search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.
    • அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    நான்கு கரங்கள் உடையவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலையும், தண்டமும், தாங்கியவர்.

    இவருடைய வெள்ளித் தேரில் எட்டு குதிரைகள் பூட்டப்பெற்றுள்ளன.

    பத்து குதிரைகள் தேரை இழுப்பதாகவும் சில நூல்கள் கூறுகின்றன.

    இவர் மீன ராசியில் உச்சமடைகிறார்.

    ரிஷபம், துலாம் இவரது ஆட்சி வீடு.

    பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி.

    தசை புத்திகளில் இவருக்குத்தான் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் உள்ளது.

    ஆங்கில எண்ணில் 6க்கு அதிபதி 6, 15, 24ந் தேதியில் பிறந்தவர்களுக்கு இவரே அதிபதி.

    சுக்கிரன் 'வெள்ளி' என்றும் குறிப்பிடப் படுகிறது.

    அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.

    அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    மேற்கில் சிறிதுதூரம் சென்று பின்னர் கிழக்கில் பயணிப்பதும் சிலர் வழக்கம்.

    கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூரில் சுக்கிர பகவானுக்குரிய திருத்தலம் அமைந்துள்ளது. 

    ஓம் சுக்ராய நம!

    ஓம் ஸுசயே நம!

    ஓம் ஸுபகுணாய நம!

    ஓம் ஸுபலக்ஷணாய நம!

    ஓம் ஸோபநாக்ஷலீய நம!

    ஓம் காமபாலாய நம!

    ஓம் கவயே நம!

    ஓம் கல்யாண தாயகாய நம!

    ஓம் பத்ரமூர்த்தயே நம!

    ஓம் பரத்குணாய நம!

    ஓம் பார்க்கவாய நம!

    ஓம் பக்தபாலகாய நம!

    ஓம் போகதாய நம!

    ஓம் புவநாத்யக்ஷலீய நம!

    ஓம் புக்தி முக்திபலப்ரதாய நம!

    ஓம் சாருஸீலாய நம!

    ஓம் சாருரூபாய நம!

    ஓம் சாருசந்த்ரநிபாஸாய நம!

    ஓம் நிதயே நம!

    ஓம் நீகிலஸாஸ்த்ரக்ஞாய நம!

    ஓம் நீதிவித்யாதுரந்தராய நம!

    ஓம் ஸர்வலக்ஷணஸ்ப்பந்நாய நம!

    ஓம் ஸர்வார்த்தகுணவர்ஜிதாய நம!

    ஓம் ஸமாநாதிகநிர்முக்த்தாய நம!

    ஓம் ஸகலாகமபாரகாய நம!

    ஓம் ப்ருகுவே நம!

    ஓம் போகராய நம!

    ஓம் பூமஸுரபாலநதத்பராய நம!

    ஓம் ஸுப்ரரூபாய நம!

    ஓம் சுத்தஸ்படிகபாஸ்வராய நம!

    ஓம் தீநார் திஹாரகாய நம!

    ஓம் தைத்யகுருவே நம!

    ஓம் தேவாபிநந்திதாய நம!

    ஓம் காவ்யாஸக்தாய நம!

    ஓம் பவிபந்தவிமோசகாய நம!

    ஓம் கநாத்யாய நம!

    ஓம் கநாத்யக்ஷலீய நம!

    ஓம் கமபுக்ரீவாய நம!

    ஓம் காளாதராய நம!

    ஓம் ககருண்யரஸஸம்பூரணா நம!

    ஓம் கல்யாணகுணவர்தநாய நம!

    ஓம் ஸ்வேதாம்பராய நம!

    ஓம் ஸ்வேதவபுஷே நம!

    ஓம் சதுர்புஜஸமந்விதாய நம!

    ஓம் அக்ஷமாலாதராய நம!

    ஓம் அசிந்த்யாய நம!

    ஓம் அக்ஷீணகுணபாரஸுராய நம!

    ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம!

    ஓம் நவதாய நம!

    ஓம் நீதிமார்க்கதாய நம!

    ஓம் வர்ஷப்ரதாய நம!

    ஓம் ஹ்ருஷீகேஸாய நம!

    ஓம் கலேஸநாஸகராய நம!

    ஓம் நவயே நம!

    ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம!

    ஓம் ஸாந்திமதயே நம!

    ஓம் சித்தஸ்மாதிக்ருதே நம!

    ஓம் ஆதிவ்யாதிஹாராய நம!

