என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nokia9PureView



    நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ஐந்து கேமரா சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் வீடியோவினை நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் மூன்று மோனோக்ரோம் மற்றும் இரண்டு ஆர்.ஜி.பி. சென்சார்களை கொண்டிருக்கிறது.



    நோக்கியா மொபைல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர் வீடியோவில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகிறது. இத்துடன் விரைவில் நோக்கியா 9 கொண்ட தலைசிறந்த புகைப்படங்களை படமாக்க தயாராகுங்கள் என்ற வார்த்தை பதிவிடப்பட்டிருக்கிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,300) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.

    எனினும், இந்திய விலை மற்றும் விற்பனை பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. இந்தியாவில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    - வயர்லெஸ் சார்ஜிங்
    ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #AirPods



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும். 

    இத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

    கியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் சார்ஜரின் முன்புறம் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து சார்ஜிங் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஏர்பாட்ஸ் பயன்படுத்துவோரும் இந்த வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வாங்கி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    சார்ஜிங் கேஸ் உடன் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்படி புதிய இயர்பாட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரமும், 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது 3 மணி நேரத்திற்கும் பயன்படுத்த முடியும். 
     
    ஏர்பாட்ஸ் மற்றும் ஸ்டான்டர்டு சார்ஜிங் கேஸ் விலை ரூ.14,900 என்றும் வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் வாங்கும் போது ரூ.18,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் வாங்கும் போது ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய இயர்போன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஸ்டேடியா எனும் கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. #Google



    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது கேமிங் சேவையை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஜி.டி.சி. 2019 நிகழ்வில் கூகுள் தனது கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. கூகுள் ஸ்டேடியா என அழைக்கப்படும் புதிய சேவையை கொண்டு தொலைகாட்சியில் கேம்களை விளையாடலாம்.

    இதுமட்டுமின்றி கூகுள் ஸ்டேடியா பயன்படுத்தி கூகுள் க்ரோம்காஸ்ட் அல்ட்ரா கொண்டு லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட், அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றில் 4K தரம் நொடிக்கு 60 ஃபிரேம் வேகம் ஹெச்.டி.ஆர். தரத்தில் சரவுண்ட் சவுண்ட் நுட்பத்தில் கேம் விளையாடலாம். 



    ஸ்டேடியா கேமிங் சேவை முழுமையாக ஆன்லைனில் விளையாட வேண்டும் என்பதால், இண்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப கேம்பிளே அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். கேம்களை உருவாக்க கூகுள் தனது டெவலப்பர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஸ்டேடியாவின் கிரவுட் பிளே அம்சம் கொண்டு பார்வையாளர்கள் நேரலையில் ஸ்டிரீம் செய்யப்படும் கேமில் கலந்துகொள்ளலாம்.

    கூகுளின் டேட்டா சென்டருடன் நேரடியாக இணைக்கப்படும் ஸ்டேடியா கண்ட்ரோலரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமிங் அனுபவத்தை வைபை இணைப்பின் மூலம் சிறப்பாக மேம்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டன்ட் கேப்ச்சர் அம்சம் கொண்டு கேம்பிளேக்களை 4K தரத்தில் யூடியூபில் பகிர்ந்து கொள்ள முடியும்.



    இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூகுள் ஸ்டேடியா ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கூகுள் ஸ்டேடியா அறிமுக வீடியோவை கீழே காணலாம்

    சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 855, 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டிருக்கிறது. #BlackShark2



    சியோமியின் பிளாக் ஷார்க் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், 12 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சிக்னல் சீராக கிடைக்க X-வடிவத்தில் பிரத்யேக ஆண்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்.ஜி.பி. லோகோ, டிஸ்ப்ளேவில் பிரெஸ் சென்சிட்டிவ் கண்ட்ரோல்கள், ஏ.ஐ. கேமிங் அனுபவம் வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சாம்சங் GM1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 2x சூம்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், ஃபுரோஸன் சில்வர் மற்றும் மிரேஜ் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் பிளாக் ஷார்க் 2 6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.32,710) என்றும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,780) என்றும், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,850) என்றும் டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட இசட் ஃபோல்டு டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. #Google



    கூகுள் நிறுவனம் 'இசட் ஃபோல்டு' (Z-fold) எனும் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் டிஸ்ப்ளேவினை இருபுறங்களில் மடிக்கும் போது உடையாமல் இருக்கும் தன்மை கொண்டிருக்கிறது. 

