என் மலர்
வேலூர்
- மேய்ச்சலுக்காக கட்டி வைத்தபோது விபரீதம்
- தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனக்கு சொந்தமாக பசு மற்றும் கன்றுகுட்டியை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை கட்டி வைத்தார்.
திடீரென கன்று மாயமானது. பின்னர் அருகே இருந்த 70 அடி ஆழமுடைய கிணற்றில் சத்தம் வந்தது. அருகில் சென்று பார்த்த போது கன்று நீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது
வேலூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.
இதில் தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர்.
காலை 6 மணியளவில் அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
முதல் நாளான இன்று உயரம், மர்பளவு, 1500 ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு நாளை கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
மேலும் வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.
- காட்பாடியில் 2 பேர் கைது
- போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினர்
வேலூர்:
ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.
அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது.
லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்ட லங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளை நடக்கிறது
- செல்போனுக்கு தடை - ஆடை கட்டுப்பாடு
வேலூர்:
தமிழகத்தில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உட்பட 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 513 நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளையும், நாளை மறுநாளும் (8-ந் தேதி) நடக்க உள்ளது. இதற்காக, அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் நடக்கும் உடற்தகுதி தேர்வில் நாளை உயரம், மார்பளவு மற்றும் 1,500 மீ ஓட்டம் ஆகியவையும், 8-ந் தேதி உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், கையிறு. ஏறுதல், 100 மற்றும் 400மீ. ஓட்டம் ஆகியவை நடக்கிறது.
வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடிப்படை ஐ.ஜி முருகன் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும் நபர் கள் செல்போன் எடுத்து வரவும், ஒரே மாதிரியான உடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற் தகுதி தேர்வு நடக்கும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
தேர்வு மையத்துக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படு வார்கள். வெளிநபர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இவர் அவர்கள் தெரிவித்தனர்.
- எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்றுள்ளது
- 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாலப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அழகுராஜா, அழகு ராணி, ஓம் சக்தி, என்ற பெயரில் 3 மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த மாடுகள் வேலூர், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.
இதில் பெருமாள் வளர்த்து வரும் அழகு ராணி என்ற மாட்டிற்கு 3-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.
இதனையொட்டி பெருமாள் 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் நடுவே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
பின்னர் மாடுகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுகளுக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
- இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா பகுதியில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது இன்று அதிகாலை குடியாத்தம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்றார்.
அப்போது புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து குணசேகரன் மீது விழுந்தது. இதில் பைக்குடன் குணசேகரன் புளிய மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடி வந்து, குணசேகரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து புளிய மரத்தை அப்புறப்படுத்தினர்.
இதனால் குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தெற்கு ெரயில்வே அறிக்கை
- காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்
வேலூர்:
பராமரிப்புப் பணி காரணமாக விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில் இன்று முதல் நவ.12-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
மறு மார்க்கமாக இந்த ரெயில் (எண்: 16853) வழக்கமாக திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.
10-ந் தேதி ராமேஸ்வரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 16733) ஜோலார்பேட்டை, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
10-ந் தேதி மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 09519) காட்பாடி, பகலா, தர்மா வரம், கூடி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
- பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கே.வி.குப்பம் அடுத்த மகமது புரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், முரளி, உத்திரகுமார்.
இவர்களது 3 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் திடீரென தயாராக கொண்டு வந்த மண் எண்ணெய் உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கிராம குளத்திற்கும் எங்களது நிலத்திற்கு செல்ல பொது வழி உள்ளது. பொது வழியை முருகம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி உள்ளார். விவசாய நிலத்திற்கு செல்லும் போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்க முயற்சி செய்கிறார்.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
- 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.
அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகிக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன.
அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் அவதி
- அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.
மாலை 4 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதன்பிறகு விடியும் வரை சீராக மழை பெய்தது.
வேலூரில் நேற்று மாலை பெய்த மழையால் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
கிரீன் சர்க்கிள் பகுதியில் நாலாபுறமும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
மழைநீரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிரீன் சர்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. சிறிய மழைக்கே வேலூரில் ஆங்காங்கே மழை தேங்கி விடுகிறது.
தொடர் பருவ மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் அவதி அடைவது வாடிக்கையாகிவிட்டது. எனவே சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டில் அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் வேலூரில் 39, காட்பாடியில் 62, மேல் ஆலத்தூரில் 41.10, கே.வி. குப்பத்தில் 48.20, குடியாத்தத்தில் 85, ஒடுகத்தூரில் 73 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
- மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு
வேலூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வேலூர் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்க பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் வேலூர் அண்ணா சாலை, பி.எஸ்.எஸ். கோவில் தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஜவுளி கடைகளில் பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை, வேஷ்டி, துண்டு, டவல், பனியன் உள்ளிட்ட வைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மார்க்கெட்டில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
வேலூர் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது.
- பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்
- போலீசார் வழக்கு பதிவு விசாரணை
வேலூர்:
வேலூர், கஸ்பா ஆர்.என். பாளையத்தை சேர்ந்தவர் சதாம்பாஷா ( வயது 32), டிரைவர். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக சதாம்பாஷா ஓட்டிச் சென்ற மொபட் மீது திடீரென மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சதாம்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சதாம்பாஷா பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






