என் மலர்
- தென்காசி மாவட்டத்தில் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
- பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது.
தென்காசி:
தென்காசி எம்.எல்.ஏ.பழனி நாடார் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் அதை நம்பி இருந்த ஆறு, குளங்களும் வறண்டு காணப்படுகின்றது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க இரட்டைக்குளம், ஊத்துமலை உள்ளிட்ட ஏனைய கால்வாய்கள் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
- தேவிபட்டணம் ஊராட்சி தலைவர் ராமராஜ், கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.
- ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் யூனியன் தேவிபட்டணம் ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ராமராஜ் இருந்து வருகிறார். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நான் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுவிட்டேன். அந்த சமயத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த நபர், காழ்புணர்ச்சியோடு தொடர்ச்சியாக என் மீது சாதிய தீண்டாமை செய்து வருகிறார். நான் படித்து வக்கீலாக உள்ளேன். எனக்கு இந்த நிகழ்வுகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
மேலும் ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நான் மறுக்கவே, எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். ஏற்கனவே என்னை அவர் சாதியை சொல்லி திட்டியதாக நான் சிவகிரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை சில காரணங்களால் வாபஸ் பெற்றேன். தற்போது மீண்டும் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தை நாடுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது தேவி பட்டணம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாடசாமி, வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.
- முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
- httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி ,என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இம்முகாமில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையான அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்க ணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திற னாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
தனியார் நிறுவனங்க ளில் பணியமர்த்த ப்பட்டாலோ அல்லது வேலைவா ய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலை வாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. நெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என்பதால் httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் தங்களது சுயவிபரங்க ளை பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருக்கும் வேலையளி ப்போர்கள் விபரம் அறிய hts/www.decctenkasi.com.mega jobfain:202 என்ற google link-ஐ பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.
- நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்கினார்.
- ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து பேசினார்.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்க, மாணவி ஸ்வேதா அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியை ஜோஸ்பின் சினேகா மற்றும் மாணவர் அத்வைத் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரக்சனா வரவேற்று பேசினார்.
ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்தும், மாணவர் அத்வைத் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் மலையாளத்தில் பேசினர். மாணவி காளிபிரியா ஓணம் குறித்த சிறப்பு பாடலுக்கு நடனமாடினார். மழலையர் பிரிவு மாணவர்கள் ஓணம் பண்டிகையினை உணர்த்தும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து அணிவகுத்து நின்றனர்.
நிகழ்ச்சியில் வாமன அவதாரம் தோன்றிய வரலாறு மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கான காரணத்தை காட்சிப்படுத்தினர். இதில் மாணவன் பாலசேஷன் வாமனன் போலவும், சரவணராஜா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி போலவும் வேடமணிந்து பாடல் பாடியும், நடித்தும் காட்டினர். மாணவன் அதீப் வாமன அவதார காட்சியை பற்றி விவரித்து கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மஞ்சுளா, ரகுமாள் ஜீனுபியா, ஜோஸ்பின் சினேகா, சாஜாதீசாபிரா, பிலோமினா ஜான்சி ஆகியோர் குழுவாக இணைந்து மலரினை வைத்து அத்தப்பூ கோலமிட்டனர்.
ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
- 10 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
அதை்தொடர்ந்து மாற்றுத்தி றனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராய ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் மகேந்திரன் ஸ்மித் வெற்றி பெற்றார்.
- கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.
செங்கோட்டை:
கடையநல்லூர் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன் ஸ்மித். இவர் கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற மகேந்திரன் ஸ்மித் தகுதி பெற்றார்.
இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிக்கு செல்ல தேவையான செலவிற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர், யோகா பயிற்சி ஆசிரியா் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சரண் வேலை பார்த்து வந்தார்.
