search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடத்தை அளந்து தராத சர்வேயரை பாராட்டி பேனர் வைக்க அனுமதி கேட்ட விவசாயி
    X

    சுப்பையா.

    இடத்தை அளந்து தராத சர்வேயரை பாராட்டி பேனர் வைக்க அனுமதி கேட்ட விவசாயி

    • கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன்.
    • தென்காசி தாலுகா அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி தாலுகாவிற்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்னும் விவசாயி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை வழங்கினார்.

    அதில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி எனது நிலத்தை அளப்பதற்காக பணம் செலுத்தினேன். பலமுறை தென்காசி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு சென்று கோரிக்கையை தெரிவித்தும் இன்று வரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்காத காரணத்தினால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 18-ந்தேதி தென்காசி தாலுகா அலுவலகத்தில் எனது புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் ஒரு வார காலம் வைத்துக்கொள்ள அனுமதியும், எனக்கு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    அவர் அனுமதி கேட்ட பிளக்ஸ் பேனரில் தென்காசி வட்டம் வடக்கு பாப்பான்குளத்தில் இடத்தை சர்வே செய்வதற்கு அரசுக்கு பணம் செலுத்தி இருந்தேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அரசு பணியை செய்கின்ற சர்வேயர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன் என்று எழுதி வைக்கப்போவதாக அவர் கூறினார்.

    Next Story
    ×