என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய கேலக்ஸி S23 FE மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி S21 FE மாடல் எதிர்பார்த்த வரவேற்பை சந்தையில் பெறவில்லை. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் தொடர்ந்து கேலக்ஸி FE ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி S23 FE மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருக்கும் OreXDA புதிய கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் விலையை குறைவாக நிர்ணயிக்க சாம்சங் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவு சற்றே பின்னடைவாக தெரிந்தாலும், இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் ஃபிளாக்ஷிப் அனுபவத்தை வழங்கும்.

பழைய பிராசஸர்களை பயன்படுத்தும் போது, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மாடலின் விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இது ஸ்மார்ட்போனின் விற்பனையை கணிசமாக அதிகப்படுத்தும். இதுதவிர புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 120Hz AMOLED ஸ்கிரீன், கேலக்ஸி S23 சீரிசில் உள்ள கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம்.
சாம்சங்-இன் FE சீரிஸ் சந்தையில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனினும், குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் பிராசஸருடன் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி S23 FE மாடல் இந்த ஆண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் பல்வேறு போட்டி நிறுவனங்களின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். அறிமுகமாகும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S23 FE எது மாதிரியான வரவேற்பை பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- ரியல்மி நிறுவனம் தனது அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வீடியோவை வெளியிட்டு உள்ளது.
- வீடியோவின் படி ஸ்மார்ட்போன் 9 நிமிடங்கள் 37 நொடிகளில் முழு சார்ஜ் ஆகிவிடுகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனை MWC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் MWC 2023 நிகழ்வில் அறிமுகமாகும் ரியல்மி GT 3 மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ரியல்மி GT நியோ 5 மாடலின் சர்வதேச வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்காக ரியல்மி விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி GT 3 மாடலில் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனினை 1 இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களுக்கும் குறைவாக எடுத்துக் கொள்வது அம்பலமாகி இருக்கிறது.
ஆய்வக சூழலில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 1 இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 9 நிமிடங்கள் 37 நொடிகளை எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 20 சதவீதம் வரை சார்ஜ் ஆக 80 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. நான்கு நிமிடங்களில் பேட்டரி 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். ரியல்மி GT 3 மாடலில் 240 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. எனினும், ரியல்மி GT நியோ 5 மாடலில் 150 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி GT 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி GT 3 மாடலில் 6.74 இன்ச் 1.5K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க ரியல்மி GT 3 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் - 4500 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இரண்டு வித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
- டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிரீமியம் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- முதற்கட்டமாக கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாக இருக்கிறது.
டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது. புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.
மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது.
இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.
- டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் தனது டுவிட்டர் புளூ கட்டண சேவையை அறிவித்தது.
- டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் கூடுதல் வசதிகள், புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தலாம்.
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் பணிநீக்கத்தில் துவங்கி, அம்சங்களில் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு அதிரடிகள் டுவிட்டரில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், தற்போது கட்டணம் செலுத்துவோர் மட்டுமே டுவிட்டர் தளத்தில் டூ-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் வசதியை கொண்டு தங்களின் அக்கவுண்ட்களை பாதுகாக்க முடியும்.
"மார்ச் 20 ஆம் தேதிக்கு பின் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர் மட்டுமே டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையில் குறுந்தகவல்களை பெற முடியும்," என அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

டு-ஃபேக்டர் முறையை தேர்வு செய்யும் போது, பயனர்கள் வழக்கமான கடவுச்சொல் மட்டுமின்றி கூடுதலாக குறுந்தகவல், ஆதெண்டிகேஷன் ஆப் அல்லது செக்யுரிட்டி கீ என மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த நிலையில், டுவிட்டரில் டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை சிலர் தவறாக கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என டுவிட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த பயனர் கேள்விக்கு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்திலேயே பதில் அளித்து இருக்கிறார்.
எலான் மஸ்க் அளித்த பதிலில், "டெலிகாம் நிறுவனங்கள் பாட் அக்கவுண்ட்களை கொண்டு டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் எஸ்எம்எஸ்-ஐ அனுப்புகின்றனர். இதன் காரணமாக நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மோசடி குறுந்தகவல்களால் 60 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது," என தெரிவித்துள்ளார்.
- யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- ரெண்டர்களில் உள்ள புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலில் மெல்லிய பெசல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், 9டு5மேக் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் CAD மாடலில் ஐபோன் 15 ப்ரோ எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ரெண்டர் நம்பத்தகுந்த கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ மற்றும் 9டு5மேக் இணைந்து உருவாக்கி இருக்கிறது.
தற்போதைய ரெண்டரில் ஐபோன் 15 ப்ரோ எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. ரெண்டர் உருவாக்குவதற்கான CAD ஃபைல்கள் ஆப்பிள் சார்பில் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பப்படும். இவற்றை கொண்டு போன் கேஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதும், கேஸ்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதை இது தடுக்கும்.

ஏற்கனவே வெளியான தகவல்களை போன்றே புதிய ஐபோன் 15 ப்ரோ யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் ஓரங்கள் வளைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பதை மேலும் சவுகரியமானதாக மாற்றும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் உள்ள கேமரா பம்ப் தற்போதைய மாடலில் இருப்பதை விட தடிமனாக இருக்கிறது.
இதன் மூலம் ஆப்பிள் புதிய ஐபோனின் சென்சார்களை மாற்றி இருக்கலாம் என தெரிகிறது. சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ போன்றே புதிய மாடலிலும் மூன்று கேமரா சென்சார்கள், LiDAR சென்சார் சதுரங்க வடிவம் கொண்ட மாட்யுலில் இடம்பெற்று இருக்கிறது. கேமரா சென்சார்கள் அதிக தடிமனாக இருப்பதால், இவை அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது.
இதே போன்று வால்யும் ராக்கர் மற்றும் மியூட் ஸ்விட்ச்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. வால்யூம் ராக்கர்கள் கேபாசிடிவ் பட்டன்களை போன்று காட்சியளிக்கிறது. இதில் உள்ள மியூட் ஸ்விட்ச் ரிடிசைன் செய்யப்பட்டு, அளவில் சிறியதாகவும், சற்றே வட்ட வடிவமும் கொண்டுள்ளன. புதிய ஐபோன் 15 ப்ரோ ரெசல்யுஷன் 14 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என தெரிகிறது.
புதிய ஐபோன் 15 ப்ரோ அளவில் சிறியதாகவும், மெல்லிய பெசல்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாடலிலும் ஐபோன் 14 ப்ரோ போன்றே டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. தற்போதைய ரெண்டர்கள் CAD ரெண்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போனின் இறுதி வடிவம் இதே போன்று இருக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.
Photo Courtesy: 9to5Mac
- டுவிட்டர் நிறுவனம் இந்திய அலுவலகங்களில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தகவல்.
- சர்வதேச அளவில் டுவிட்டர் நிறுவன செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக எலான் மஸ்க் இப்படி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று டுவிட்டர் நிறுவன அலுவலகங்களில் இரண்டு மூடப்பட்டு விட்டதாகவும், அதில் பணியாற்றி வந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வீட்டில் இருந்தபடி பணியற்றலாம் என டுவிட்டர் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. தற்போது சரிவில் சிக்கிக் கொண்டுள்ள நிறுவனத்தை மீட்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தது. இது டுவிட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 90 சதவீதம் ஆகும். இந்த வரிசையில் தான், தற்போது புது டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் செயல்பட்டு வந்த டுவிட்டர் அலவலகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

இரு நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து இந்தியாவில் டுவிட்டர் நிறுவன அலுவலகம் தற்போது பெங்களூருவில் மட்டுமே இயங்கி வருகிறது. இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்ட விவகாரம் குறித்து டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உலகம் முழுக்க டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம், அலுவலங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை எலான் மஸ்க் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனம் 2023 வாக்கில் நிதி நிலையில் மேம்பட்டு இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா இதுவரை மிகமுக்கிய சந்தையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க் இந்திய டுவிட்டர் அலுவலகங்களை மூடும் நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்.
