என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஆப்பிளின் பீட்ஸ் பிரிவு சார்பில் புதிய பவர்பீட்ஸ் ப்ரோ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #PowerBeatsPro
ஆப்பிளின் பீட்ஸ் பிரிவு பவர்பீட்ஸ் ப்ரோ எனும் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்சமயம் புதிய பவர்பீட்ஸ் ப்ரோ அறிமுகமாகி இருக்கிறது.
பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இது ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. அறிமுகமாகும் முன் பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் புகைப்படங்கள் ஐ.ஓ.எஸ். 12.2 இயங்குதளத்தில் லீக் ஆகியிருந்தது.

புதிய பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் விலை 249.95 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் சர்வதேச வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஐவரி, பிளாக், மோஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் சிறப்பான ஆடியோ தரம், நாய்ஸ் ஐசோலேஷன் மற்றும் கிளாஸ் 1 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்குகிறது. பவர்பீட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் ஆப்பிளின் ஹெச்.1 சிப்செட் கொண்டு இயங்குகிறது.
இத்துடன் ஹே சிரி (Hey Siri) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 9 மணி நேர பேட்டரி பேக்கப் தவிர லைட்னிங் போர்ட் கொண்ட சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. ஏர்பாட்ஸ் 2 மற்றும் புதிய பவர்பீட்ஸ் இயர்போன்களின் மிகப்பெரும் மாற்றம், புதிய பவர்பீட்ஸ் ப்ரோ கேஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கவில்லை என்பது தான்.
ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் பி30 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #HUAWEIP30Lite
ஹூவாய் நிறுவனம் பி30 ப்ரோ ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனுடன் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதே வழக்கப்படி ஹூவாய் இம்முறை பி30 சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் பி30 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.15 இன்ச் 2312x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இருவித அளவுகளில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை இருவித அளவுகளில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் முற்றிலும் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிகிறது. கொரிய தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இம்முறை இரண்டு கேல்கஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 சீரிசில் அறிமுகமான கேலக்ஸி எஸ்10இ மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதனால், கேலக்ஸி நோட் சீரிசிலும் சிறிய கேலக்ஸி நோட் 10 மாடலை உருவாக்குவது பற்றி சாம்சங் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. ஸ்டான்டர்டு மாடலில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பேனல் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே போன்ற டிஸ்ப்ளே கேலக்ஸி எஸ்10 5ஜி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 10 மாடலில் டைனமிக் AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இருப்பதை விட பெரியதாகும்.
புகைப்படங்களை எடுக்க பின்புறம் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்ற மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் அல்லது கேல்கஸி எஸ்10 5ஜி வேரியண்ட் போன்று நான்கு பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் ஹோல் பன்ச் ஸ்கிரீன் மற்றும் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் கான்செப்ட் வடிவமைப்புகளில் கேலக்ஸி நோட் 10 மாடலின் செல்ஃபி கேமரா எஸ் பென் சாதனத்தில் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், இதுபோன்ற வடிவமைப்பு இந்த ஆண்டு நோட் ஃபிளாக்ஷிப் மாடலில் சாத்தியமாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
புகைப்படம் நன்றி: DBS Designing
சாம்சங் கேலக்ஸி நோட் 10 கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,
ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இம்முறை சீனாவின் அன்டுடு வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #OppoReno
சீன ஸ்மார்ட்போனின் நிறுவனமான ஒப்போ விரைவில் ரெனோ எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏப்ரல் 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ ரெனோ விவரங்கள் சீன பென்ச்மார்க்கிங் வலைதளமான அன்டுடுவின் லீக் ஆகியுள்ளது.
அதன் படி ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படுகிறது. முன்னதாக ஸ்மார்ட்போன் கேஸ் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் புதிய ரெனோ ஸ்மார்ட்போனில் நாட்ச்லெஸ் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரியவந்தது.
அன்டுடு தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ ஸ்மார்ட்போன் PCAM00 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே மாடல் நம்பர்கள் சீனாவின் TENAA வலைதளத்திலும் லீக் ஆகியிருந்தது. இதுதவிர அன்டுடு தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 1,66,935 புள்ளிகளை ஒட்டுமொத்தமாக பெற்றிருக்கிறது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை ரெனோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போனுடன் உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்ட ஒப்போ ரெனோ வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், மூன்று பிரைமரி கேமராவும், 10X ஹைப்ரிட் சூம் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: AnTuTu | TENAA
5ஜி நெட்வொர்க் சேவை பெறும் உலகின் முதல் மாவட்டம் என்ற பெருமையை சீனாவின் ஷாங்காய் மாவட்டம் பெற்றுள்ளது. #5G
5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெவொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சைனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார்.
சீராக இயங்க துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஹூவாய் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென ஹூவாய் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Apple
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிரைமரி கேமரா கொண்ட 2019 ஐபோன் விவரங்கள் CAD ரென்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஐபோனின் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அதன்படி புதிய ஐபோன்களின் வடிவமைப்பு பார்க்க தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களை போன்றே இருக்கும் என்றும், இவற்றின் மிகப்பெரும் மாற்றம் கேமராவில் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் மூன்று வட்ட வடிவங்களும், இரு சதுரங்க வடிவ பகுதிகளில் கேமரா வழங்கப்பட இருக்கின்றன.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப்போகும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் இது புத்தம் புதிய ஐபோன் XR மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை போன்றே ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன் XR மாடலில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஐபோன்களிலும் OLED பேனல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்லீக்ஸ் முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் ஐபோனின் பின்புறம் சதுரங்க வடிவ பகுதியில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுவது தெளிவாக தெரிந்தது.
