சங்கரன்கோவில் ஆடித்தபசை முன்னிட்டு மின்வாரிய சிறப்பு முகாமில் டிஜிட்டல் வாகனம் மூலம் விழிப்புணர்வு- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி. பல்பு, கர்சீப் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் ஆடித்தபசை முன்னிட்டு மின்வாரிய சிறப்பு முகாமில் டிஜிட்டல் வாகனம் மூலம் விழிப்புணர்வு- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடித்தபசை முன்னிட்டு சுவாமி சன்னதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சங்கரன்கோவில் நகர்புறம் -1 பிரிவு சார்பில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மின்சார சிக்கனம், மின்சாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது? மின் சாதனங்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய டிஜிட்டல் வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி. பல்பு, கர்சீப் வழங்கப்பட்டது.

இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர்கள் பால்ராஜ் கணேஷ், ராம ருஷ்ணன், பாலசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் நகர்ப்புற பிரிவு 1 உதவி மின் பொறியாளர் கருப்பசாமி. பணியாளர்கள் பொன்சுப்புராஜ், அரிராஜ், ராமமூர்த்தி, செல்லசாமி, முருகன், பேச்சி முத்து, மோகன்தாஸ், பணியாளர்கள் சுப்பிரமணி, மயில்ராஜன், நாகராஜ், லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com