    ஓம் மநஸ்விநே நம!

    ஓம் மாகாதாய நம!

    ஓம் மாத்யாய நம!

    ஓம் மஹாஸயாய நம!

    ஓம் பலிப்ரஸந்நாய நம!

    ஓம் அபதாய நம!

    ஓம் பலநே நம!

    ஓம் பலபராக்ரமாய நம!

    ஓம் பவபாஸபரித்யாதாய நம!

    ஓம் மந்தஹாஸாய நம!

    ஓம் பஹாஸுரராய நம!

    ஓம் முக்தாயலஸமாநாபாவ நம!

    ஓம் முக்திதாய நம!

    ஓம் முஸிந்துதாய நம!

    ஓம் ரத்ஸீஹாஸகாருடாய நம!

    ஓம் ரதஸ்தாய நம!

    ஓம் ரஜிப்ரபாய நம!

    ஓம் சூரியப்ராக்தேஸந்தராய நம!

    ஓம் ஸுரஸத்ருஸுஹருதே நம!

    ஓம் கவயே நம!

    ஓம் துலாவ்ரூஷபராஸீஸாய நம!

    ஓம் துர்தராய நம!

    ஓம் தர்மபாலதாய நம!

    ஓம் பாக்யதாய நம!

    ஓம் பூரிவிக்ரமாய நம!

    ஓம் புண்ணியதாயகாய நம!

    ஓம் புராணபுருஷாய நம!

    ஓம் புஜ்யாய நம!

    ஓம் புருஹூதாதிஸந்ஜதாய நம!

    ஓம் அஜேயாய நம!

    ஓம் விஜிதாராதயே நம!

    ஓம் விவதாபரணோஜ்ஜவலாய நம

    ஓம் குந்தபுஷ்பப்ரதீகாஸாய நம!

    ஓம் பவ்யதாரித்ராய நம!

    ஓம் பவபாசவிமோசாய நம!

    ஓம் கௌடதேஸேஸ்வராய நம!

    ஓம் கோப்த்ரே நம!

    ஓம் குணிநே நம!

    ஓம் ஜ்யேஷ்டநக்ஷத்ரஸ்வபூதாய நம!

    ஓம் ஜயேஷ்டாய நம!

    ஓம் ஸ்ரேஷ்டாய நம!

    ஓம் ஸுசிஸ்மிதாய நம!

    ஓம் அபவர்கபரதாய நம!

    ஓம் அநந்தாய நம!

    ஓம் ஸந்தாநபலதாயகாய நம!

    ஓம் ஸர்வைஸ்வர்யப்ரதாய நம!

    ஓம் ஸர்வகீர்வரணஸந்துதாய நம!

    • இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.
    • அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    வயல்கள், அழகிய வீடுகள், அலங்கரிக்கப்பட்ட இடங்கள், படுக்கையறை போன்றவற்றில் வாசம் செய்பவர்.

    பால் உணர்ச்சியை தூண்டும் கிரகம். மழைக்கு காரகர்.

    மனித உடலில் கழுத்து, தொண்டை, மார்பு, இடுப்பு பக்கம் அசுத்த ரத்த குழாய்கள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

    சுக்கிரன் ஜாதகத்தில் அமையும் இடத்தை பொருத்து பால்வினை நோய்கள், சர்க்கரை வியாதி, கண்நோய், வீரியமின்மை, சிறுநீர் வழி வியாதிகள் உண்டாகிறது.

    ஒற்றை கண்ணை உடையவர்.

    மகாபலி சக்ரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்ட பொழுது சுக்ராச்சாரியார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று தடுத்தார்.

    மகாபலி அவர் சொல்லைக்கேளாமல் நீர்வார்த்து மூன்றடி மண் கொடுக்க முற்படும்பொழுது நீர்வார்க்குன் கெண்டியின் மூக்கினுள் வண்டாக சுக்கிரர் உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக் கொண்டார்.

    இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.

    அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    • நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.
    • பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.

    பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    உச்சநிலை கிரகம், மூலக்கிரகம் என்றும் கூறப்படுவதுண்டு.

    நீர்க்கிரகம், பெண்கிரகம், வெண்மை நிறமுடையவராதலால் வெள்ளி என்ற பெயரும் உண்டு.

    அசுரர்களுக்கு குரு என்பதால் 'அசுரகுரு' என்ற பெயரும் உண்டு.

    தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், சுகபோகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அளிப்பவர்.

