என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இரு மாடல்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
கேலக்ஸி எம்42 5ஜி மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் கேலக்ஸி எம்42 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல்களை வெளியிடுவது பற்றி சாம்சங் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
இரு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மாடல் நம்பர் தவிர வேறு எந்த தகவலும் தற்போது கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில், கேலக்ஸி எம்42 5ஜி SM-M426B/DS, கேலக்ஸி ஏ42 5ஜி SM-A426B/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளன.

முன்னதாக கேலக்ஸி எம்42 5ஜி மாடல் வைபை அலையன்ஸ் மற்றும் ப்ளூடூத் எஸ்ஐஜி சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. அதன்படி இது கேலக்ஸி ஏ42 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்பட்டது.
கேலக்ஸி எம்42 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். முன்னதாக அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ42 5ஜி மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்02எஸ் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி இருந்தது.
அதன்படி கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், டூயல் சிம் 4ஜி, சிங்கில் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்
கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 8,999
கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999
2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால், பரிந்துரைகளால் ஓரளவு சிறந்த மாடலை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் 2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டியலில் சிறந்த ஸ்மார்ட்போனாக ஒரு மாடல் தேர்வு செய்யப்படாமல் பேட்டரி பேக்கப், டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சிறந்த ஐபோன் மாடலாக ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் தேர்வாகி இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்டிருப்பதால் இந்த பட்டத்தை பெற்று இருக்கிறது.
இதுமட்டுமின்றி மற்ற மாடல்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐபோன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

2021 ஆண்டுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி தேர்வாகி இருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே மட்டுமின்றி, எஸ் பென் வசதி, குறைந்த விலை உள்ளிட்ட அம்சங்களால் இது சிறந்த ஆண்ட்ராய்டு போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
சிறந்த பட்ஜெட் போன் என்ற பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்10 5ஜி தேர்வாகி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் சிறப்பான 5ஜி வசதி வழங்கியதால் இந்த மாடல் சிறந்த பட்ஜெட் போனாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
ஹெச்பி நிறுவனம் குறைந்த விலை குரோம்புக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்பி நிறுவனம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய குரோம்புக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குரோம்புக் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
புது குரோம்புக் மாடல்களின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இவை 2021 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், குறைந்த விலை குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை புது ஹெச்பி குரோம்புக் மாடலில் 14 இன்ச் ஹெச்டி 1366x768 பிக்சல், 2-செல் 45Wh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும். கனெக்டிவிட்டிக்கு இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப் ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ப்ளூடூத் 5, வைபை வழங்கப்படலாம்.
இத்துடன் இன்டெல் செலரான் என்4020 பிராசஸர், இன்டகிரேட் செய்யப்பட்ட UHD iGPU கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 புது வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது அறிமுகமாக இருக்கும் புது வேரியண்ட் போக்கோ எம்2 ரீலோடட் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புது போக்கோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் எம்ஐயுஐ குறியீடுகளின் ஸ்ட்ரிங் ஒன்றில் இடம்பெற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை கொண்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த குறியீடு இந்தியாவையும் குறிப்பதால், இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. போக்கோ எம்2 ரீலோடட் மாடலில் மேம்பட்ட பிராசஸர், கேமராக்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்2 மாடலில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ எம்2 மாடலில் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.
இந்தியாவின் முன்னணி மின்சாதன அக்சஸரீ பிராண்டான போட், ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புது இயர்பட்ஸ் 150 மணி நேர பேக்கப், ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
ஏர்டோப்ஸ் 621 மாடலில் போட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க சவுண்ட், 6எம்எம் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் புது இயர்பட்ஸ் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலின் மிகமுக்கிய அம்சமாக அதன் பேட்டரி பேக்கப் உள்ளது.

