என் மலர்
- சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- மின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி. பல்பு, கர்சீப் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடித்தபசை முன்னிட்டு சுவாமி சன்னதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சங்கரன்கோவில் நகர்புறம் -1 பிரிவு சார்பில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அதில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மின்சார சிக்கனம், மின்சாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது? மின் சாதனங்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய டிஜிட்டல் வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி. பல்பு, கர்சீப் வழங்கப்பட்டது.
இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர்கள் பால்ராஜ் கணேஷ், ராம ருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர்ப்புற பிரிவு 1 உதவி மின் பொறியாளர் கருப்பசாமி. பணியாளர்கள் பொன்சுப்புராஜ், அரிராஜ், ராமமூர்த்தி, செல்லசாமி, முருகன், பேச்சி முத்து, மோகன்தாஸ், பணியாளர்கள் சுப்பிரமணி, மயில்ராஜன், நாகராஜ், லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
2023-24 நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் (ஓ.பி.சி., இ.பி.சி., டி.என்.டி.) ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ரூ. 1 லட்சம் வரை
9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவி களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இத்தேர்விற்கு வருகிற 10-ந் தேதிக்குள் https://vet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.
இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும்.
இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yct.ntn.ac.in மற்றும் http://socinljustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகள் விளக்கி கூறினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் ஆலோசனையின் பேரிலும் மற்றும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை பற்றி தெளிவாக பொதுமக்களிடம் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ -மாணவிகள் விளக்கி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி செய்திருந்தார்.
- கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்பட மொத்தம் 375 மனுக்கள் பெறப்பட்டது.
- மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
வீட்டுமனை பட்டா
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 375 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது.
இதில் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடை பெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மின்களம் பொருத் தப்பட்ட 4 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம் கருணை அடிப்படையில் 2 பேருக்கு அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, உதவி கமிஷனர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியப்பன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி தலைவா் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் பொன்னுத்துரை, இணைச்செயலாளா் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஹரிஹரநாராயணன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செங்கோட்டை மற்றும் புளியரை, அரசு பள்ளிகளில் பயின்ற 10, 11 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸியில் தன்னை கவுரவ உறுப்பினாக இணைத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் ஷேக்சலீம், மாவட்ட கம்யூனிட்டி சேர்மன் நந்து என்ற அருணாசலம், கிளப் நிர்வாகிகள், உறுப்பினா்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். முடிவில் செயலாளா் கோபிநாத் நன்றி கூறினார்.
- ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி உருவாக்கப்பட்டு 44-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், கார்த்தி, ராஜராஜன், அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன்.
- தென்காசி தாலுகா அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
தென்காசி:
தென்காசி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்னும் விவசாயி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை வழங்கினார்.
அதில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன். பலமுறை தென்காசி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு சென்று கோரிக்கையை தெரிவித்தும் இன்று வரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்காத காரணத்தினால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 18-ந்தேதி தென்காசி தாலுகா அலுவலகத்தில் எனது புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் ஒரு வார காலம் வைத்துக்கொள்ள அனுமதியும், எனக்கு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
அவர் அனுமதி கேட்ட பிளக்ஸ் பேனரில் தென்காசி வட்டம் வடக்கு பாப்பான்குளத்தில் இடத்தை சர்வே செய்வதற்கு அரசுக்கு பணம் செலுத்தி இருந்தேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசு பணியை செய்கின்ற சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன் என்று எழுதி வைக்கப்போவதாக அவர் கூறினார்.
- ராஜேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார்.
- எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோதி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பொடி யனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் ராஜேஷ்குமார்(வயது 20). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவர் நேற்று தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பாவூர் சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டினம் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல அவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோதி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாததே விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் எனவும், நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரிதும் குழப்பம் அடைந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
நேற்று ராஜேஷ் குமார் விபத்தில் இறந்ததற்கும் ராமச்சந்திரபட்டணம் விளக்கு அருகே நான்கு வழிச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவித்து சென்றது தான் காரணம். லோடு ஆட்டோவானது நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் உள்ள சாலையில் சென்றிருந்தால் நேற்றைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன் படுத்தாமல் அலட்சியமாக பணி புரிந்து வரும் நான்கு வழிச்சாலை ஒப்பந்ததாரர்கள் மீதும், அதனை கண்டு கொள்ளாத அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கையெழுத்துப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான போட்டிகளானது புத்தகத்தை மையமாக கொண்டு பல்வேறு போட்டிகளானது நடைபெற்றது.