    இவர் கலா ரசிகர். அழகானவர், கலாவல்லவர், கவிஞர், சுக்ரநீதி என்ற நீதி சாஸ்திரத்தை எழுதியவர்.

    சுக்கிரனுக்குரிய நாள் வெள்ளிக்கிழமை.

    இது இரு கண்ணுடைய நாள். திசை கிழக்கு.

    ஒரு ராசியை கடக்க ஆகும் காலம் ஒரு மாதம்.

    ஒருவருடைய ஜாதகத்தில் மனைவியின் நிலை, இசை, நாட்டியம் போன்ற கலைகள், இன்பம் ஆகியவை சுக்கிரனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

    இவர் வாகனகாரகன் என்றும் சொல்லப்படுகிறார்.

    வாகனங்கள் வைத்து ஆளக்கூடிய அம்சத்தை தருபவர். 

    • சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.
    • ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.

    ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சூரியனார்கோயிலில் சூரியனுக்கு வடக்கில் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காணப்பெறும் சுக்கிர பகவான் வலது கையால் அபய முத்திரையினையும் இடது கையைத் துடையில் ஊன்றியவாறும் காட்சி அளிக்கின்றார்.

    சுக்கிர பகவானுக்கு அசுரகுரு, உஷனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சுக்கிரன், சுங்கன், சைக்கியன், திங்கள், தைத்யமந்திரி, பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள் என்றும் வேறு பெயர்கள் உண்டு.

    ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியான இவருக்குரிய அதிதேவதை இந்திராணி, வாகனம் முதலை, தானியம் மொச்சை, வெண்தாமரை, வெள்ளைநிற ஆடை, வைரம், மொச்சைப் பொடி அன்னம், அத்தி சமித்து, வெள்ளி, உலோகம் ஆகியன இவருக்கு உரியன ஆகும். 

    • நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.
    • தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    மகாலட்சுமி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி

    ஆகச்ச ஆகச்ச,

    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி

    ஏஹ்யேஹி ஸர்வ

    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

    பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள்.

    இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம்.

    இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

    நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.

    தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும்.

    வீட்டில் மகாலட்சுமி வசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவன் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சமோ பெற்றிருக்க வேண்டும்
    • செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை இம்மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

    கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

    வசமானய ஸ்வாஹா

    ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு "சுக்கிரத் திசை" என சிலர் கூற நாம் கேள்விப் பட்டிருப்போம்.

    ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய "ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:

    சுக்கிர பகவான் மந்திரம்

    "ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

    சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

    வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

    சுக்ர காயத்ரீ மந்திரம்

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    தநுர் ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    • ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.
    • அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.

    ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.

    அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.

    அதைக் கண்டு கோபம் கொண்ட கமலாட்சி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள். நாயும் வெட்டுப்பட்டு இறந்தது.

    ஹரதத்தர் இறந்த அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார்.

    அதனால் அந்த நாய் நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.

    தனது தாயார் காளை மாட்டை கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும், மனைவியார் நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார்.

    பிராயச்சித்தம் என்ன வென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித் தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு நீராடச் சென்றார்.

    வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச்சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன.

    பஞ்சட்சர ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள்.

    இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்ட போது அதற்கு அவர், தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்கு சென்றீர்கள்? என்றார்.

    தம் உருவில் வந்து எழுதியது அக்னீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போது தான் புலப்பட்டது.

    • வண்டிக்காரர் ஹரதத்தரிடம், பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார்.
    • வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின என்றார்.

    ஹரதத்தரின் தாயார் ஒரு சமயம் வீட்டு வாசலில் நெல்லை உலற வைத்திருந்த போது ஒரு காளை மாடு அங்கு வந்து அந்த நெல்லைச் சிறிது தின்றது.

    மிஞ்சியிருந்த நெல்லை அங்கு வந்த ஹரதத்தர் குவித்து வைத்து, அக்காளை மாடு உண்ணுமாறு உதவினார்.

    இதைப் பார்த்துக் கொண்டே வந்த ஹரதத்தரின் தாயார் நெல்லை மாடு தின்று விட்டதே என்று எண்ணி அதைக் கோலால் அடித்து விரட்டினாள்.

    அப்போது அங்கு வந்த ஹரதத்தர், " காளை மாடு ஈசுவரனின் வாகனம் அல்லவா? இப்படி வாயில்லா ஜீவனை அடிக் கலாமா? என்றார்.

