் கைலாசகுமார் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த பகவதி என்பவரது மகள் வேம்புலதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

      சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வேம்புலதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை குடும்பம் நடத்த வருமாறு கைலாசகுமார் அழைக்க சென்றுள்ளார்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கைலாசகுமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேம்புலதாவை முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். அதனை தடுக்க வந்த அவரது தாயார் பகவதிக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

      இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய கைலாசகுமாரை கைது செய்தனர்.

      • மக்கள் நன்மைக்காக, மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
      • திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடினர்.

      புளியங்குடி:

      புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      தொடர்ந்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா பவுர்ணமி பூஜை குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உட்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

      தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்திரகாளியம்மன், மகா காளியம்மன், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

      இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

      • பிரேமலதாவின் சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
      • மருத்துவர்கள் தினவிழாவிற்கு மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை அரசு மருத்து வமனை மற்றும் செங்கோட்டை ரோட்டரி கிளப் இணைந்து செங்கோட்டை அரசு மருத்துவ மனை வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.

      உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ், செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளா் சீதாராமன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கலந்து கொண்டார். தென்காசி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவின் சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னா் அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சீதாராமன், , முன்னாள் செயலா் அபு அண்ணாவி மற்றும் உறுப்பினா்கள் சரவணன், தேன்ராஜ், சீனிவாசன் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார்.

      • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை.
      • குத்தாலிங்கத்தை கார் ஏற்றி கொலை செய்துவிடுவதாக வி.ஏ.ஓ. மிரட்டியதாக தெரிகிறது.

      தென்காசி:

      ஆலங்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குத்தாலிங்கம். விவசாயி. இவர் தனது தந்தையின் பூர்வீக விவசாய நிலத்துக்கான பட்டாவில் தன் பெயரையும், தனது சகோதரர்கள் பெயரையும் சேர்க்க வேண்டி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். மேலும் பட்டா பெறுவதற்காக ஆண்டிபட்டியை சேர்ந்த ஒருவர் மூலம் ரூ.35 ஆயிரம் லஞ்சமாக ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு தரகராக செயல்பட்ட 2 பேருக்கு மொத்தம் ரூ.6 ஆயிரமும் கொடுத்துள்ளார்.

      இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவில் பெயர் சேர்க்கவில்லை. இதுபற்றி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் குத்தாலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி பட்டாவில் பெயர் சேர்க்கவும், அதற்காக வி.ஏ.ஓ. பெற்ற ரூ.35 ஆயிரத்தை குத்தாலிங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

      இதை அறிந்த கிராம நிர்வாக அலுவலர், தன் மீது புகார் செய்த குத்தாலிங்கத்தை கார் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த குத்தாலிங்கம் செய்வதறியாது திகைத்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம், அவரது சக அதிகாரிகள் சமரசம் பேசினர். ஆனாலும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பட்டாவிலும் பெயர் சேர்க்கவில்லை. இதனால் விவசாயி மீண்டும் கலெக்டரை நாட முடிவு செய்துள்ளார்.

      • கூட்டத்திற்கு ம.தி.மு.க. இணையதள அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.
      • சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் மகாலில் விருதுநகர், தென்காசி மண்டல ம.தி.மு.க. இணையதள நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. இணையதள அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். விருதுநகர், தென்காசி மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல்குமார் வரவேற்று பேசினார்.

      ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மணி, தென்காசி மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் பொன். ஆனந்தராஜ், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ் (தென்காசி), ராஜகுரு (தூத்துக்குடி), ராம்விக்னேஷ் (நெல்லை) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் இணையதள பொறுப்பாளர்கள் ஹமீது, அருண்சங்கர், ராகவன், முருகராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போக்குவரத்து கழகம் தன்னிறைவு பெற்று வருகின்றது.
      • கேரளாவில் தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்குவது 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு மேல் ஆகிறது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பணியாளர்கள் ஓய்வறை அமைக்கும் பணி மற்றும் தென்காசி எம்.பி. நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சுத்தப்படுத்தும் எந்திரம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

      தன்னிறைவு பெற்றுள்ளது

      தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உதய கிருஷ்ணன், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

      கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிவை சந்தித்த போக்குவரத்து கழகம் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தன்னிறைவு பெற்று வருகின்றது. மகளிருகான இலவச பஸ் சேவை மூலம் ஏற்படும் இழப்பீட்டிற்கான தொகை கடந்த ஆண்டு ரூ. 1,800 கோடியும், இந்த ஆண்டில் ரூ. 2,800 கோடியும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு முதல்-அமைச்சர் கொடுத்துள்ளார்.

