என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக்கில் சென்றவர் மீது வேரோடு சாய்ந்த புளியமரம்
- 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
- இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா பகுதியில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. அப்போது இன்று அதிகாலை குடியாத்தம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்றார்.
அப்போது புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து குணசேகரன் மீது விழுந்தது. இதில் பைக்குடன் குணசேகரன் புளிய மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடி வந்து, குணசேகரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து புளிய மரத்தை அப்புறப்படுத்தினர்.
இதனால் குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






