என் மலர்
புதிய கேஜெட்டுகள்
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #Google
கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் டீசரில் மே 7 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதே நாளில் அந்நிறுவனத்தின் I/O 2019 நிகழ்வும் துவங்குகிறது.
கடந்த சில வாரங்களாக கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி பிக்சல் 3ஏ, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போன்களை இந்நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் சமீபத்தில் கூகுள் வலைதளத்திலேயே லீக் ஆனது. புதிய ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL மாடல்களின் குறைந்த விலை சாதனங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இவைதவிர ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ரெசல்யூஷன், மிட்-ரேன்ஜ் பிராசஸர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் ஸ்டோர் பக்கத்தில் அவெஞ்சர்ஸ் என்ட் கேம் திரைப்படத்தை சுட்டிக்காட்டும் “help is on the way” எனும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது.
இதனால் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக வார் மெஷின், தார், பிளாக் விடோ, ராகெட், கேப்டன் மார்வெல் உள்ளிட்டவற்றின் ஏ.ஆர். எமோஜி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பிக்சல் போன்களில் ஐயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், நெபுளா, ஒகேய் உள்ளிட்டவற்றின் எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் வெளியான தகவல்களில் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் 1080x2160 பிக்சல், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ரா்யடு 9 பை இயங்குதளம் வழங்கப்படலாம். பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது.
எல்.ஜி. நிறுவனம் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. #LG
ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.
காப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

காப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
எல்.ஜி. பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
புகைப்படம் நன்றி: LetsGoDigital
நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 3, ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Nubia
நுபியா நிறுவனம் இந்தியாவில் மூன்று சாதனங்களை மே மாதத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய நுபியா சாதனங்களின் அறிமுக தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இவை மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுபியா ரெட் மேஜிக் 3, வளையக்கூடிய நுபியா ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் இயர்போன் என மூன்று சாதனங்கள் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
நுபியா தனது ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் நுபியா பாட்ஸ் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன பொது மேலாளர் தனது வெய்போவில் தெரிவித்தார்.

அந்த வகையில் புதிய ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேசர் போன் 2 போட்டியாக அமைந்திருக்கிறது.
ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் ஏர் மற்றும் லிக்விட் டூயல்-கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது உயர் ரக கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் 4D ஷாக் வைப்ரேஷன் மோட்டார், டி.டி.எஸ். 7.1 3D சரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது.
ரெட் மேஜிக் 3 மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச் சாதனமும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனத்தில் 4.0 இன்ச் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் வியர் 2100 சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. நுபியா ஆல்ஃபா சாதனம் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக சுழலும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. #GalaxyA80
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கேலக்ஸி ஏ சீரிசின் டாப்-எண்ட் மாடல் ஆகும்.
புதிய கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபின்ட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 3D டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.
3D கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடனஅ 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2, 3D டெப்த் கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 649 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.50,445) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ ஸ்மார்ட்போன் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #OPPOReno
ஒப்போ நிறுவனம் ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மிகமெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருவித ஸ்மார்ட்போன்களிலும் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX286 பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு எடிஷனில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
உயர்-ரக மாடலில் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வித்தியாசமான பாப்-அப் ரக வடிவமைப்பில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். கேமரா மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எ.ம் பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, PDAF, CAF
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 79.3° வைடு ஆங்கிள் லென்ஸ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ரெனோ 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன் சிறப்பம்சங்கள்
- 6.6 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எ.ம் பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX586 சென்சார், 0.8um பிக்சல், f/1.7, OIS, Laser AF, PDAF, CAF
- 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், f/3.0
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4065 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போன் கிரீன், பின்க், பர்ப்பிள் மற்றும் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,895) என்றும், 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,985) என்றும் டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,075) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.41,190) என்றும் 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,345) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.49,435) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் 2019 ஐபோன் மாடல்களின் புதிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #iPhone
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களை புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என பரவலாக கூறப்பட்டது.
இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிய திட்டம் கொண்டிருப்பதாக ஜப்பானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் இந்த ஆண்டு மொத்தம் ஐந்து ஐபோன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஐபோன்களில் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மேம்பட்ட வெர்ஷன் மற்றும் 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் அளவுகளில் OLED டிஸ்ப்ளே, மெல்லிய சேசிஸ், பெரிய சென்சார்கள், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 18 வாட் லைட்னிங்கில் இருந்து யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்ட இரண்டு புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய XS, XS மேக்ஸ் மற்றும் XR அப்டேட் மாடல்களில் வழக்கமான சார்ஜர்களுடன் ஒரே மாதிரியான சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் XR மாடலில் விலை குறைவான எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
இவற்றை பார்க்கும் போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS-ஐ விட புதிய ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்யலாம் என்றும் இது ஐபோன் ப்ரோ என்ற பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் தற்சமயம் ஏழு ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் மூன்று தலைமுறை ஐபோன்கள் அடங்கும். இத்துடன் ஆறு ஆப்பிள் வாட்ச்கள், ஐந்து ஐபேட்கள், மூன்று ஆப்பிள் டி.வி.க்கள் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் ஸ்டிரீமிங் சாதனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது.
இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. #HUAWEIP30Pro
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் பாரிஸ் நகரில் அறிமுகம் செய்தது.
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED வளைந்த கிளாஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 980 7 என்.எம். பிராசஸர், GPU டர்போ 3.0, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எமோஷன் யு.ஐ. 9.1 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக லெய்கா பிராண்டிங் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா இருக்கிறது.