    சிறுது நேரத்தில் அவர் வீட்டு வாயிலில் சிவலிங்க பூபதி கொடுத்து அனுப்பிய நெல் மூட்டைகள் வந்து இறங்கின.

    வண்டிக்காரர் ஹரதத்தரிடம், பூபதி தங்களிடம் நாற்பது கோட்டை நெல்லைக் கொடுத்து வரச் சொல்லியிருந்தார்.

    வரும் வழியில் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட இருபது மூட்டைகள் போக மீதி இருப்பதே மிஞ்சின என்றார்.

    அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு ஹரதத்தர், தாயாரிடம் அம்மா, நீ உலர்த்திய நெல்லில் பாதியைக் காளை தின்றது என்று அதை அடித்தாயல்லவா? நமக்கும் பாதி நெல்லே வந்து சேர்ந்தது என்றார்.

    • சுவாமி அப்போது அசரீரியாக, முன்பு உனக்குத் திருவடி தீட்சை தந்தோம்.
    • இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் என்று அருளினார்.

    ஹரதத்தரது மனைவி கமலாட்சி, அடுக்களையில் உணவு சமைத்து வைத்திருந்த போது ஒரு நாய் அங்கு புகுந்து அதில் ஒரு கவளத்தை உண்டது.

    புலையன் சொன்னது போல் காவிரி மணல் யாவும் சிவன் என்றால் நாயும் சிவன் தானே! அப்படியானால் நாய் உண்டதை சிவன் உண்டதாகக் கருதி அதனை பிரசாதமாக ஏற்று உண்பது தானே முறை எனக்கருதினார் ஹரதத்தர்.

    அப்போது அந்த நாய் சிவனாகக் காட்சி தந்து மறைந்ததை இருவரும் கண்டனர்.

    சுவாமி அப்போது அசரீரியாக, முன்பு உனக்குத் திருவடி தீட்சை தந்தோம்.

    இப்போது குருவாகிய யாம் உண்ட சேஷத்தை உனக்குத் தந்தோம் என்று அருளினார்.

    ஆனந்தக் கூத்தாடிய ஹரதத்தர் திருவருளை வியந்தவராக நாய் உண்ட சேஷத்தை உண்டு, வீட்டிலுள்ளோரையும் உண்ணச் செய்தார்.

    • சுக்கிர திசை பாதிப்பு குறைய, செல்வவளம் மிளிர, நல்ல வாழ்க்கைத்துணை அமைய,
    • உயர் பதவிகள் கிடைக்க தொழிலில் மேன்மை உண்டாக சுக்கிர பகவானின் 108 போற்றிகள் சொல்ல வேண்டும்.

    சுக்கிர திசை பாதிப்பு குறைய, செல்வவளம் மிளிர, நல்ல வாழ்க்கைத்துணை அமைய, உயர் பதவிகள் கிடைக்க செய்யும் தொழிலில் மேன்மை உண்டாக சுக்கிர பகவானின் 108 போற்றிகள் சொல்ல வேண்டும்.

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இந்த 108 போற்றியைச் சொல்ல, சொல்ல அனைத்து நலங்களும் வளங்களும் நிறையும்.