- ராட்சத பள்ளங்களில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் வசித்து வருபவர் தேவதாஸ். இவரது மகன் சரண்(வயது 20). இவர் ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
தவறி விழுந்து பலி
நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த சரண், மீண்டும் மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஆலங்குளம் ஊர்மடை பகுதியில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் சரண் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சரண் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் பஜார் பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர். ஆலங்குளத்திற்கு மேல்புறம் மலைக்கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைப்பணி முடிவடைந்து விட்ட நிலையில் ஊர்மடை பகுதியில் இருந்து தொட்டி யான்குளம் வரையிலான சாலை அப்படியே கிடக்கிறது.
இந்த சாலையில் ராட்சத பள்ளங்கள் உள்ளது. அதில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. தினமும் அந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சாலையின் இருபுறமும் கடை வைத்திருப்பவர்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைகின்றனர் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாடு பேரணியுடன் தொடங்கியது.
- பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.
தென்காசி:
தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 11-வது மாநில மாநாடு தென்காசி அருகே உள்ள சக்தி நகரில் இருந்து பேரணியுடன் தொடங்கியது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பேரணியில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவருமான சவுந்தரராஜன், சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் பாப்பூ, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர்கள் மகாலட்சுமி, செண்பகம், வரவேற்பு குழு தலைவர் முன்னாள் பேராசிரியர் சங்கரி, சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, ஆரியமுல்லை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் தர்மராஜ் மற்றும் மாநில சம்மேளன உறுப்பினர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கல்லூத்து ஏ.டி.காலனியில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
- பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து ஏ.டி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பஞ்சாயத்து தலைவர் ஆ.செல்லப்பா, துணைத்தலைவர் ஒளிவுலெட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25 -ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
- நகராட்சி மேற்கு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள 8 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 25 -ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நகராட்சி மேற்கு நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, பாட்டத்தூர் ராமலிங்கம், ஆசிரியை முத்துமாரி, ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பாத யாத்திரையின் இரண்டாவது கட்ட நடைபயணம் வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்குகிறது.
- தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக விஸ்வை ஆனந்தன் நியமனம் செய்யப்படுகிறார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி:
தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் 2-ம் கட்ட நடைபயணம் வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் பாதயாத்திரை குழுவின் பொறுப்பாளரும் மாநில துணைத்தலைவருமான நரேந்திரன், பாதயாத்திரை குழுவின் இணை பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவருமான அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள னர்.
அதில், தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தலைமையில் நடந்து வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இரண்டாவது கட்ட நடைபயணம் வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்குகிறது. இப்பயணத்தின் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் விஸ்வை ஆனந்தன் நியமனம் செய்யப்படுகிறார். அவருடன் கட்சியினர் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி திருமலாபுரம் பகுதி மக்கள் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதிய பைப் லைன் அமைப்பதற்காக 530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனவடலிசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது திருமலாபுரம் கிராமம். இங்கு கடந்த ஒரு மாத காலமாக ஊருக்குள் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜா எம்.எல்.ஏ.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, பொதுமக்களிடம் நமது பகுதியில் 2006-ம் ஆண்டுக்கு முன்பாக போடப்பட்ட பைப் லைன்கள் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினாலும் புதிய பைப் லைன் போடுவதற்கு வேண்டியும் தமிழக முதல்-அமைச்சரிடம் இரண்டு முறை நேரில் மனு கொடுத்துதுள்ளேன். மானூர் மேலநீலிதநல்லூர் குருவிகுளம் புளியங்குடி பகுதிகளில் புதிய பைப் லைன் அமைப்பதற்காக 530 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய பைப் லைன்
புதிய பைப் லைன் ஆரம்பித்த பின்பு இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஏற்கனவே உள்ள குடிநீர் பைப் லைனில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த ராஜா எம்எல்ஏ போராட்டம் நடந்த மறுநாள் காலையிலேயே திருமலாபுரம் பொதுமக்கள் வைத்த கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்த்து திருமலாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்படி செய்தார்.
அதுமட்டுமல்ல தண்ணீர் மாசு படிந்ததாக வருகின்றது என மீண்டும் மக்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் அதிகாரிகளிடம் பேசி சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.