இதில் 40 எம்.பி. RYYB சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், ToF டெப்த் சென்சிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை 5x லாஸ்-லெஸ் சூம், 10x ஹைப்ரிட் சூம் மற்றும் 50x டிஜிட்டல் சூம் வசதி கொண்டிருக்கிறது. இந்த கேமரா குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் ISO 409600 ரக புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. சார்ந்த ஹெச்.டி.ஆர். தரத்தில் செல்ஃபி எடுக்கலாம். வளைந்த கிளாஸ் பேக், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ஹூவாய் மேட் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 30 நிமிடங்களில் 70% வரை சார்ஜ் செய்திடும். இத்துடன் 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

ஹூவாய் பி30 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.47 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே மற்றும் DCI-P3 Color Gamut
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 720 MHz ARM மாலி-G76MP10 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, OIS
- 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
- 8 எம்.பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, ToF டெப்த் சென்சார், லேசர் AF, PDAF, CAF, AIS
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 40 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீத்திங் க்ரிஸ்டர் மற்றும் அரோரா என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் பி30 ப்ரோ விலை ரூ.71,990 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக சலுகைகள்:
- ரூ.15,990 மதிப்புள்ள ஹூவாய் வாட்ச் ஜி.டி.யை ரூ.2000க்கு பெறலாம்
- ஆறு மாதங்களுக்கு திரையை மாற்றிக் கொள்ளும் வசதி
- 9 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி
- 5 சதவிகிதம் கேஷ்பேக்
- ரூ.2,200 கேஷ்பேக் வவுச்சர்கள், ஜியோ வழங்கும் இருமடங்கு டேட்டா
- ரூ.5600 மதிப்புள்ள எம்.எம்.டி. கூப்பன்
- ரூ.2,200 மதிப்புள்ள சூம் கார் வவுச்சர்
நுபியா பிராண்டு ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #nubia
நுபியா பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி உலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த சாதனம் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய சாதனத்தில் மடிக்கும் திறன் கொண்ட OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நுபியா அறிவித்துள்ளது. இதற்கென நுபியா சீனா யுனிகாம் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

நுபியா ஆல்ஃபா சிறப்பம்சங்கள்:
- 4.01 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, 82-டிகிரி வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2
- பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
- உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை காக்கும் அசிஸ்டண்ட் வசதி
- உறக்கம், ஓட்ட பயிற்சிகளை டிராக் செய்யும் திறன்
- மியூசிக் பிளேபேக்
- இதய துடிப்பு சென்சார்
- 4ஜி மற்றும் இசிம்
- வைபை, ப்ளூடூத்
- 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அணியக்கூடிய ஸ்மார்ட்போனுடன் நுபியா பிராண்டு வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தையும் நுபியா ஏற்கனவே சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது.

நுபியா பாட்ஸ் சிறப்பம்சங்கள்:
- ப்ளூடூத் 5 மற்றும் குவால்காம் ஆப்ட் எக்ஸ்
- LDS லேசர் ஆண்டெனா
- 45-டிகிரி எர்கோனோமிக் வடிவமைப்பு
- 6.2 கிராம் எடை
- MEMS மைக்ரோபோன்
- 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 410 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ்
நுபியா ஆல்ஃபா 4ஜி பிளாக் வெர்ஷன் விலை சீனாவில் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.36,225) என்றும் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட பேண்ட் கொண்ட 4ஜி கோல்டு வெர்ஷன் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,620) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நுபியா பாச்ஸ் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் விற்பனையில் நுபியா ஆல்ஃபா வாங்குவோருக்கு நுபியா பாட்ஸ் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #LenovoZ6Pro
லெனோவோ நிறுவனம் தனது இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாங் செங் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
டீசர் புகைப்படங்களின் படி புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுவதும், சிவப்பு நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரெட்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்குவதை சியோமி உறுதி செய்திருந்தது. எனினும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது அதில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

