என் மலர்
- முத்துக்குமாருக்கு திருமணம் முடிப்பதற்காக அவரது தந்தை பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
- விரக்தியில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் உள்ள ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் இறந்து 20 ஆண்டுகளுக்கு மேலானதால் முத்துக்குமார் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியதாகவும், அவருக்கு திருமணம் முடிப்பதற்காக அவரது தந்தை பெண் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருந்த முத்துக்குமார், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டி பேசினார்.
- விழாவில் புளியரை ஊராட்சி தலைவர் அழகிய சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
காந்தியடிகளின் கனவின்படி அடிப் படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தை தத்தெடுத்து கிராம பணி களை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி பொது நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகையில், அடிப்படை வசதி இல்லாத குக்கிராமமான செங்கோட்டை அருகே உள்ள புளியரை அடுத்து இருக்கும் மடத்தரை பாறையில் கிராம மக்கள் பொதுநூலகம் வேண்டு என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொது நூலகம் ஒன்று அகில இந்திய காந்திய இயக்கம் கட்டிக் கொடுத்துள்ளது. அதன் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடந்தது என்றார்.
விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பொது நூலகத்தை திறந்து வைத்து மகாத்மா காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். தலைமையேற்ற அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன் பேசும்போது, எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும் மற்றும் காந்தி அன்பர்கள் உதவியு டனும், மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணி களை மேற்கொள்ளப்போ வதாக கூறினார். விழாவில் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய சிற்றம்பலம், காந்தியவாதிகள் ராம் மோகன், முத்துசாமி, விஜய லட்சுமி, திருமாறன், அன்பு சிவன், நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.
- கோவிலில் புகுந்த மர்ம நபர் கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
- திருட்டில் ஈடுபட்டது அருணாசலம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் சூரி முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் கேட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அங்கு இருந்த சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கி சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து கோவில் பூசாரி சென்று பார்த்தபோது அங்கு உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சுரண்ைட போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை தூக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஊரில் வடக்கு தெருவில் வசிக்கும் அருணாசலம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து உண்டியலை பறிமுதல் செய்தனர்.
- ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.
- இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் பழந்தின்னி வவ்லால்களும் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி தாமிரபரணி ஆற்றுக்கரை பகுதியில் பழந்தின்னி வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.
மேலும், சோனகன்விளை, சாத்தான்குளம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த வவ்வால்கள் காணப்படுகின்றன. இந்த வவ்வால்கள் உயரமான மருதமரங்களில் வசித்து வருகின்றன.
இந்த வவ்வால்கள் அனைத்தும் பகல் முழுவதும் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு கிடக்கும். இரவு நேரங்களில் இங்கிருந்து உணவுக்காக அருகில் இருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்லும்.
இந்த பகுதியில் உள்ள வவ்வால்கள் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து இலங்கை அவுனியா காடுகளுக்கு சென்று இரைதேடி விட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்துவிடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பாலுட்டி இனத்தை சேர்ந்த இந்த அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. தற்போது மீதமிருக்கும் பழந்தின்னி வல்லால்களும் மின் கம்பிகளில் சிக்கி பலியாகி வருகின்றன. அண்மை காலமாக இந்த பகுதியில் மின் கம்பியில் சிக்கி உயிரிழக்கும் பழந்தின்னி வவ்லால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மட்டும் புதுக்குடி, சாத்தான்குளம், சோனகன்விளை பகுதியில் பல வவ்வால்கள் மின் கம்பிகளில் இறந்த நிலையில் தொங்குவதை காண முடிகிறது. இது இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.
இது குறித்து சிவகளை காடுபோதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று இந்த பழந்தின்னி வவ்வால்கள். சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, உயிரின பெருக்கம் போன்றவற்றில் இந்த வவ்வால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
அண்மை காலமாக இந்த வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றன. தற்போது ஆடி மாத காற்று மிகவும் வேகமாக வீசி வருவதால் இரவில் இரைதேடி சென்றுவிட்டு அதிகாலையில் திரும்பி வரும் வவ்வால்கள் மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. மெல்லிய இறகுகளை கொண்டதாக இருப்பதால் வவ்வால்கள் எளிதாக மின் கம்பியில் சிக்கி கொள்கின்றன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை விட, இரு கம்பிகளுக்கு இடையே இறக்கை சிக்கி உயிரிழக்கும் வவ்வால்களே அதிகமாக உள்ளன.
மேலும், இறந்த வவ்வால்கள் மின் கம்பியில் அப்படியே தொங்கிக் கொண்டிருப்பதால், அதனை காணும் மற்ற வவ்வால்களும் அந்த பகுதிக்கு வந்து உயிரை விடுகின்றன. தினமும் பல வவ்வால்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்து தொங்குவதை ஆங்காங்கே காண முடிகிறது. இந்த அரிய வகை வவ்வால்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் பகுதியில் காணப்படும் மின் கம்பிகளில் பிவிசி குழாய்களை மாட்டிவிட வேண்டும். அதன் மூலம் வவ்வால்கள் கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கலாம். மேலும், இறந்து தொங்கும் வவ்வால்களை உடனுக்குடன் அகற்றினால் மற்ற வவ்வால்கள் அந்த பகுதிக்கு வந்து உயிரிழப்பதை தடுக்க முடியும்.