    1.ஓம் அசுர குருவே போற்றி

    2.ஓம் அரியசக்தி வாய்ந்தவனே போற்றி

    3.ஓம் அழகனே போற்றி

    4.ஓம் அரங்கத்து அருள்பவனே போற்றி

    5.ஓம் அந்தணனே போற்றி

    6.ஓம் அத்தி சமித்தனே போற்றி

    7.ஓம் அவுணர் அமைச்சனே போற்றி

    8.ஓம் அந்தகனுக்கு உதவியவனே போற்றி

    9.ஓம் ஆறாம் கிரகனே போற்றி

    10.ஓம் ஆச்சாரியனே போற்றி

    11.ஓம் இருகரனே போற்றி

    12.ஓம் இனிப்புச் சுவையனே போற்றி

    13.ஓம் இந்திரியமானவனே போற்றி

    14.ஓம் இல்லறக் காவலே போற்றி

    15.ஓம் இரு பிறையுளானே போற்றி

    16.ஓம் ஈர்க்கும் மீனே போற்றி

    17.ஒம் உல்லாசனே போற்றி

    18.ஓம் உற்றோர்க் காவலே போற்றி

    19.ஓம் ஒரு கண்ணனே போற்றி

    20.ஓம் ஒளி மிக்கவனே போற்றி

    21.ஓம் கசன் குருவே போற்றி

    22.ஓம் கசனால் மீண்டவனே போற்றி

    23.ஓம் கலை நாயகனே போற்றி

    24.ஓம் கலைவளர்ப்போனே போற்றி

    25.ஓம் கருடவாகனனே போற்றி

    26.ஓம் கமண்டலதாரியே போற்றி

    27.ஓம் களத்ர காரகனே போற்றி

    28.ஓம் கயமுகன் தந்தையே போற்றி

    29.ஓம் காவியனே போற்றி

    30.ஓம் கனகம் ஈவோனே போற்றி

    31.ஓம் கீழ்திசையனே போற்றி

    32.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி

    33.ஓம் கிரகாதிபனே போற்றி

    34.ஓம் சடை முடியனே போற்றி

    35.ஓம் சங்கடம் தீர்ப்போனே போற்றி

    36.ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி

    37.ஓம் சந்திரன் ஆகானே போற்றி

    38.ஓம் சத்ரு நாசகனே போற்றி

    39.ஓம் சிவனடியானே போற்றி

    40.ஓம் சிவன் உதரத்து இருந்தவனே போற்றி

    41.ஓம் சுக்கிரனே போற்றி

    42.ஓம் சுந்தரனே போற்றி

    43.ஓம் "சுக்கிர நீதி' அருளியவனே போற்றி

    44.ஓம் சுரர்ப் பகைவனே போற்றி

    45.ஓம் சுகப்பிரியனே போற்றி

    46.ஓம் செழிப்பிப்பவனே போற்றி

    47.ஓம் தவயோகனே போற்றி

    48.ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி

    49.ஓம் திங்கள் பகையே போற்றி

    50.ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி

    51.ஓம் துலாராசி அதிபதியே போற்றி

    52.ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி

    53.ஓம் தேவயானி தந்தையே போற்றி

    54.ஓம் தூமகேதுக்கு அருளியவனே போற்றி

    55.ஓம் நாரடப்படுபவனே போற்றி

    56.ஓம் நாடளிப்பவனே போற்றி

    57.ஓம் நாற்கரனே போற்றி

    58.ஓம் நீண்ட தசாகாலனே போற்றி

    59.ஓம் நுண்கலைத் தேவனே போற்றி

    60.ஓம் நெடியவனே போற்றி

    61.ஓம் பரணி நாதனே போற்றி

    62.ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி

    63.ஓம் பத்துபரித்தேரனே போற்றி

    64.ஓம் பஞ்சகோணப்பீடனே போற்றி

    65.ஓம் பிரகாசிப்பவனே போற்றி

    66.ஓம் பிருகு குமாரனே போற்றி

    67.ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி

    68.ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி

    69.ஓம் புதன் மித்ரனே போற்றி

    70.ஓம் புகழளிப்பவனே போற்றி

    71.ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி

    72.ஓம் பூமியன்ன கோளே போற்றி

    73.ஓம் பூரத்ததிபதியே போற்றி

    74.ஓம் பூராட நாதனே போற்றி

    75.ஓம் பெண்பால் கிரகமே போற்றி

    76.ஓம் பேராற்றலானே போற்றி

    77.ஓம் மழைக் கோளே போற்றி

    78.ஓம் மலடு நீக்கியே போற்றி

    79.ஓம் மரவுரி ஆடையனே போற்றி

    80.ஓம் மாமேதையே போற்றி

    81.ஓம் மாண்டு மீண்டவனே போற்றி

    82.ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி

    83.ஓம் மாவலியின் குருவே போற்றி

    84.ஓம் மாலோடு இணைந்து

    அருள்பவனே போற்றி

    85.ஓம் மீனத்தில் உச்சனே போற்றி

    86.ஓம் மிருத்யு நாசகனே போற்றி

    87.ஓம் மோகனனே போற்றி

    88.ஓம் மொச்சைப் பிரியனே போற்றி

    89.ஓம் யயாதி மாமனே போற்றி

    90.ஓம் எம பயம் அழிப்பவனே போற்றி

    91.ஓம் ரவிப் பகைவனே போற்றி

    92.ஓம் ரிஷப ராசி அதிபதியே போற்றி

    93.ஓம் வண்டானவனே போற்றி

    94.ஓம் வரத ஹஸ்தனே போற்றி

    95.ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி

    96.ஓம் வாமனரை உணர்ந்தவனே போற்றி

