search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கு காப்புரிமை பெறும் கூகுள்
    X

    மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவிற்கு காப்புரிமை பெறும் கூகுள்

    கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட இசட் ஃபோல்டு டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. #Google



    கூகுள் நிறுவனம் 'இசட் ஃபோல்டு' (Z-fold) எனும் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் டிஸ்ப்ளேவினை இருபுறங்களில் மடிக்கும் போது உடையாமல் இருக்கும் தன்மை கொண்டிருக்கிறது. 

    இந்த காப்புரிமையில் மொபைல்போன் பற்றி எவ்வித வார்த்தையும் இடம்பெறவில்லை. எனினும், இதன் டிஸ்ப்ளே அதிநவீன கம்ப்யூட்டிங் சாதனங்களில் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது டேப்லெட் அல்லது லேப்டாப்களில் பயன்படுத்த முடியும்.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் மீது கூகுள் நிறுவனத்திற்கான விருப்பம் மென்பொருள் வடிவமைப்பு சார்ந்ததாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் தனது ஸ்மார்ட்போன் மற்றும் அவற்றுக்கான டிஸ்ப்ளேக்களை சொந்தமாக உருவாக்குவதில்லை. இதனால் கூகுள் தனது மடிக்கக்கூடிய ஸ்கிரீனிற்கான உரிமைகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் வழங்கலாம்.



    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்வதை போன்று கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் உரிமையை ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் வழங்கியிருக்கிறது. முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஹெச்.டி.சி. மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் உற்பத்தி செய்தன.

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களுக்கான வசதியை கூகுள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வழங்கியது. இது மட்டுமின்றி கூகுள் நிறுவனம் சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இருநிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு சீராக வேலை செய்ய பணியாற்றியது.
    Next Story
    ×