    இந்த காப்புரிமையில் மொபைல்போன் பற்றி எவ்வித வார்த்தையும் இடம்பெறவில்லை. எனினும், இதன் டிஸ்ப்ளே அதிநவீன கம்ப்யூட்டிங் சாதனங்களில் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது டேப்லெட் அல்லது லேப்டாப்களில் பயன்படுத்த முடியும்.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் மீது கூகுள் நிறுவனத்திற்கான விருப்பம் மென்பொருள் வடிவமைப்பு சார்ந்ததாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் தனது ஸ்மார்ட்போன் மற்றும் அவற்றுக்கான டிஸ்ப்ளேக்களை சொந்தமாக உருவாக்குவதில்லை. இதனால் கூகுள் தனது மடிக்கக்கூடிய ஸ்கிரீனிற்கான உரிமைகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் வழங்கலாம்.



    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்வதை போன்று கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் உரிமையை ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் வழங்கியிருக்கிறது. முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஹெச்.டி.சி. மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் உற்பத்தி செய்தன.

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களுக்கான வசதியை கூகுள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வழங்கியது. இது மட்டுமின்றி கூகுள் நிறுவனம் சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இருநிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு சீராக வேலை செய்ய பணியாற்றியது.
    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து டென்சென்ட் இந்தியா களத்தில் குதித்திருக்கிறது. #PUBG



    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பப்ஜி விளையாடியதாக பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு டென்சென்ட் இந்தியா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில நகரங்களில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் பெற்றோர்களும், சில பள்ளி நிர்வாகத்தினரும் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொருத்தவரை பப்ஜி மொபைல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஒன்றாக பாரக்கப்படுகிறது.

    இந்நிலையில், அவர்களது கவலையை போக்கும் வகையில், இந்தியாவுக்கென ஆரோக்கியமான கேம்பிளே அமைப்பை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என டென்சென்ட் இந்தியா தெரிவித்திருக்கிறது. இதுதவிர குறைந்த வயதுடையோருக்கு கேம் விளையாடும் நேரத்தை குறைப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.



    இதனால் எதிர்காலத்தில் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, பயனர்கள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளும் வசதி மொபைல் இன்டர்ஃபேசில் இடம்பெறும் என தெரிகிறது. பப்ஜி மொபைல் மீதான தடை பற்றி அதன் டெவலப்பர்கள் கூறும் போது, இந்த கேமிற்கு எதிராக வரும் கருத்துக்களை புரிந்து கொள்ள விரும்புகிறோம். 

    மேலும் இந்த கேம் தொடர்பான எங்களது கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொர்ந்து செய்வோம். பப்ஜி மொபைல் விளையாடுவோருடன் நாங்கள் இருக்கிறோம், இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி மொபைல் கேமினை விளையாடியதாக பத்து பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு அரசாணையை அம்மாநில அரசு பிறப்பித்து இருந்தது.
    தாம்சன் நிறுவனம் இந்தியாவில் 40-இன்ச் அளவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. #SmartTV



    தாம்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் பிரபல நிறுவனமாக அறியப்படும் தாம்சன் தனது புதிய ஸ்மார்ட் டி.வி.யை யு.டி.9 என அழைக்கிறது. 40-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய 4K ஸ்மார்ட் டி.வி. மார்ச் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய தாம்சன் யு.டி.9 40-இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முதல் 4K (3840x2160 பிக்சல்) கொண்ட முதல் ஸ்மார்ட் டி.வி.யாகும். புதிய ஸ்மார்ட் டி.வி.யில் HDR10 மற்றும் 20W ஆடியோ அவுட்புட் வழங்குகிறது. இந்த எல்.இ.டி. டி.வி.யில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள் மற்றும் 60Hz ஸ்டான்டர்டு ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.



