என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சியோமி எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்திய விலை குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய எம்ஐ 11 ஸ்மார்ட்போன் சியோமி விற்பனை செய்ததில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், வளைந்த 120 ஹெர்ட்ஸ் QHD+ டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார், பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளது.

     சியோமி எம்ஐ 11 அல்ட்ரா

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 70 ஆயிரம் என கூறப்படுகிறது. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்த விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    சீன சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பாவில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் எத்தனை வேரியண்ட் விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    எதிர்காலத்தில் வெளியாகும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் உற்பத்தி செய்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் சொந்தமாக சிப்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் வைட்சேப்பல் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய சிப்செட் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சிப்செட் ஜிஎஸ் 101 எனும் பெயரில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் சிலிகான் எனும் பெயர் தான் ஜிஎஸ் என குறிக்கப்படுவதாக தெரிகிறது. புதிய சிப்செட் மூலம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    வைட்சேப்பல் சிப்செட் பிக்சல் போன் மட்டுமின்றி குரோம்புக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஆர்எம் சார்ந்த சிப்செட்களை தனது ஐபோன் மற்றும் மேக் சாதனங்களில் வழங்கியது.

    புதிய சிப்செட்களை கூகுள் நிறுவனம் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்குடன் இணைந்து உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஹார்டுவேர் பிரிவில் பெரும் முதலீடு மற்றும் அதிரடி திட்டங்கள் உள்ளதை சூசகமாக தெரிவித்து இருந்தார். 

    அந்த வகையில் புதிய தகவல் மூலம் கூகுள் உண்மையில் சொந்த பிராசஸர்களை உருவாக்கி வருவதாகவே பல்வேறு முதலீட்டாளர்கள் மற்றும் கூகுள் நிறுவன நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவோரும் கருதுகின்றனர். 
    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் நீடிப்பது குறித்த முக்கிய முடிவை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தை விரைவில் நிறுத்தலாம் என கூறும் தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும்,  இது குறித்து எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

    இந்த நிலையில், கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் என்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அடுத்த வார துவக்கத்தில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

     எல்ஜி மொபைல்

    மொபைல் போன் சந்தையில் கடந்த சில காலாண்டுகளாக எல்ஜி நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனையொட்டி எல்ஜி விரைவில் மொபைல்போன் சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன. 

    மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்துவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்ற வியாபார பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஆடியோ சாதனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹெச்எம்டி குளோபல் புதிய நோக்கியா பிராண்டு ஆடியோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஏப்ரல் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகிறது. புதிய ஆடியோ சாதனம் மழை, கூட்ட நெரிசல் மிக்க பகுதி, உடற்பயிற்சி, விளையாட்டு என பல செயல்களின் போது பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஏப்ரல் 5 ஆம் தேதி புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களும் புதிய ஆடியோ சாதனம் இயர்போனாக இருக்கும் என்பதையே உணர்த்துகிறது.

     ப்ளிப்கார்ட்

    முன்னதாக வெளியான தகவல்களின் படி நோக்கியா பிராண்டு விரைவில் ப்ளூடூத் வசதி கொண்ட நெக்பேண்ட் இயர்போன்களை ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. புதிய இயர்போன் ப்ளூடூத் 5.1 வசதி, குவால்காம் நிறுவனத்தின் ஆப்ட்எக்ஸ் ஹெச்டி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் ரேபிட் சார்ஜிங் வசதி, பிளாக், புளூ மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடியோ சாதனம் தவிர ஏப்ரல் 8 ஆம் தேதி நோக்கியா எக்ஸ் சீரிஸ் மற்றும் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபோன் எஸ்இ மாடல் 4.7 இன்ச் டிஸ்ப்ளே, 5ஜி வசதியுடன் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் எஸ்இ 2020 மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஐபோன் 8 சார்ந்த வடிவமைப்பே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐபோன் எஸ்இ புது மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     ஐபோன் எஸ்இ

    அதன்படி மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என்றும் இதில் 4.7 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபோன் எஸ்இ மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2023 வாக்கில் மற்றொரு ஐபோன் எஸ்இ மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மாடல் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2023 ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் 14 சீரிஸ் பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.


    ஸ்மார்ட் அணியக்கூடிய பிராண்டான அமேஸ்பிட் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என அமேஸ்பிட் தெரிவித்து உள்ளது.

    அமேஸ்பிட் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் ஹெச்டி டிஎப்டி-எல்சிடி கலர் டிஸ்ப்ளே, 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் சொந்த புகைப்படத்தை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

     அமேஸ்பிட் பிப் யு ப்ரோ

    அமேஸ்பிட் பிப் யு ப்ரோ மாடலில் பில்ட்-இன் அலெக்சா மற்றும் ஜிபிஎஸ் உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ச் உடன் உரையாடி மியூசிக், அலாரம், நோட்டிபிகேஷன் என பல அம்சங்களை இயக்க முடியும். மேலும் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளது. 

    இந்த ஸ்மார்ட்வாட்ச் செயலியுடன் இணைந்து கொண்டு உடல்நலன் சார்ந்த விவரங்களை வழங்குகிறது. இது பயனரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக டிராக் செய்து அதுபற்றிய தகவல்களை வழங்கும். இத்துடன் குறுந்தகவல், மின்னஞ்சல் உள்ளிட்டவைகளுக்கு நோட்டிபிகேஷன் வழங்குகிறது.