இவை தவிர ரெட்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்றும் இது சிவப்பு நிறத்தை தழுவி இருக்கும் என தெரிகிறது. முன்புறம் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் ஆன்டெனா பேண்ட்களும் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமராக்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ரெட்மி 2 ப்ரோ என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருந்தது. இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை பார்க்கும் போது இவற்றின் பாப்-அப் செல்ஃபி கேமரா வித்தியாசமாக பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது.
இதனால் எந்த ஸ்மார்ட்போனினை ரெட்மி உருவாக்கி வருகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
புகைப்படம் நன்றி: Weibo- Alvin
அமேசான் நிறுவனம் அலெக்சா வசதியுடன் கூடிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon
அமேசான் நிறுவனம் சொந்தமாக வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் இயர்போன்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இது அமேசான் லேப் 126 ஹார்டுவேர் பிரிவின் மிகமுக்கிய திட்டமாக இருக்கலாம் என தெரிகிறது.
அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வயர்லெஸ் இயர்போன்களிலும் அலெக்சா சேவையை புகுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெக்சா வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகலாம்.

தோற்றத்தில் அமேசானின் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதில் சிறப்பான ஆடியோ தரத்தை புகுத்த அதன் பொறியாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் இயர்பட்ஸ் கொண்டு பயனர்கள் இசையை கேட்பது, பொருட்களை வாங்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் இசையை கேட்கும் போது அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை இயர்பட்களை தட்டியே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இயர்போன்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க அலெக்சா என கூறினாலே போதுமானது என்றும் இது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது.
அமேசான் இயர்போன்களுடன் ஸ்டோரேஜ் கேஸ் ஒன்று வழங்கப்படும் என்றும் இதுவே இயர்போன்களை சார்ஜ் செய்யும் சார்ஜர் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் இதனை வழக்கமான யு.எஸ்.பி. கேபிள் கொண்டே சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ ஸ்லைடர் ரக போன்களை உருவாக்க இருப்பதாக சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #Oppo
ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு ஃபைண்ட் எக்ஸ் எனும் ஸ்மார்ட்போனினை கேமரா ஸ்லைடருடன் அறிமுகம் செய்தது. தற்சமயம் ஒப்போ பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் பாப்-அப் மற்றும் சைடு-ஸ்லைடர் வடிவமைப்பு கொண்ட போன்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது.
புதிய மாடல்களில் காணப்படும் ஸ்லைடர் வடிவமைப்பில் இரண்டாவது டிஸ்ப்ளே பேனல் இடம்பெற்றிருக்கிறது. இது ஃபைன்ட் எக்ஸ் மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த கான்செப்ட் பார்க்க விவோவின் பாப்-அப் ரக கேமரா போன்று காட்சியளிக்கிறது.
முன்னதாக லெட்ஸ்கோ டிஜிட்டல் வெளியிட்ட தகவல்களில் ஒப்போ சார்பில் சர்வதேச அறிவுசார் சொத்து நிறுவனத்தில் பதிவு செய்திருந்த காப்புரிமை பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் இரண்டு டிஸ்ப்ளே, பாப்-அப் மற்றும் சைடு-ஸ்லைடர் வடிவமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இவற்றுடன் வெளியான புகைப்படங்களில் மடிக்கக்கூடிய வடிவமைப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த காப்புரிமை ஏப்ரல் 2018 இல் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், காப்புரிமையின் படி இதன் பாப்-அப் செல்ஃபி கேமரா ஏற்கனவே விற்பனையாகும் விவோ வி15 ப்ரோ மாடலில் இருப்பதை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது பாப்-அப் டிஸ்ப்ளேவினை எவ்வாறு பயன்படுத்தும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இரண்டாவது டிஸ்ப்ளே நோட்டிஃபிகேஷன்களுக்கு பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. இதுதவிர இரண்டாவது ஸ்கிரீன் கேமிங்கின் போது கீபோர்டாகவும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
ஸ்லைடர் ஸ்மார்ட்போன்கள் பற்றி ஒப்போ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. தற்சமயம் ஒப்போ நிறுவனம் தனது ரெனோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 ஆம் தேதி ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது.
புகைப்படம் நன்றி: WIPO