புதிய போட் ஏர்டோப்ஸ் 621 ஒவ்வொரு இயர்பட் 35 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது 5.5 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். மேலும் இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் 2600 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஐந்து நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பயன்படுத்த முடியும்.
இந்திய சந்தையில் போட் ஏர்டோப்ஸ் 621 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு அமோக வரவேற்பை பெற்று வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுக்கான முதல் நாள் முன்பதிவு முந்தைய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களை விட 324 சதவீதம் அதிகமாக நடைபெற்று இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவிததார்.

எனினும், முதல் நாளில் எத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்ற விவரங்களை அவர் வழங்கவில்லை. முதற்கட்டமாக ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 9 துவக்க விலை ரூ. 49,999 என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ துவக்க விலை ரூ. 64,999 என்றும் ஒன்பிளஸ் 9ஆர் துவக்க விலை ரூ. 39,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஒன்பிளஸ் வலைதளத்தில் நடைபெறுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளம், இந்தியாவின் ஐஎம்இஐ வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதே நிகழ்வில் நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தெரிகிறது. முந்தைய தகவல்களின் படி நோக்கியா எக்ஸ்20 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், கூகுளின் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் வட்ட வடிவ கேமரா மாட்யூல், 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
எப்சிசி வலைதளத்தை தொடர்ந்து இந்திய ஐஎம்இஐ வலைதளத்திலும் இடம்பெற்று இருப்பதால், புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் TA-1341 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி 8 5ஜி மாடல் இந்திய வெளியீடு பற்றிய தகவலை தெரிவித்தார்.
ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ரியல்மி 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் அம்சங்கள் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி மாடல்கள் உருவாக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் தாய்லாந்து நாட்டின் ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்பு கமிஷன் வலைதளத்தில் வெளியானது.

ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இவை வெளியாகும் என்றும் மாதவ் சேத் தெரிவித்தார். இவற்றின் வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி50 மற்றும் ஜி100 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி100 மற்றும் மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி50 5ஜி மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ ஜி50 5ஜி மாடலில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி உள்ளது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ ஜி50 5ஜி மாடல் ஸ்டீல் கிரே, அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 294 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 21,340 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி100 பிளாக்ஷிப் மாடலில் 6.7 இன்ச் FHD+90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி + 8 எம்பி என இரண்டு செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் ToF சென்சார் உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போ சார்ஜிங் வசதி உள்ளது.
மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஐடிசென்ட் ஓசன், ஐடிசென்ட் ஸ்கை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 588
டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 42,770 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 7 சீரிசில் புதிய 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்தது.
குவால்காம் நிறுவனம் 780ஜி 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்தது. இது ஸ்னாப்டிராகன் 765ஜி / 768ஜி பிராசஸர்களின் மேம்பட்ட சிப்செட் ஆகும். இது 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் க்ரியோ 670சிபியு மற்றும் புதிய டிசைனில் உருவாகி இருக்கிறது.
இதில் குவால்காம் ஸ்பெக்ட்ரா 570, 6-ஆம் தலைமுறை குவால்காம் ஏஐ என்ஜின், குவால்காம் ஹெக்சாகன் 770 பிராசஸர் உள்ளது. இது முந்தைய பிராசஸரை விட இருமடங்கு வேகமாக செயல்படும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் அம்சங்கள், அப்டேட் செய்யக்கூடிய GPU டிரைவர்கள், ட்ரூ 10 பிட் ஹெச்டிஆர் கேமிங் வசதிகள் உள்ளன.
ஸ்னாப்டிராகன் எக்ஸ்53 5ஜி மோடெம் அதிகபட்சம் 3.3 Gbps டவுன்லோட் வேகம் வழங்குகிறது. மேலும் இது வைபை 6, ப்ளூடூத் 5.2, டூயல் ஆன்டெனா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் சவுண்ட் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை இயக்கும் வசதி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 990 பிராசஸருடன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி வேரியண்டை ஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 எப்இ 4ஜி மாடல் ரூ. 49,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வெர்ஷனும் இதேபோன்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 4ஜி வேரியண்டில் வழங்கப்பட்டதை போன்றே 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED, இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் சார்ஜர், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர் ஷேர் வசதி வழங்கப்படலாம்.






