எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையத்தை  கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். அருகில் ராஜா எம்.எல்.ஏ. உள்ளார்.
எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். அருகில் ராஜா எம்.எல்.ஏ. உள்ளார்.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம்-கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். விழாவில் நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Published on

சங்கரன்கோவில்:

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் இ-சேவை மையம் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி சங்கரன்கோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, கடற்கரை, சேர்மத்துரை, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், மதிமாரிமுத்து, பூசை பாண்டியன், கிறிஸ்டோபர், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி சரவணன், விஜயா சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com