search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தக திறனறி போட்டிகள்
    X

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் புத்தக திறனறி போட்டிகள்

    • 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, கையெழுத்துப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான போட்டிகளானது புத்தகத்தை மையமாக கொண்டு பல்வேறு போட்டிகளானது நடைபெற்றது.

    எல்.கே.ஜி மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்து கருத்தினை கூறுதல், யு.கே.ஜி மாணவர்களுக்கு எழுத்துக்களின் வரிசை என்ற தலைப்பிலும், முதலாம் வகுப்பு மணாவர்களுக்கு ஒரே ஓசையுடைய சொற்கள் என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்திதாளில் உள்ள செய்திகளை சேகரித்தல் என்ற தலைப்பிலும், 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு என்ற தலைப்பிலும், 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையெழுத்து போட்டியும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கதையை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் புத்தகம் என்ற தலைப்பில் ஆங்கில பேச்சு போட்டியும் நடைபெற்றது. 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் எழுத்தாளர் என்ற தலைப்பில் தமிழ் பேச்சு போட்டியும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் நூல் ஆசிரியரின் பெயர்கள் என்ற தலைப்பில் வினாடி-வினாவும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் நமது நண்பர்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×