      புதிய பணியிடங்கள்

      இப்போது நமது அண்டை மாநிலமான கேரளாவில் தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்குவது 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் 1-ந் தேதியே முறையாக சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் புதிய ஓட்டுநர், நடத்துனர் நியமிக்கவில்லை. இப்போது முதல்-அமைச்சர் முதல் முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும் புதிய பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.

      இன்னும் சில மாதங்களில் அனைத்து பணிமனைகளிலும் காலியிடங்கள் நிரப்ப முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். போக்குவரத்து துறையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் போக்குவரத்து பணியாளர்களும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன், வணிகத்துறை மேலாளர் சுப்ரமணியன், மேற்கு மேலாளர் சண்முகையா, சங்கரன்கோவில் பணிமனை மேலாளர் குமார், தொ.மு.ச. பொது செயலாளர் தர்மன், மாவட்ட அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மாவட்ட பொருளாளர் முருகன், துணை பொதுச்செயலாளர் விஷ்ணு, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், அந்தோணி ராஜ், பேரூர் செயலாளர் மாரிமுத்து, தொ.மு.ச. சங்கரன்கோவில் கிளை செயலாளர் சங்கர்ராஜ், தலைவர் குருசாமி ராஜ் மற்றும் தொ.மு.ச.வை சார்ந்த செந்தில்குமார், வீரகுமாரன், மாரிசாமி, திருப்பதி, கிறிஸ்டோபர், ஸ்தோவான், செந்தாமரைக்கண்ணன், வெள்ளத்துரை, பிரபு, ராஜாராம், முருகன், தி.மு.க. சார்பு அணி அமைப்பாளர்கள் சந்திரன், அப்பாஸ் அலி, மற்றும் தொண்டரணி முத்துகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், வக்கீல்கள் ஜெயக்குமார் சதீஷ் இளைஞர் அணி சரவணன், முகேஷ் மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், சிவாஜி, ஜெயக்குமார், வீரமணி, ஜான், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • செங்கோட்டை நகராட்சிக்கு நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது.
      • வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகப்படுகிறது.

      செங்கோட்டை:

      செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர், குண்டாறு அணை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கபடுகிறது.

      நீர்வரத்து குறைந்தது

      இந்நிலையில் பருவ மாற்றத்தால் குண்டாறு அணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் செங்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதன் அளவு குறைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் லிட்டர் நீர் தான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

      கடந்த கோடை காலம் முதல் தற்போது வரை வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகப்படுகிறது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது வழங்கப்படும் குடிநீரானது முறையான நேரத்திற்கு வராததால் கடும் அவதி அடைவதாகவும் கூறினர்.

      தண்ணீர் விநியோகம்

      இந்த குடிநீர் தட்டுபாட்டை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 19 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்த தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      இந்நிலையில் தற்போது செங்கோட்டை 3, 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுடரொளி ராமதாஸ், சரஸ்வதி ஆகியோர் தனது சொந்த செலவில் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்தனர். அவர்களது செயலை அப்பகுதி பொது மக்கள் பாராட்டினர்.

      • பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
      • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தலையணை ஆற்றுப்படுகையில் கிணறு அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

      அடிக்கல்

      நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார். சதன் திருமலைக் குமார் எம்.எல்.ஏ., வாசு. யூனியன் சேர்மன் முத்தையா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி வாசன், மாவட்ட துணைச் செய லாளர் மனோகரன், வாசு. யூனியன் வட்டார வள ர்ச்சி அலுவலகர்கள் கணே சன், ரவிச் சந்திரன், துணை சேர்மன் சந்திர மோகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

      கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் குமார், துணைத் தலைவர் பிரதீபன் ஆகியோர் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சந்திர லீலா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெய ராமன், விஜய பாண்டியன், உதவி பொறி யாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், தமிழர் விடுதலை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் சாமி, டி.டி.வி. ஹைடெக் சேம்பர் பிரிக்ஸ் பிரேம்குமார், ஜெய விநாயகா புளு மெட்டல்ஸ் ஸ்ரீகாந்த் பாலாஜி, கவுன்சி லர்கள் கார்த்திகேயன், முருகே சன், வள்ளியம்மாள், மகேஸ்வரி, அப்பாஸ், சிப்பி ராள், ருக்குமணி, பாக்கிய லட்சுமி, ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொ ண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் லதா நன்றி கூறினார்.

      • சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
      • சுற்றுலா பயணிகளும் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

      தென்காசி:

      தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

      இதில் தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்த வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் கோவில் முழுவதும் அலைமோதியதால் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      ×