search icon
என் மலர்tooltip icon
    • ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.
    • கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம்.

    சென்னை:

    2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

    * நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்னை கட்சிக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.

    * ராகுல் காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார்.

    * நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன்.

    * காவல் துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

    * கட்சி ரீதியாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என்று கூறினார்.

    இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லை விரைகிறார்.

    • 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது.
    • 3-ம் கட்ட தேர்தலுக்கான 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

    இதையடுத்து 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. 19-ந்தேதி மனுதாக்கல் நிறைவு பெற்றது.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

    3-ம் கட்ட தேர்தலுக்கான 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 94 தொகுதிகளிலும் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய தொடங்கி உள்ளனர். நாளை மறுநாள் 94 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளுக்கு அனைத்து பொருட்களும் கொண்டு சென்று தயார் நிலையில் வைக்கப்படும்.

    7-ந்தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

    இந்த நிலையில் 94 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் அதிகளவில் முற்றுகையிட்டுள்ளனர்.

     

    மத்திய மந்திரி அமித்ஷா இன்றும் நாளையும் குஜராத்தில் தங்கியிருந்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குஜராத்தில் இன்றும் நாளையும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி ஏற்கனவே 94 தொகுதிகளில் ஆதரவு திரட்டி விட்டார். தற்போது 2-வது கட்டமாக சில நகரங்களில் இன்றும் நாளையும் பிரசாரம் செய்கிறார். இன்று (சனிக்கிழமை) அவர் ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்றும் நாளையும் 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு சென்று இறுதி கட்ட ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

     

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் தங்கியிருந்து தீவிர ஆதரவு திரட்டி வருகிறார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.

    மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வருகிற 7-ந்தேதி 2-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 14 தொகுதிகளிலும் கார்கே தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    கர்நாடகா அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி.க்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான செக்ஸ் புகார்கள் காரணமாக 14 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் ஜெயக்குமார் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.
    • காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இதையடுத்து காணாமல் போன ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவரது அறையில் கடிதங்கள் எதுவும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளாரா என்று போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு டைரியில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் குறித்த விபரத்தையும், யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் அவர் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் கையோடு எடுத்துச்சென்றுள்ளனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜெயக்குமார் தனசிங், கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு மரண வாக்குமூலம் என்ற பெயரில் தனது காங்கிரஸ் கட்சி லெட்டர் பேடில் ஒரு புகார் மனு கைப்பட எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என்று கூறி சிலரது பெயரை குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த நபர்கள் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டும் எனவும், அவர்கள் ஏமாற்றியதன் காரணமாக, வெளியில் கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் திணறி வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரை எல்லாம் குறிப்பிட்டுள்ளாரோ? அந்த நபர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    மேலும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
    • ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது60). தொழில் அதிபரான இவர் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்.

    இவர் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28).

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தங்களது உறவினர்கள் வீடுகளிலும், அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து நேற்று மாலையில் காணாமல் போன ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
    • எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.

    ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு பழமையான உடைந்த மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    இந்த மண்டை ஓடு 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் (மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயர்) என்று பெயரிடப்பட்டது.

    இந்த நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.

    அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர். பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள்நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வுக்கான வழிமுறைகளை மாணவ-மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
    • தேர்வு கூடத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், கரூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட 31 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

    இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடை பெறுகிறது. தேர்வு கூடத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீட் தேர்வுக்கான வழிமுறைகளை மாணவ-மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆடை கட்டுப்பாடுகள், முடி, ஷூ, பெல்ட் அணிதல் போன்றவை வழக்கம் போல் பின்பற்றப்படுகிறது.

    தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    பதட்டம் இல்லாமல் இருக்க முன் கூட்டியே வரவும் தேர்வு அனுமதி சீட்டுடன் புகைப்படம் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை வெயில் வறுத்து எடுத்து வரும் வேளையில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதும் நகரங்களில் தேர்வர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உறவினர்கள் மையங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் எனவும் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வு கூடங்களில் ஒழுங்கீனங்கள் தவறுகள் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை.
    • தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் அதிகமானதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது.

    அரசு பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ந் தேதியுடன் மூடப்பட்டன. வெயிலில் சிறுவர்கள் செல்லாமல் வீடுகளுக்குள் இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    சென்னை உள்பட பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்து எடுப்பதால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

    ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தன.

    100 சதவீதம் தேர்ச்சி, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகளை வெப்ப அலை வீசி வரும் இந்த நேரத்தில் பள்ளிக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதை பெற்றோர்களும் விரும்பவில்லை. ஆனாலும் பள்ளி நிர்வாகத்தின் கட்டாயத்தின்படி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

    தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது.
    • அடுத்த மாதம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும்.

    சென்னை:

    பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை நேற்று திடீரென்று தடைபட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

    தனியார் செல்போன் நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. 4ஜி சேவையையே வழங்கி நீண்ட நாள் ஆகி விட்டது.

    நிதிப்பற்றாக்குறை, ஆள்பற்றாகுறை உள்பட பல்வேறு காரணங்களால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழகத்தில் தரம் உயர்த்து வதை தாமதப்படுத்தியதாக வும் தற்போது 4ஜி அலை வரிசையை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் அடுத்த மாதம் (ஜூன்) சென்னை வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.

    மின்வெட்டு காரணமாக தடை ஏற்பட்டதாகவும் நெட்வொர்க்கை சீரமைக்க கணினியை மறுதொடக்கம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று பிற்பகலுக்குள் நிலைமை சீரடையும் என் றும் தெரிவித்தனர்.

    • இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கனடா நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருவதாக கனடா தெரிவித்தது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஹிட் ஸ்குவாட் (தாக்குதல் குழு) உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கரன் ப்ரார், கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங் ஆகிய இந்தியர்கள் என்றும், சில மாதங்களுக்கு முன்பு சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டதாகவும், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிட் டெபூல் கூறும்போது, நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது. கொலை வழக்கு மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் தனித்தனியான விசாரணைகள் நடந்து வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களின் ஈடுபாடு மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகளை விசாரிப்பதும் அடங்கும் என்றார்.

    கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது தலா ஒரு முதல் நிலை கொலை மற்றும் நிஜ்ஜாரின் கொலைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
    • மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும்.

    தெக்ரான்:

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.

    இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் கூறுகையில், "இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்" என்றார்.

    ×