என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 ஆம் தேதி அன்லீஷ்டு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய எம்1எக்ஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள், புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம். 

    இத்துடன் மேக்ஓ.எஸ். மாண்டெரி பற்றிய விவரங்களும் அறிவிக்கப்படலாம். முன்னதாக இந்த ஓ.எஸ். 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. புதிய எம்1எக்ஸ் 10 சி.பி.யு. கோர்கள் மற்றும் 16 சி.பி.யு. கோர்கள் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. 



    முந்தைய தகவல்களின்படி புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட இண்டஸ்ட்ரியல் டிசைன், அதிக ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்டி கார்டு போர்ட்கள், மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ இ40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ இ40

    புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
    ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய குரோம்புக் மாடலில் முதல்முறையாக ஏ.எம்.டி. பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.


    உலகளவில் குரோம் ஓ.எஸ். கொண்ட குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். மாடல்களைவிட இதன் விலை குறைவாக இருப்பதே இத்தகைய வரவேற்புக்கு காரணம் ஆகும்.

    பெரும்பாலான குரோம்புக் மாடல்கள் இன்டெல் பிராசஸர்களையே கொண்டிருக்கின்றன. ஹெச்.பி. நிறுவனம் தற்போது ஏ.எம்.டி. பிராசஸர் கொண்ட குரோம்புக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் ஹெச்.பி. எக்ஸ்360 14ஏ என அழைக்கப்படுகிறது. 

     ஹெச்.பி. குரோம்புக்

    இந்த மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், ஒரு வருடத்திற்கான கூகுள் ஒன் சந்தா, 14 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஹெச்.பி. எக்ஸ்360 14ஏ மாடல் விலை ரூ. 32,999 ஆகும்.
    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கிறது.


    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் வை20டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்டச் ஒ.எஸ்.11.1 மற்றும் ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     விவோ வை20டி

    விவோ வை20டி ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் தள்ளுபடிகளுடன் சிறப்பு விற்பனை நடைபெற்றது.


    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நேற்று (அக்டோபர் 10) நிறைவுற்றது. சிறப்பு விற்பனை மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு சாதனைகளை படைத்தது என ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. விற்பனையை வெற்றிபெற செய்ததற்கு வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் நன்றி தெரிவித்தது.

    மேலும் வாரம் முழுக்க நடைபெற்ற சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூ. 11,500 கோடியை சேமித்துள்ளனர். இதுதவிர விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினால் ஆயிரம் புர்ஜ் கலிபா கட்டிடங்களை விட உயரமாக இருக்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    சிறப்பு விற்பனையில் மொத்தம் 3.75 லட்சம் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இந்த விற்பனையின் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒரு வாட்ச் விற்பனையாகி இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் விற்பனையான தேநீர் தூள் கொண்டு 50 லட்சம் கோப்பை தேநீர் போட முடியும். 

    மேலும் 24 மணி நேரத்தில் 1.2 லட்சம் சாக்லேட்கள் விற்பனையாகி இருக்கின்றன. சிறப்பு விற்பனையின் போது விற்ற ஷூ பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் இமய மலையை விட 100 மடங்கு உயரமாக இருக்கும். இதில் விற்பனையான எண்ணெய் கொண்டு 9 லட்சம் பிரென்ச் பிரைஸ் செய்ய முடியும். 

    ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் சான்று பெற்று இருக்கிறது.


    ஐகூ நிறுவனத்தின் இசட்5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவின் டி.இ.என்.ஏ.ஏ. வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஐகூ இசட்5

    ஐகூ இசட்5எக்ஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
    - மாலி ஜி68 எம்.சி.4 ஜிபியு
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒரிஜின் ஓ.எஸ். 1.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50 எம்பி பிரைமரி கேமரா 
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி எஸ்.ஏ. / என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோக தேதிகள் மாற்றப்படுகின்றன.