பழமையான மரங்கள் பல தீவிபத்தில் அழிந்து வருவதால் வவ்வால்களுக்கு இருப்பிடம் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தீவிபத்துக்களில் மருதமரங்கள் அழிவதை தடுக்க வேண்டும். மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைத்தது போல, ஸ்ரீவைகுண்டம் பகுதியை பழந்தின்னி வவ்வால்கள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- முகாமிற்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் பனவடலிசத்திரத்தில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், துணை அமைப்பாளர்கள் சரவணன், ராயல்கார்த்தி, ராஜ், ராஜராஜன், மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் பரமையா, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், தங்கதுரை
ஒன்றிய பொருளாளர் முத்துப்பாண்டியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், ஆதி திராவிடர் அணி ராஜ் என்ற கருப்பசாமி, தொண்டரணி கிருஷ்ணசாமி, கிளை செயலாளர்கள் காசிப்பாண்டியன், முருகன், மூக்கையாப்பாண்டியன், பரமையா, முத்துராமலிங்கம், துரை, நவமணி பாபு, அந்தோணி, பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அழகியநம்பி, ராஜதுரை, சிவா, கோட்டப்பாண்டி, சிங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் பட்டா நிலத்தில் கட்டிடத்தை இடித்து அகற்றிய மண் கொட்டப்பட்டுள்ளது.
- மண் கொட்டப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
தென்காசி:
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுபூலாங்குளம் கிராமத்தில் நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலின் முன்பாக தனியார் பட்டா நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய கட்டிடத்தை இடித்து இரவில் எவ்வித அனுமதியும் பெறாமல் அகற்றிய மண் அனைத்தையும் டிராக்டர் மூலம் கொட்டி வைத்துள்ளார். முருகன் கோவிலின் வாயிலில் கொட்டியுள்ளதால் கோவிலுக்கும் வரும் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதி இன்றி கொட்டப்பட்ட மண்ணை உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட பூலாங்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
- போட்டியில் மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தை பிடித்தார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் 2-வது தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தில் 19 சட்டக்கல்லூரிகள் மற்றும் மற்ற மாநிலத்தில் இருந்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 13 சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து 141 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியில் ஆந்திர மாநில கே.எல். நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவி கிருஷ்ண நிகிதா முதலிடத்தையும், தமிழக சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவி அநன்யா ஸ்ரீ 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
முதல் பரிசு பெற்ற மாணவி கிருஷ்ண நிகிதாவிற்கு ரொக்க பரிசு 10 ஆயிரத்தையும், 2-ம் பரிசு பெற்ற மாணவி அநன்யா ஸ்ரீக்கு ரொக்க பரிசாக 5 ஆயிரத்தையும் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வழங்கினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
- இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளாளங் குளத்தில் நடைபெற்றது.
- முகாமில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளாளங் குளத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ், ராயல் கார்த்தி, மணிகண்டன், ராஜராஜன், அன்சாரி மற்றும் இளைஞர் அணி ஜலால், யாசர், அருண்குமார், சந்தோஷ், இளங்குமரன், ஆஷிக் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சுதாரித்து கொண்ட பெண்கள் திருட முயன்ற நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- மணிகண்டன் தொடர்ந்து 'பிக்பாக்கெட்' அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளார்.
தென்காசி:
தென்காசி பழைய பஸ் நிலையத்தில் பெண்கள் நின்ற பகுதிக்கு சென்ற ஒருவர் திடீரென ஒரு பெண்ணிடம் இருந்து 'பிக்பாக்கெட்' அடிக்க முயன்றுள்ளார். அப்போது அதனை கண்டு சுதாரித்து கொண்ட பெண்கள் கையும் களவுமாக திருட முயன்ற நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் தொடர்ந்து 'பிக்பாக்கெட்' அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த தென்காசி போலீசார் அவரை கைது செய்தனர்.
- சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழிப்புணர்வு பிரசாரத்தின்போது கரகாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிவகிரி:
மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு அடிபணியோம் குடிப்பழக்கத்தை விட்டொழிப்போம் போன்ற கோட்பாடுகளை வலியுறுத்தி போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தென்காசியில் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பிரசாரம்
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாட்களாக நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு தென்காசி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பாக மது என்கிற அரக்கனை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தொடக்கி வைத்தார். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம உதவியாளர் அழகுராஜா, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள்
தொடர்ந்து மதுவிலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரகாட்டம், குச்சி, மரக்கால் ஆட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சியும், போதை போன்றவற்றை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் விளக்கம் அளித்து கலைநிகழ்ச்சிகள் சிவகிரி அருகே ராயகிரி பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் துவக்கி வைத்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துச்செல்வம், கிராம உதவியாளர் மலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
- பணிகளை தொடங்கி வைத்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீ ட்டில் கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரக்கு மார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியா் ஜோதிலெட்சுமி, தேசிய மாணவர் படை அலுவலா் அருள்தாஸ், நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் செல்வி ஆகியோர் முன்னி லை வகித்தனா். தமிழா சிரியா் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை தொடங்கி வைத்து கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். பின்னா் பள்ளி மாணவர்களை கொண்டே புதிய வகுப்பறை கட்டிட த்திற்கான செங்கல்களை எடுத்து வைக்கும்படி கூறினார். இதனை எதிர் பார்க்காத மாணவர்கள் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளிக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் முத்துக் குமார், குமார், மாவட்ட துணைச் செய லாளா் பொய்கை மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், வார்டு பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.
- மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார்.
- விழாவில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றிய வெங்காடம்பட்டி ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பூங்காவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொருள்செல்வி, சரஸ்வதி, தமிழ்செல்வி, விஜயா அம்பிகா, குருசாமி, நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வை யாளர் கார்த்திகேயன், திடக்கழிவு மேலாண்மையின் ஒருங் கிணைப்பாளர் நாகராஜன், மக்கள் நல பணியாளர் மயிலரசன், அரசு ஒப்பந்ததாரர் குமார், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.