    அமேஸ்பிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது பிளாக், பின்க் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவின் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது. அந்த வகையில் புது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்டை சில வாரங்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.

    கனெக்டிவிட்டி மட்டுமின்றி இரு மாடல்களின் பிராசஸர் மற்றும் ரிப்ரெஷ் ரேட் உள்ளிட்டவை முற்றிலும் வேறுபடும் என தெரிகிறது. இதன் 5ஜி வேரியண்ட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அந்த வகையில் இதன் இந்திய வேரியண்டும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் SM A526B/DS எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே போன்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எப்சிசி வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. 

    ஐரோப்பிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 429 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் வைலட் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் வெளியிடப்பட்டது.
    சியோமி நிறுவனம் தனது புதிய எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சியோமி தெரிவித்து உள்ளது.

    முன்னதாக இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சரவ்தேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை எம்ஐ11 அல்ட்ரா மாடலில் 6.4 இன்ச் E4 AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே, பின்புறம் 1.1 இன்ச் AMOLED இரண்டாவது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சியோமி டீசர்

    சியோமி எம்ஐ11 அல்ட்ரா அம்சங்கள்

    - 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரல்லா கிளாஸ் விக்டஸ்
    - 1.1 இன்ச் 126x294 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
    - 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம்,  256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி
    - டூயல் சிம் 
    - எம்ஐயுஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 50 எம்பி பிரைமரி கேமரா, 1.4μm, f/1.95, OIS, LED பிளாஷ்
    - 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, OIS, f/4.1
    - 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.2
    - இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 67 வாட் வயர்டு / வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்
    - 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் 
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப் சீரிசில் இரண்டு புதிய மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் பிரத்யேக வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இரு மாடல்களும் வாட்டர்-டிராப் ரக நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி எப்1 இரு ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த மாடலாக இருக்கும் என தெரிகிறது.

     சாம்சங் டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எப்02எஸ் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 13 எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எப்12 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட், எக்சைனோஸ் 850 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் தனது சி சீரிசில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ரியல்மி சி25, ரியல்மி சி20 மற்றும் சி21 ஆகிய ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ரியல்மி சி21 மற்றும் சி25 மாடல்கள் டியுவி ரெயின்லேண்ட் சான்று பெறுகின்றன. சி சீரிஸ் மாடல்கள் இதுபோன்ற சான்று பெறுவது இதுவே முதல்முறை ஆகும். ரியல்மி சி25 மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     ரியல்மி டீசர்

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 13 எம்பி ஏஐ மூன்று கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டரி புளூ மற்றும் வாட்டரி கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இவை பிரத்யேக வடிவமைப்பு கொண்டுள்ளன.

    ரியல்மி சி20 மற்றும் சி21 மாடல்களில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்படுகின்றன. ரியல்மி சி21 மாடலில் 13 எம்பி ஏஐ மூன்று கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி சி20 மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    ரியல்மி சி20 மாடல் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களிலும் ரியல்மி சி21 மாடல் கிராஸ் புளூ மற்றும் கிராஸ் பிளாக் நிறங்களிலும் கிடைக்கின்றன. புதிய ரியல்மி சி20, சி21 மற்றும் சி25 ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. 
    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஸ்கல்கேண்டி இந்திய சந்தையில் புதுய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 12 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது. இத்துடன் IPX4 சான்று, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் என பல வசதிகளை கொண்டுள்ளது.

    டைம் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் காம்பேக்ட் நாய்ஸ்-ஐசோலேடிங் டிசைன் மூலம் காதுகளில் சவுகரிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 6எம்எம் டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்கல்கேண்டியின் பிரீமியம் ஆடியோ அனுபவத்தை துல்லியமாக வழங்குகின்றன. ப்ளூடூத் 5 உள்ளதால் இது சீரான இணைப்பை வழங்கும்.

     ஸ்கல்கேண்டி டைம்

    ஒவ்வொரு இயர்பட் ஒற்றை பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு மியூசிக் பிளேபேக், கால் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை இயக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்களை 3.5 மணி நேரங்களுக்கு பயன்படுத்தலாம். சார்ஜிங் கேஸ் சேர்த்தால் மொத்தம் 8.5 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    புதிய ஸ்கல்கேண்டி டைம் இயர்பட்ஸ் டார்க் புளூ/கிரீன், சில் கிரே, லைட் கிரே/புளூ மற்றும் ட்ரூ பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,249 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களின் விற்பனையில் கிடைத்த லாபம் பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களின் இரண்டு வார விற்பனையில் ரூ. 500 கோடி வருவாய் கிடைத்ததாக சியோமி அறிவித்து இருக்கிறது. ரெட்மி நோட் 10 சீரிசில் - ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

     ரெட்மி நோட் 10

    ஒவ்வொரு மாடலும் மார்ச் 16, மார்ச் 17 மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளில் முதல் விற்பனைக்கு வந்தன. இதுவரை நடைபெற்ற இரு விற்பனையில் மொத்தம் எத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறித்து சியோமி எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    எனினும், அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சுமார் 2.27 லட்சம் முதல் 4.16 லட்சம் யூனிட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 சீரிஸ் துவக்க விலை ரூ. 11,999 ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15,999 முதல் துவங்குகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் அடுத்த விற்பனை இன்று (ஏப்ரல் 1) நடைபெறுகிறது.
    ×