    97.ஓம் விடிவெள்ளியே போற்றி

    98.ஓம் "விபுதை'ப் பிரியனே போற்றி

    99.ஓம் வெண்ணிறனே போற்றி

    100.ஓம் வெள்ளி உலோகனே போற்றி

    101.ஓம் வெண் குடையனே போற்றி

    102.ஓம் வெள்ளாடையனே போற்றி

    103.ஓம் வெண் கொடியனே போற்றி

    104.ஓம் வெள்ளித் தேரனே போற்றி

    105.ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி

    106.ஓம் வைரம் விரும்பியே போற்றி

    107.ஓம் "ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி

    108.ஓம் வெள்ளி நாயகனே போற்றி போற்றி

    எங்களுக்கு நாளும் வாழ வளம் தந்தருளும் அருள்மிகு ஸ்ரீசுக்கிர பகவானின் திருவடிகளே சரணம்!

    • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற இவ்வாலயத்தில் பிரம்மதேவரும், கம்சராசனும், பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.
    • அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார்.

    1. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிர ஸ்தலாகும்.

    2. இது மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது.

    3. காவிரியின் வடகரை ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    4. கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூருக்கு அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன.

    5. பலாசவனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், பிரம்மபுரி என்னும் பல பெயர்களால் கஞ்சனூர் அழைக்கப்படுகிறது.

    6. 1,500 ஆண்டு காலத்திற்கு முன்னதாக, மதுரை ஆதீனத்தை நிறுவியருளிய சீர்காழியில் அவதரித்த சைவசமயக்குரவர் நால்வரில் முதல்வரும், சைவ சமயத்தின் தனிப்பெருந் தலைவருமான திருஞான சம்பந்தப்பெருமான் எழுந்தருளி தரிசித்த தலம் இது.

    7. சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகளில் இத்தலம் "விருதராஜ பயங்கர வளநாட்டு நல்லாற்றார், நாட்டுக் கஞ்சனூர் என்றும், இறைவன் அக்னீஸ்வரம் உடையார் என்றும்" குறிக்கப்பெற்றுள்ளன.

    8. இத்தலத்தின் மூர்த்தியின் நாமம் சுக்கிர பகவான் என்று அழைக்கக்கூடிய ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆகும். அக்னீஸ்வரப் பெருமானே, சுக்கிர பகவானாக விளங்கி வருகிறார்.

    9. ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்து அற்புதங்கள் பல செய்த திருத்தலம் இது. இந்த ஸ்தலத்தில் பராசர முனிவருக்கு ஏற்பட்ட சித்தப்பிரமை நீங்கியது.

    10. பிரமதேவருக்கு திருமணக்கோலக் காட்சி கிடைத்தது. அக்னிக்கு பாண்டுரோகம் தீர்ந்தது. கம்சனுக்கு மூத்திர நோய் தீர்ந்தது.

    11. மாண்டவ்யப் புத்திரர்களுக்கு மாத்ரு ஹத்தி தோஷம் நீங்கி மோட்சம் கிடைத்தது. சந்திரனுக்கு சாபம் நீங்கியது. கலிக்காம நாயனாருக்குத் திருமணம் நடந்தது.

    12. விருத்தன் என்ற பிராமணனுக்கும், காளகண்டன் என்ற வேடனுக்கும் மோட்சம் கிடைத்தது. சித்திரசேனன் என்ற கந்தர்வனின் சாபமும் விஷ்ணுவின் சாபமும் நீங்கின.

    13. மானக்கஞ்சாறர், ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் துறையூர் வீரமார்த்தாண்ட மன்னன், மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்க மன்னன், பாண்டியப் பேரரசி மங்கையர்க்கரசியார் முதல் அமைச்சர், குலச்சிறையர் வடலூர் வள்ளல் ராமலிங்க அடிகள், மார்க்கண்டேயர், சுரைக்காய் பக்தர், அக்னிசிங்க மகாராஜா போன்ற பெருமக்கள் கஞ்சனூர் தலத்தில் வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள்.

    14. மூலவராகிய சுக்கிர பகவானாக விளங்கும் அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தி, பலாச வனத்தில் பூமியின் உள்ளிருந்து தானே தோன்றியவர்.

    15. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற இவ்வாலயத்தில் பிரம்மதேவரும், கம்சராசனும், பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.

    16. மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில் 284ம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த குருமகா சன்னிதானம் முதல் 288வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வரை, அவர்களால் திருப்பணிகள் பல செய்விக்கப் பெற்றன.

    ×