    ஸ்மார்ட் டி.வி. அம்சத்திற்கென ஆறு செயலிகல் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் யூடியூப் செயலியும் அடங்கும். இந்த செயலியை கொண்டு 4K வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த டி.வி.யின் பிரைட்னஸ் ரேட்டிங் 550 நிட்ஸ் ஆகும். கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவையும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகின்றன.

    புதிய தாம்சன் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே தாம்சன் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் வேரியண்ட்களை தாம்சன் விற்பனை செய்து வருகிறது. புதிய தாம்சன் யு.டி.9 4K ஸ்மார்ட் டி.வி. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் விலை இந்தியாவில் ரூ.20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப்-எண்ட் டி.வியின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாம்சன் டி.வி.க்களை விற்பனை செய்து வரும் எஸ்.எஸ்.பி.எல். நிறுவனம் 1990 முதல் சந்தையில் பல்வேறு ரக டி.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
    புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து ஹுவாய் நிறுவனம் இரண்டு புதிய ஃபிட்னஸ் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Huawei



    ஹுவாய் நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3இ என இவை அழைக்கப்படுகின்றன. 

    ஹூவாய் பேண்ட் 3 மாடலில் 0.95 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் ஃபிரேம் ஒன்று டிஸ்ப்ளேவை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சிலிகான் ஸ்டிராப் கொண்டு அணிந்து கொள்ளளலாம்.

    இந்த பேண்ட் அப்லோ 3 சிப் மூலம் இயங்குகிறது. இதில் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உறக்கத்தை கண்கானிப்பதோடு, இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் ஐ.ஆர். எனும் சென்சார் இதயதுடிப்பை டிராக் செய்யும். இந்த பேண்ட் அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.

    25 கிராம் எடை கொண்டிருக்கும் ஹூவாய் பேண்ட் 3 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இது 50 மீட்டர் வரையிலான தண்ணீரிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 



    ஹூவாய் பேண்ட் 3இ அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதில் புதிதாக ஃபுட்வியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டப்பயிற்சியின் போது 97 சதவிகிதம் வரை சரியான விவரங்களை வழங்குகிறது. இதற்கென 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் பேண்ட் 3இ ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் 21 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களிலும், ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளை கொண்ட சாதனங்களில் சப்போர்ட் செய்யும்.

    இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 3 விலை ரூ.4,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ஹூவாய் பேண்ட் 3 கிடைக்கிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 3இ மாடலின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பின்க் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Skullcandy



    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் புஷ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் ஸ்கல்கேண்டி செக்யூர் ஃபிட்ஃபின் ஜெல்கள் மற்றும் ஆக்டிவ் அசிஸ்டண்ட் வசதியை வழங்கியிருக்கிறது. இது இயர்பட்ஸ்களுக்கு ஆறு மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் கூடுதலாக ஆறு மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் கேஸ் வழங்கப்படுகிறது.

    இதன் புதுவித வடிவமைப்பு இயர்பட்ஸ்களை மிக எளிமையாக இயக்க வழி செய்வதோடு சிக்னல்கள் சீராக கிடைக்கவும் துணை புரிகிறது. ஒவ்வொரு இயர்பட்களிலும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தொடர்ச்சியாக க்ளிக் செய்யும் போது அசிஸ்டண்ட் வசிதயுடன் குறுந்தகவல் அனுப்பலாம்.



    இத்துடன் ரிமைண்டர் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும். மேலும் இயர்பட்களை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். தொடர்ச்சியாக இருமுறை இடதுபுற இயர்பட் க்ளிக் செய்தால் இன்கமிங் அழைப்புகளை ரிஜெக்ட் அல்லது ஹோல்டில் வைக்கலாம். 

    புதிய வயர்லெஸ் இயர்பட்கள் காதுகளில் இருந்து எளிதில் கீழே விழாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இத்துடன் சார்ஜிங் கேஸ் கொண்டு 12 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும்.

    ஸ்கல்கேண்டி புஷ் வயர்லெஸ் இயர்பட் கிரே டே மற்றும் சைகோடிராபிக்கல் டியல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
    ஹூவாய் நிறுவனம் இரண்டு வாரங்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HUAWEIWatchGT



    ஹூவாய் தனது வாட்ச் ஜி.டி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் அல்ட்ரா-ஹை பேட்டரி லைஃப் வசசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் பவர்-=சேவிங் அல்காரிதம் செயல்திறன் மற்றும் எஃபிஷியன்சி மோட்களின் போது சீராக மின்சக்தியை கையாள்கிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் பேட்டரி பேக்கப் அதிகமாக கிடைக்கும்.

