என் மலர்

  தொழில்நுட்பம்

  48 எம்.பி. கேமகராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்
  X

  48 எம்.பி. கேமகராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லெனோவோவின் மோடடோராலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Motorola  மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. 

  இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மோட்டோரோலா பி30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக மோட்டோரோலா பி40 என்ற பெயரில் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு பற்றிய விவரங்களும் வெளியாகியிருக்கின்றன. 

  அதன்படி மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறம் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறாமல், பன்ச்-ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனும் இதேபோன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது.  இத்துடன் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், ஸ்பீக்கர் கிரில் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் டூயல் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கிறது.

  இதில் ஒன்று 48 எம்.பி. சென்சார் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்களின் கீழ் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா லோகோவும் ஸ்மார்ட்போனின் பின்புறம் காணப்படுகிறது. இதனுள் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷனில் 1080x2560 பிக்சல் டிஸ்ப்ளே, சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 3 ஜிபி. / 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
  Next Story
  ×