எல்.கே.ஜி மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்து கருத்தினை கூறுதல், யு.கே.ஜி மாணவர்களுக்கு எழுத்துக்களின் வரிசை என்ற தலைப்பிலும், முதலாம் வகுப்பு மணாவர்களுக்கு ஒரே ஓசையுடைய சொற்கள் என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்திதாளில் உள்ள செய்திகளை சேகரித்தல் என்ற தலைப்பிலும், 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு என்ற தலைப்பிலும், 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டியும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதையை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் புத்தகம் என்ற தலைப்பில் ஆங்கில பேச்சு போட்டியும் நடைபெற்றது. 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் எழுத்தாளர் என்ற தலைப்பில் தமிழ் பேச்சு போட்டியும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நூல் ஆசிரியரின் பெயர்கள் என்ற தலைப்பில் வினாடி-வினாவும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் நமது நண்பர்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.
- வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு பள்ளி சுவர்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை, பஸ் நிலைய சுவர்கள், பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.
இவை வாகனத்தில் செல்வோர்களின் கவனத்தை திசை திரும்பி விபத்துக்கள் உண்டாக காரணமாக அமைந்து விடுகிறது. இதேபோல் நெடுஞ் சாலைகளில் சாலைகளில் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விடுகிறது. எனவே உடனடியாக அரசு இதில் தலையிட்டு கல்விக் கூடங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் அரசு உத்தரவை மீறி போஸ் டர்கள் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யிருந்தார்.
முன்னதாக பொது இடங்களில் போஸ்டர் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதனமான முறையில் அவர் தனது உடலில் போஸ்டர்களை சுற்றி கட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாய் வழி யாக கார் சாகுபடி பணிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளர் மைதீன்கான் தலைமை யில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாலைராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், வெள்ளாளங்குளம் பஞ்சா யத்து தலைவர் மகாராஜன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பாளை கக்கன் நகர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் எனது கணவரும், மகனும் இறந்து விட்டார்கள் தற்போது எனது பேரன் என்னிடம் இருந்த 3 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு சென்று விட்டான். மேலும் அவன் என்னை அடித்து துன்புறுத்துகிறான். எனவே எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.

உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம்.
நெல்லை:
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்ப டுத்தப்பட்டு வீதியில் ஊர்வல மாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
இந்த கொடுமையான சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா அருள், மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மகளிர் தொண்டரணி செயலாளர் அனிதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கிரிஜா, தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மகளிர் அணியினர் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்து எதிர்ப்பு பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் கூறுகையில்,
மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவம். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலுடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் பிரதமர் வாய் திறக்கவில்லை. பெண்கள் மீது மத்திய அரசு மரியாதை வைத்திருந்தால் உடனடியாக மணிப்பூரில் ஆளும் பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புலன் விசாரணை நடத்தி கைதானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜூ, மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாள ருமான கிரகாம்பெல், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, போர்வெல் கணேசன், மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகர் இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், வில்சன்மணித்துரை, ரவீந்தர், உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, விவசாய அணி அமைப்பாளர் அய்யாச்சாமி பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், 31-வது பகுதி சபா உறுப்பினர் சேதுசெல்வம், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் அனு ராதா ரவி முருகன்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, சைபுன் நிஷா, ரேவதி, மாமன்ற உறுப்பினர் பிரபா சங்கரி, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நிர்வாகிகள் வீரபாண்டியன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை தெற்கு மாவட்டம் ராதாபுரம் தெற்கு ஒன்றியம் பா.ஜனதா சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் பொறுப்பு வகித்தார். அரசு தொடர்பு பிரிவு தலைவர் வக்கீல் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 வழங்கிட கோரியும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த கோரியும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், மின்சார கட்டணத்தை குறைத்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சட்டமன்ற பார்வையாளர் சுந்தரம், கிளை தலைவர் சந்திரன், காரியாகுளம் முருகன், கணபதிநகர் தாசன், தவசிகுமார், சுப்பிரமனியபேரி ஈஸ்வரன், சுபாஸ், முருகன், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







