செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினவிழா

பிரேமலதாவின் சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மருத்துவர்கள் தினவிழாவிற்கு மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினவிழா
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு மருத்து வமனை மற்றும் செங்கோட்டை ரோட்டரி கிளப் இணைந்து செங்கோட்டை அரசு மருத்துவ மனை வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.

உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ், செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளா் சீதாராமன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கலந்து கொண்டார். தென்காசி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பிரேமலதாவின் சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னா் அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளா் சீதாராமன், , முன்னாள் செயலா் அபு அண்ணாவி மற்றும் உறுப்பினா்கள் சரவணன், தேன்ராஜ், சீனிவாசன் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com