search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல்
    X

    ஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிரைமரி கேமரா கொண்ட 2019 ஐபோன் விவரங்கள் CAD ரென்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஐபோனின் வடிவமைப்பு பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    அதன்படி புதிய ஐபோன்களின் வடிவமைப்பு பார்க்க தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களை போன்றே இருக்கும் என்றும், இவற்றின் மிகப்பெரும் மாற்றம் கேமராவில் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் மூன்று வட்ட வடிவங்களும், இரு சதுரங்க வடிவ பகுதிகளில் கேமரா வழங்கப்பட இருக்கின்றன.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப்போகும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் இது புத்தம் புதிய ஐபோன் XR மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை போன்றே ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புதிய ஐபோன் XR மாடலில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் அடுத்த ஆண்டு முதல் அனைத்து ஐபோன்களிலும் OLED பேனல்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்லீக்ஸ் முன்னதாக வெளியிட்ட புகைப்படத்தில் ஐபோனின் பின்புறம் சதுரங்க வடிவ பகுதியில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுவது தெளிவாக தெரிந்தது. 

    ஆப்பிள் திட்டங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பதில் பிரபலமாக அறியப்படும் மேகோடகாராவும், ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களுக்கென பல்வேறு வடிவமைப்புகளை சோதனை செய்வதாக தெரிவித்திருந்தார். ஹூவாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் நான்கு பிரைமரி கேமராக்களை வழங்கியிருக்கின்றன.

    அந்த வகையில் இந்நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த ஆப்பிள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதிக கேமராக்களை வழங்கி இந்த ஆண்டு ஐபோன் விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: Digit India | Mr White/Forbes
    Next Story
    ×