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED ஸ்கிரீன், டூயல்-கிரவுன் டிசைன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் செராமிக் பெசல்கள் 10.6 எம்.எம். கேசுடன் வருகிறது. இதில் ஜி.பி.எஸ்., GLONASS மற்றும் GALILEO உள்ளிட்ட நேவிகேஷன் வசதிகளை கொண்டிருக்கிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹூவாய் வாட்ச் ஜி.டி. மாடலில் பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை டிராக் செய்யும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ட்ரூசீன் 3.0 இதய துடிப்பு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஹூவாய் வாட்ச் ஜி.டி. சிறப்பம்சங்கள்:

    - 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே, 326 PPI
    - ARM M4 பிராசஸர்
    - 16 எம்.பி. ரேம்
    - 128 எம்.பி. மெமரி
    - ப்ளூடூத் 4.1 (ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 சாதனங்களில் இயங்கும்) 
    - 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - GPS, GLONASS, GALILEO
    - ஐ.ஆர். சார்ந்த இதய துடிப்பு மானிட்டர்
    - 420 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹூவாய் வாட்ச் ஜி.டி. ஸ்போர்ட்ஸ் எடிஷன் விலை ரூ.15,990 என்றும் கிளாசிக் எடிஷன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை மார்ச் 19 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஹூவாய் AM61 BT ஹெட்செட் இலவசமாக வழங்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Reno



    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. 

    ரெனோ சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆர் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒப்போவின் ஃபைன்ட் எக்ஸ் சீரிஸ்-க்கு மாற்றாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இது ரியல்மி போன்று துணை பிராண்டாக இருக்காது என ஒப்போ தெரிவித்துள்ளது.

    புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் வசதி வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4065 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது.



    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் 10எக்ஸ் வசதியுடன் லாஸ்லெஸ் சூம் கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ அறிவித்தது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், 120 டிகிரி அல்ட்ரா-வைடு லென்ஸ், 159 எம்.எம். அளவு சமமான டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் தனிப்பட்ட அசிஸ்டண்ட் சேவையான பிரீனோவினை வணிக ரீதியில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஒப்போ சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிவித்திருந்தது. அந்த வகையில் இதுகுறித்த அறிவிப்பும் இவ்விழாவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலா உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ரேசர் போனில் குறிப்பிட்ட அளவு செயலிகள் மட்டுமே இரண்டாவது டிஸ்ப்ளேவில் இயங்கும் என கூறப்படுகிறது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் ரென்டர்களில் சில விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்சமயம் மென்பொருள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு தரவுகளை ஸ்கிரால் செய்து கொள்ளலாம். மேலும் முதற்கட்டமாக இரண்டாவது டிஸ்ப்ளேவில் குறிப்பிட்ட சில செயலிகளை இயக்குவதற்கான வசதியை மோட்டோரோலா வழங்கும் என தெரிகிறது.

    மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருப்பதை போன்று முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்காது என XDA டெவலப்பர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட சிஸ்டம் செயலிகளை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும் என கூறப்படுகிறது.



    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டிஸ்ப்ளேவினை இயக்க முடியும், எனினும் இந்த நிலையில் பயனர்கள் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் மோட்டோ கேமரா உள்ளிட்டவற்றையே இயக்க முடியும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே டிராக்பேட் போன்றும் இயங்கும் என தெரிகிறது.

    இதை கொண்டு க்ரோம் பிரவுசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த டிஸ்ப்ளேவில் அதிகபட்சம் ஆறு க்விக் செட்டிங்களை காண்பிக்கும் என்றும் இவை டைல் வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. எனினும், இதை பயனர்கள் ஸ்கிரால் செய்ய முடியுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    மெயின் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளேக்களில் வெவ்வேறு வால்பேப்பர்களை வைத்துக் கொள்ள மோட்டோரோலா புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மோட்டோரோலா சில அம்சங்களை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    ×