ஆப்பிள் திட்டங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பதில் பிரபலமாக அறியப்படும் மேகோடகாராவும், ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களுக்கென பல்வேறு வடிவமைப்புகளை சோதனை செய்வதாக தெரிவித்திருந்தார். ஹூவாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் நான்கு பிரைமரி கேமராக்களை வழங்கியிருக்கின்றன.
அந்த வகையில் இந்நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ஆப்பிள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதிக கேமராக்களை வழங்கி இந்த ஆண்டு ஐபோன் விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
புகைப்படம் நன்றி: Digit India | Mr White/Forbes
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Google
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன் விவரங்கள் ஆண்ட்ராய்டு கோட் மூலம் வெளியானது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கூகுளின் மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக இதே பெயர்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்புக்கான கோடிங்கில் காணப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. ஜெர்மனியில் இத்தகைய மெமரி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், மற்ற சந்தைகளில் எவ்வளவு மெமரி வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இத்துடன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வைட், பிளாக் மற்றும் ஐரிஸ் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐரிஸ் நிறம் புளு-வைலட்டில் இருந்து வைலட் நிறங்களில் கிடைக்கும் ஷேட் ஆகும். பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை 450 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.36,600) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 4 ஜி.பி. ரேம், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படுகிறது. பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களை கூகுள் எப்போது அறிமுகம் செய்யும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
புகைப்படம் நன்றி: SlashLeaks | 91Mobiles
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. #MiMix4
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சியோமி தனது Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சியோமி தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான டீசரை தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் 4 என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
முன்னதாக சியோமி Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக கான்செப்ட் வடிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் டிரை-பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் செராமிக் பேனல் வழங்கப்பட்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் நவம்பர் 2017 இல் அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் சில மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், Mi மிக்ஸ் 3எஸ் மற்றும் Mi 4 பற்றி எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
முந்தைய வழக்கப்படி சியோமி தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வெய்போவில் வெளியாகி இருக்கும் டீசரை பார்க்கும் போது புதிய சியோமி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது.
புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அதிகளவு மாற்றங்களுடன் ஸ்கிரீன் அளவு முந்தைய Mi மிக்ஸ் 3 மாடலை விட பெரியதாக இருக்கும் என்றும் பின்புறம் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லெனோவோவின் மோடடோராலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Motorola
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மோட்டோரோலா பி30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக மோட்டோரோலா பி40 என்ற பெயரில் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு பற்றிய விவரங்களும் வெளியாகியிருக்கின்றன.
அதன்படி மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறம் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறாமல், பன்ச்-ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனும் இதேபோன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், ஸ்பீக்கர் கிரில் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் டூயல் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கிறது.
இதில் ஒன்று 48 எம்.பி. சென்சார் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்களின் கீழ் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா லோகோவும் ஸ்மார்ட்போனின் பின்புறம் காணப்படுகிறது. இதனுள் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷனில் 1080x2560 பிக்சல் டிஸ்ப்ளே, சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 3 ஜிபி. / 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Motorola
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் FHD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். சிப்செட், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:
- 6.24 இன்ச் 2270x1080 பிக்சல் ஃபுல் ஹெசி.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆகடா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i கோட்டிங்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25um பிக்சல்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத் 4.2
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் சிறப்பம்சங்கள்:
- 5.9 இன்ச் 1520x720 பிக்சல் 18.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i நானோ கோட்டிங்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்கள் க்ளியர் வைட் மற்றும் செராமிக் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.16,999 மற்றும் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதில் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #OnePlus7
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் 360-டிகிரி வீடியோ லீக் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் 7 நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் மூன்று: பிளாக், பர்ப்பிள் மற்றும் கிரே நிறங்களில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் சரியாக அறியப்படவில்லை என்றாலும், இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்படுவதால் ஆல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படும் என்றும், புகைப்படங்களை எடுக்க 40 எம்.பி. + 20 எம்.பி. மற்றும் 5 எம்.பி. என மூன்று வித கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
மெமரியை பொருத்தவரை ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போனினை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்படலாம். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
விவோ நிறுவனம் இந்தியாவில் வி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #VivoV15
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை தொடர்ந்து விவோ நிறுவனம் இந்தியாவில் வி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய வி15 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ இன்-ஸ்கிரீன் LCD கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட், முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமராவும், பின்புறம் 12 எம்.பி. டூயல் பிக்சல் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. 120-டிகிரி வைடு ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வி15 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

விவோ வி15 சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
- 900MHz ARM மாலி-G72 MP3 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
- டூயல் சிம்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 8 எம்.பி. ஏ.ஐ. 120-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, சாம்சங் ISOCELL GD1 சென்சார், f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் ராயல் புளு, ஃபுரோசன் பிளாக் மற்றும் கிளாமர் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.23,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் விவோ வி15 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா ஸ்டோர், அமேசான், ப்ளிப்கார்ட், பேடிஎம் மால் மற்றும் இதர ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வலைதளங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்:
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக்
ஸ்மார்ட்போன் வாங்கும் முதல் ஆறு மாதங்களுக்குள் ஒருமுறை ஸ்கிரீனை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வசதி
12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.2000 வரை தள்ளுபடி
ஜியோ பயனர்களுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது






