தென்காசியில் 'பிக்பாக்கெட்' திருடனை மடக்கி பிடித்த பெண்கள்

சுதாரித்து கொண்ட பெண்கள் திருட முயன்ற நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மணிகண்டன் தொடர்ந்து 'பிக்பாக்கெட்' அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளார்.
மணிகண்டன்
மணிகண்டன்
Published on

தென்காசி:

தென்காசி பழைய பஸ் நிலையத்தில் பெண்கள் நின்ற பகுதிக்கு சென்ற ஒருவர் திடீரென ஒரு பெண்ணிடம் இருந்து 'பிக்பாக்கெட்' அடிக்க முயன்றுள்ளார். அப்போது அதனை கண்டு சுதாரித்து கொண்ட பெண்கள் கையும் களவுமாக திருட முயன்ற நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் தொடர்ந்து 'பிக்பாக்கெட்' அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த தென்காசி போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com