என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ நிறுவனம் தனது எப்19 ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது.
ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது ஒப்போ நிறுவனம் புதிய எப்19 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ அறிவித்து இருந்தது. அந்த வகையில் சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து ஒப்போ எப்19 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒப்போ எப்19 ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 4310 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் புதிய கார்பரேட் லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது பிரீமியம் சந்தையில் சியோமியின் கால்தடத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், பிராண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
புதிய லோகோவை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கென்யா ஹாரா வடிவமைத்து இருக்கிறார். புது லோகோ முந்தைய லோகோவை போன்றே ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இதே லோகோ பிளாக் மற்றும் சில்வர நிறங்கள் உயர் ரக சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சியோமி தெரிவித்து உள்ளது.

லோகோ அறிமுகம் செய்ததுடன், சியோமி நிறுவனம் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் களமிறங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் முதற்கட்டமாக 10 பில்லியன் யுவான்களை முதலீடு செய்ய இருக்கிறது. இதுதவிர அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.
சியோமியின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்திற்கான தலைமை செயல் அதிகாரியாக சியோமி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் பொருப்பேற்கிறார்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது வேரியண்டில் 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி SA/NSA, 8 ஜிபி ரேம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி அம்சங்கள்
- 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, OIS
- 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- யுஎஸ்பி டைபி சி
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி மாடல் கிளவுட் லாவண்டர், கிளவுட் மின்ட் மற்றும் கிளவுட் நேவி நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 47,999 அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 55,999 ஆகும்.
அசத்தலான அம்சங்கள் நிறைந்த புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. எம்ஐ மிக்ஸ் போல்டு என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனில் 8.01 இன்ச் WQHD+ மடிக்கக்கூடிய உள்புற டிஸ்ப்ளே, 6.52 இன்ச் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா மற்றும் லிக்விட் லென்ஸ் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது இகும்.

எம்ஐ மிக்ஸ் போல்டு அம்சங்கள்
- 8.01 இன்ச் 2480x1860 பிக்சல் QHD+ AMOLED HDR10 + டிஸ்ப்ளே
- 6.5 இன்ச் 2520x840 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 12 ஜிபி LPPDDR5 3200MHz ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
- 12 ஜிபி / 16 ஜிபி LPPDDR5 3200MHz ரேம், 512 ஜிபி (Ultra) UFS 3.1 மெமரி
- டூயல் சிம்
- எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, LED பிளாஷ், லிக்விட் லென்ஸ்
- 8 எம்பி கேமரா
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 5,020 எம்ஏஹெச் பேட்டரி
எம்ஐ மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 9999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,11,735 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை 10999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,22,905 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி கிளாஸ் பிளாக் மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி செராமிக் ஸ்பெஷல் எடிஷன் விலை 12,999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 1,45,255 என நி்ர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் 2021 WWDC நிகழ்வு விர்ச்சுவல் முறையில் ஜூன் 7 ஆம் தேதி துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெறும் இந்த நிகழ்வு ஜூன் 11 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க பயனர்கள் 1599 டாலர்கள் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவோருக்கு இந்த நிகழ்வு ஆப்பிள் டெவலப்பர் ஆப் அல்லது டெவலப்பர் வலைதளத்தில் நேரலை செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால மென்பொருள் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, மேக் ஒஎஸ் 12, வாட்ச் ஒஎஸ் 8 மற்றும் டிவி ஒஎஸ் 15 உள்ளிட்டவைகளுக்கான அப்டேட் வெளியிடப்படலாம்.

டெவலப்பர்கள் நிகழ்வுடன் மாணவர்களுக்கான ஸ்விப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கோடிங் திறமையை வெளிப்படுத்த முடியும். இதில் மாணவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்க வேண்டும்.
இந்த ஆண்டு மாணவர்கள் தங்களின் படைப்புகளை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் சமர்பிக்கலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு WWDC21 பிரத்யேக ஆடை மற்றும் பின் செட் வழங்கப்படும். இந்த நிகழ்வு பற்றிய புது தகவல்கள் நிகழ்வு துவங்கும் முன் அறிவிக்கப்படும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் தனது கேமிங் கன்சோலுக்கு இனி இந்த சேவை கிடைக்காது என தெரிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 மற்றும் வீடா கேம் கன்சோல்களுக்கு பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்3 சாதனத்தில் ஜூலை 2 ஆம் தேதியும், வீட்டா சாதனத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவை கிடைக்காது.
புது அறிவிப்பு காரணமாக பிஎஸ்3 மற்றும் வீட்டா சாதனங்களுக்கான கேம்களை டிஜிட்டல் வடிவில் பயனர்களால் இனி வாங்க முடியாது.

`பிளே ஸ்டேஷன் 3 கன்சோல்களுக்கு ஜூலை 2, 2021 மற்றும் பிளே ஸ்டேஷன் வீட்டா கன்சோல்களுக்கு ஆகஸ்ட் 27, 2021 ஆம் தேதியுடன் பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவையை நிறுத்துகிறோம். மேலும் பிஎஸ்பி அதாவது பிளே ஸ்டேஷன் போர்டபில் விற்பனையையும் ஜூலை 2, 2021 ஆம் தேதியுடன் நிறுத்துகிறோம்.' என சோனி தெரிவித்து உள்ளது.
சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 கன்சோலை நவம்பர் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை இந்த கன்சோல் சுமார் 8 கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிளே ஸ்டேஷன் வீட்டா மொத்ததில் ஒரு கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
பயனாளர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து மொபிகுவிக் விளக்கம் அளித்து இருக்கிறது.
மொபிகுவிக் சேவையை பயன்படுத்துவோரில் சுமார் 35 லட்சம் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்து இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர் ராஜசேகர் ராஜாரியா தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்த செய்திகள் பரவலாக வெளியாகி வருகிறது.
பயனாளிகள் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்த விவகாரம் குறித்து பதில் அளித்த மொபிகுவிக், இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்து உள்ளது.

எனினும், பயனர் தகவல்கள் விற்பனைக்கு வந்து இருப்பதாக பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பேடிஸ்ட்-ம் தெரிவத்து இருக்கிறார். இணைய வரலாற்றில் மிகப்பெரும் டேட்டா லீக் இது என அவர் தெரிவித்தார். மொத்தம் 36,099,759 தரவுகள் மொத்தம் 8.2 டெராபைட் அளவு கொண்டுள்ளன. இவை மொத்தம் 1.5 பிட்காயின்கள் அதாவது 84 ஆயிரம் டாலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
`பாதுகாப்பு வல்லுநர்கள் என கூறிக் கொண்டு தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் முழு ஆய்வு நடத்தப்பட்டது. எங்கள் தரப்பில் எவ்வித பாதுகாப்பு முறைகேடும் நடைபெறவில்லை. எங்களின் பயனர் விவரங்கள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கிறது,' என மொபிகுவிக் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளது.
போக்கோ பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
போக்கோ பிராண்டின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ 5160 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ அம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி டெப்த்
- 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5160 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் கிராபைட் பிளாக், ஸ்டீல் புளூ மற்றும் கோல்டன் பிரான்ஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் உருவாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 சிப்செட் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
கீக்பென்ச் விவரங்களின் படி ரியல்மி ஜிடி நியோ மாடல் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 975 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3320 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி ஜிடி நியோ மாடல் துவக்க விலை 2 ஆயிரம் யுவான் இந்திய மதிப்பில் ரூ. 22,200 என துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 ப்ரோ மேட் பிளாக் ஆப்ஷன், மேம்பட்ட போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இம்முறை ஐபோன் 13 சீரிசில் ஐபோன் 13 ப்ரோ மாடல் புதிதாக மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபோனில் மேம்பட்ட போர்டிரெயிட் மோட் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய நிறம் மட்டுமின்றி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோட்டிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது கோட்டிங் ஐபோனின் பின்புற பேனலில் கைரேகை அதிகம் பதியாமல் பார்த்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த வடிவமைப்பு ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம்.
ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளேவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இத்துடன் பேஸ் ஐடி அம்சமும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் பட்ஜெட் ரக மாடல் என்றும் இதில் எல்சிடி பேனல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் 8.4 இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி பேனல், ஒற்றை பிரைமரி கேமரா, செல்பி கேமரா, பவர் பட்டன், பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த டேப்லெட்டில் வழங்கப்பட இருக்கும் கேமரா சென்சார் விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. மேலும் இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5, வைபை, 4ஜி எல்டிஇ, ஆண்ட்ராய்டு 11 வழங்கப்படலாம்.
புதிய டேப் ஏ7 லைட் மாடலுடன் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, 12.4 இன்ச் எல்சிடி டிஎப்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படலாம்.
கடந்த ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் வெளியாகி இருக்கின்றன. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான பணிகள் ஆன்லைன் மயமாகி விட்டது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்றுவது (work from home jobs) குறித்த தேடல்கள் கூகுளில் கடந்த ஆண்டு 140 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அச்சம் பலருக்கும் அதிகரித்து இருப்பதால், இந்தியர்கள் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற துவங்கி உள்ளனர். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் ஆன்லைன் மருத்துவம் (online doctor consultation) பற்றிய தேடல் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ஆன்லைன் தேடல் சதவீதம் மணிப்பூர், பீகார் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நகரங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 2020 ஆண்டு ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் சேவைகளின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கல்வி சார்ந்த தேடல்களில் கல்விமுறை கடந்து தொழில்முறை, புதிய திறன் வளர்த்தல், தொழில் துவங்குதல், வருவாய் ஈட்டுதல் போன்ற துறைகள் பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர். 2020 கூகுள் தேடல் பற்றிய விவரங்களை அந்நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது.