இது தற்போதைய சூழலில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தைய அத்ததைய முக்கியத்தம் கொண்டிருக்கவில்லை என்பதையே குறிக்கிறது. கடந்த காலங்களில் டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிக முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
- 4ஜி சேவைகளை வெளியிட டிசிஎஸ் உடன் இணைந்து உள்நாட்டு உபகரணங்களை பிஎஸ்என்எல் பயன்படுத்த இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் உடன் இணைந்து நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் பகுதிகளில் 4ஜி சேவையை வெளியிட இருக்கிறது. ஒரு லட்சம் பகுதிகளில் டிசிஎஸ் உபரணங்களை பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலமாகவே பிஎஸ்என்எல் உடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இரு நிறுவனங்கள் கூட்டணியில் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்த இருக்கிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் 4ஜி வெளியீட்டிற்கு இவ்வாறு செய்யவில்லை. தற்போது நிர்வாக குழு ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், 4ஜி நெட்வொர்க் வெளியீட்டுக்கு மேலும் சில காலம் ஆகும்.
டிசிஎஸ் உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து, கொள்முதல் ஆணை வழங்குவதற்கு மேலும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பிஎஸ்என்எல் நிர்வாக குழுவின் முடிவு குறித்து மத்திய தொலைதொடர்பு துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய டெலிகாம் துறை சார்பில் மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை மார்ச் மாத வாக்கில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் என தெரிகிறது. இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உபகரணங்களை ஒரு லட்சம் பகுதிகளில் வழங்க இருக்கிறது. இதற்கான மொத்த தொகை ரூ. 24 ஆயிரத்து 556.37 கோடி ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவன நெட்வொர்க்குகளை பத்து ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும். இதற்காக டிசிஎல் சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான நெட்வொர்க் உபகரணங்களை வழங்குகிறது. இதில் சில மூன்றாம் தரப்பு பொருட்களும் இடம்பெற்று இருக்கும்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
- புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.
காதலர் தின ஆஃபர் விவரங்கள்:
ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.
இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.
- அமேசான் வலைதளத்தில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டேப்லெட், என ஏராளமான பிரிவுகளில் மின்சாதனங்கலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
காதலர் தினத்தை ஒட்டி அமேசான் வலைதளத்தில் Fab Phones Fest Sale அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் ரூ. 77 ஆயிரத்து 899 முதல் கிடைக்கிறது. இதில் அனைத்து சலுகை மற்றும் வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்ஃபிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகளை சேர்த்து ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் ரக்கட் மாடல் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்கள் பிரிவில் போட் ஏர்டோப்ஸ் 141 மாடல் ரூ. 1,099 விலையிலும், ஜெபிஎல் வேவ் 200 மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையிலும், நாய்ஸ் பட்ஸ் VS201 V2 மாடல் ரூ. 999 விலையிலும் சென்ஹெய்சர் IE 100 ப்ரோ இன்-இயர் வயர்டு இயர்போன் ரூ. 6 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. சியோமி பேட் 5 மாடல் ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் ரியல்மி பேட் வைபை 4ஜி டேப்லெட் மாடல் ரூ. 17 ஆயிரத்து 189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வங்கி சலுகைகள்:
ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளில் பத்து சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீத தள்ளுபடி அல்லது அதிகபட்சம் ரூ. 1250 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வங்கி தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகளில் சேர்க்கப்படுகிறது. விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Source: fonearena
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுவதாக தகவல்.
- புதிய ஐபோன் 15 சீரிசில் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள்கள் MFI சான்று பெற்றிருக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிசில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒருவழியாக ஆண்ட்ராய்டு போன்றே யுஎஸ்பி டைப் சி கேபிள் கொண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியும். எனினும், இந்த விஷயத்திலும் ஆப்பிள் மிக எளிய வழிமுறையை பின்பற்றாது என்றே தெரிகிறது.
இது குறித்து சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சார்ஜிங் இண்டர்பேஸ் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது MFI சான்று பெற்ற டைப் சி கேபிள்களை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோனில் MFI சான்று பெற்ற டைப் சி கேபிள் வழங்கப்படலாம்.

தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து ஐபோன்களிலும் லைட்னிங் போர்ட் பயன்படுத்தி வருகிறது. இதற்கும் MFI சான்று பெற்ற லைட்னிங் கேபிள்களை கொண்டே சார்ஜ் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் காரணமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள்களை கொண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியாது.
நீண்ட கால காத்திருப்புக்கு பின் ஆப்பிள் ஒருவழியாக யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இது தவிர புதிய ஐபோன் 15 சீரிசில் புதிய சிப்செட், ஆப்பிள் ஏ17 பயோனிக் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் சாலிட்-ஸ்டேட் பட்டன்கள், டைட்டானியம் பில்ட் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 சீரிஸ் போன்றே, புதிய ஐபோன் 15 சீரிசிலும் ப்ரோ மாடல்களில் மட்டும் டைனமிக் ஐலேண்ட் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர ஐபோன் 15 மாடலில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே, ஐபோன் 15 பிளஸ் மாடலில் 6.7 இன்ச், டாப் எண்ட் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட உள்ளன.
இதே போன்று மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அல்ட்ரா பிரீமியம் ஐபோனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார். ஐபோன் அல்ட்ரா அல்லது ஐபோன் 16 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாடலில் சிறப்பான கேமராக்கள், பெரிய டிஸ்ப்ளே மற்றும் போர்ட்லெஸ் டிசைன் வழங்கப்படலாம்.
- இந்தியாவில் டுவிட்டர் புளூ சேவையின் கீழ் பயனர்களுக்கு புளூ டிக் வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் புளூ சேவைக்கான இந்திய விலை மாதம் ரூ. 650-இல் இருந்து துவங்குகிறது.
டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது டுவிட்டர் புளூ சேவையை சமீபத்தில் துவங்கியது. மேலும் டுவிட்டர் புளூ சேவைக்கான சந்தா கட்டணம் வலைதளத்திற்கு மாதம் ரூ. 650, ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் செயலிகளுக்கு மாதம் ரூ. 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எலான் மஸ்க் அறிவித்து இருக்கும் டுவிட்டர் புளூ சேவையின் மிகமுக்கிய அம்சமாக புளூ டிக் உள்ளது. டுவிட்டர் புளூ சேவையில் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் புளூ டிக் வழங்கப்பட்டு விடும். முன்னதாக இந்த புளூ டிக் டுவிட்டர் நிறுவனம் நடத்திய ஆய்வை அடுத்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மாதிரி டுவிட்டர் ஏற்கனவே ஆய்வு செய்து வழங்கி வந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க்-ஐ டேக் செய்த நபர் ஒருவர், "தற்போது புளூ வெரிஃபிகேஷன் மார்க் ஜோக் ஆகி விட்டது. முன்னதாக புளூ டிக் வெரிஃபிகேஷன் பொது நபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் வெரிஃபிகேஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது." என தெரிவித்து இருந்தார்.
இவரது பதிவிற்கு பதில் அளித்த எலான் மஸ்க் விரைவில், "அந்த மாதிரி வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் விரைவில் நீக்கப்பட்டு விடும். இதுபோன்ற புளூ டிக் கொண்டவர்கள் தான், உண்மையில் ஊழல்வாதிகள் ஆவர்," என தெரிவித்து இருக்கிறார்.
எலான் மஸ்க் அளித்த பதிலுக்கு பலர் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். பலர், எலான் மஸ்க் எப்படி ஒருவர் ஊழல்வாதி என்பதை அறிந்து கொள்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொருவர் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் நிறம் மாற்றி வேறு நிறத்தில் டிக் வழங்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
- ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் சர்வேதச வெளியீடு பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒப்போ இதே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
புதிய ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் ஐந்து ஆண்டுகள் ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளை அடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் டிசைன் எல்லைகளை கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் கிரீஸ் காணப்படாத வகையில் முற்றிலும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலில் 6.8 இன்ச் FHD+ 1080x2520 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.32 இன்ச் கவர் டிஸ்ப்ளே, 382x720 பிக்சல் ரெசல்யூஷன், அதிகபட்சம் 60Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 191 கிராம் ஆகும்.