    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோகம் சில வாரங்கள் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக வினியோகம் தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோக தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில விலை உயர்ந்த மாடல்கள் தற்போது கிடைக்கவில்லை “currently unavailable” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 899 டாலர்கள் விலை கொண்ட சாதனங்களுக்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்கள் பிளாக் டைட்டானியம் மற்றும் சிலிகான் பேண்ட் கொண்டிருக்கின்றன.

     ஐபோன் 13

    புதிய வாட்ச் மாடல்கள் மட்டுமின்றி ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சில மாடல்களின் வினியோகம் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் உற்பத்தி குறைகளை ஆப்பிள் சரிசெய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகி வருகிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஏ சீரிசில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி ஏ13 5ஜி பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

     சாம்சங் கேலக்ஸி ஏ12

    ரென்டர்களின் படி சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பாடி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 290 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
    சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், புதிய ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 11 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 10 மாடல் குறைந்த விலையில் பல்வேறு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதேபோன்று புதிய ரெட்மி நோட் மாடலும் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    முந்தைய தகவல்களின்படி ரெட்மி நோட் 11 மாடல் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட்டில் செல்பி கேமரா, பின்புற பேனல் கிளாஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூலுக்கு மாற்றாக சதுரங்க வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இந்த மாடலின் கான்செப்ட் ரென்டர்கள் வெளியாகின. அதில் புதிய ஐபோன் முந்தைய எஸ்.இ. மாடலில் இருந்த சேசிஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    இத்துடன் ஐபோன் எஸ்.இ.3 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படலாம். மற்ற அம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

     ஐபோன் எஸ்.இ.

    ஐபோன் எஸ்.இ. 3 தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் வெளியீட்டு விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    அமேசான் பிரைம் மாதாந்திர சலுகை சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறது.


    அமேசான் தனது பிரைம் சேவையில் மிகவும் பிரபலான ரூ. 129 மாதாந்திர சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக இந்த சலுகை நீக்கப்பட்டது. 

    இதையடுத்து அமேசான் பிரைம் மூன்று மாதங்கள் மற்றும் வருடாந்திர சலுகைகளை மட்டுமே வழங்கிவந்தது. தற்போது அமேசான் பிரைம் ரூ. 129 மாதாந்திர சலுகை மீண்டும் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதனை பெற அனைத்து மின்னணு பரிவர்த்தனை முறைகளையும் பயன்படுத்த முடியாது.

     அமேசான் பிரைம்

    முன்பை போன்று இல்லாமல், அமேசான் பிரைம் ரூ. 129 சலுகையை கிரெடிட் கார்டு அல்லது தேர்வு செய்யப்பட்ட டெபிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்ய முடியும். ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வங்கிகள் மூலமாகவே ரூ. 129 சலுகையை பெற முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் இயங்கவில்லை என அதன் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்தனர்.


    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. உலகம் முழுக்க இரு சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். சில மணி நேரங்கள் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து சேவைகள் சரி செய்யப்பட்டன.

    சில நாட்களுக்கு முன் மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் சுமார் ஆறு மணி நேரம் முடங்கி போனது. அந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக சேவைகள் பல மணி நேரம் முடங்கி போயின. இதன் காரணமாக அந்நிறுவனம் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது.

     இன்ஸ்டாகிராம்

    இந்திய நேரப்படி நேற்று (அக்டோபர் 8) நள்ளிரவு 11.50 மணி முதல் அக்டோபர் 9 அதிகாலை 2.20 மணி வரை சேவைகள் முடங்கியதாக தனியார் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் அம்சங்கள் சீராக இயங்கவில்லை.  

    இரு சேவைகள் முடங்கியதை அடுத்து பயனர்கள் ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் எனும் ஹேஷ்டேக் மூலம் சேவைகள் முடங்கியதாக குற்றம்சாட்டினர். இதனால் #instagramdown மற்றும் #instadown எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. 

    பின் பேஸ்புக், 'எங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,' என தெரிவித்தது.


    ×