என் மலர்
மொபைல்ஸ்
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டு விவரங்களை அறிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது.
ஆண்டு வருவாய் கூட்டத்தில் இதுபற்றி பேசிய சுந்தர் பிச்சை, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மக்களுக்கான சாதனமாக இருக்கும் என தெரிவித்தார். பீச்சர் போன் பயனர்களை பெருமளவு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வைக்க ஜியோபோன் நெக்ஸ்ட் பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சிக்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும். சந்தையில் மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் உருவாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கான புது டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு சார்ந்து உருவாகி இருக்கும் பிரகதி ஓ.எஸ். கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் பிராசஸர், வாய்ஸ் அசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 ப்ரோ சீரிஸ் மாடல்களில் டிமென்சிட்டி 920 சிப்செட் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களின் டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போதைய டீசர்களில் புதிய ரெட்மி நோட் 11 மாடல்கள் டிமென்சிட்டி 920 சிப்செட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா, டூயல் ஐ.எஸ்.ஓ. தொழில்நுட்பம், 2.1 ஒற்றை பிக்சல் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்கள் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி+ 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள் பிளாக், பர்பில் மற்றும் மிஸ்டி பாரஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 11 ப்ரோ கூடுதலாக மற்றொரு நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் 2022 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய பிளாக்ஷிப் மாடல்களில் அதிகபட்சம் 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், அடுத்த ஆண்டு இந்த நிலையை மாற்ற சாம்சங் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 45 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இதே தகவல் சீன வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த மாடலில் உள்ள 45 வாட் சார்ஜிங் ஸ்மார்ட்போனினை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும். முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.
ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் உயர்-ரக அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விலை மற்றும் ஹார்டுவேர் அம்சங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது. எனினும், இதன் வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது.

தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ரியல்மி 8 ப்ரோ மாடலில் புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது.
ஐகூ நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
ஐகூ நிறுவனம் தனது ஐகூ 7, ஐகூ 7 லெஜண்ட், ஐகூ இசட்3, ஐகூ இசட்5 மற்றும் ஐகூ 3 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12 பீட்டா வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான மாடல்களுக்கு டிசம்பர் 2021 வாக்கில் இந்த அப்டேட் கிடைத்துவிடும்.
எனினும், ஐகூ 3 மாடலுக்கு இந்த அப்டேட் 2022 மார்ச் மாத வாக்கில் தான் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு 12 பீட்டா இந்த ஸ்மார்ட்போன்களில் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என ஐகூ தெரிவித்து இருக்கிறது. பீட்டா வெளியீடு படிப்படியாக நடைபெறும். இதனால் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும்.

முன்னதாக விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 12 எப்போது கிடைக்கும் என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. வரும் நாட்களில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் புது அப்டேட் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்.
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனைக்கு திடீர் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. மொத்தம் 61 கேலக்ஸி போன் மாடல்களின் விற்பனையை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது.
பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. விற்பனை நிறுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் சுவிட்சர்லாந்தை பூர்விகமாக கொண்டு இயங்கி வரும் ஸ்க்வின் எஸ்.ஏ. எனும் நிறுவனத்தின் காப்புரிமைகளை மீறியது கண்டறியப்பட்டு இருக்கிறது.
சாம்சங் பே சேவை ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனத்தின் எலெக்டிரானிக் பேமண்ட் சிஸ்டத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் தனது எலெக்டிரானிக் பேமண்ட்ஸ் சிஸ்டம் உருவாக்கும் போது ஸ்க்வின் நிறுவனம் காப்புரிமை செய்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது.

ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனம் தனது பேமண்ட் சிஸ்டத்திற்கான காப்புரிமையை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யாவில் பதிவு செய்ததாக தெரிவித்து இருக்கிறது. சாம்சங் தனது பேமண்ட் சிஸ்டத்தை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து ரஷ்யாவில் இதனை 2016 வாக்கில் பயன்பாட்டிற்கு வழங்கியது.
நீதிமன்ற உத்தரவு படி 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜெ5 மாடலில் துவங்கி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ப்ளிப் 3 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நோக்கியா நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா சி30 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.82 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா சி30 அம்சங்கள்
- 6.82 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் வி நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன்
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
- ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ரய்டு 11
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை பால் நிகழ்வில் அறிமுகம் செய்தது. பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களிலும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 12, ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
பிக்சல் 6 மாடலில் 8 எம்பி செல்பி கேமரா, பிக்சல் 6 ப்ரோ மாடலில் 11 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொண்டிருக்கின்றன. பேட்டரியை பொருத்தவரை பிக்சல் 6 மாடலில் 4614 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.
பிக்சல் 6 மாடல் ஸ்டாமி பிளாக், கைண்டா கோரல் மற்றும் சோர்டா சீபோம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,970, 8 ஜிபி + 256 ஜிபி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் 6 ப்ரோ மாடல் ஸ்டாமி பிளாக், சோர்டா சன்னி மற்றும் கிளவுடி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி + 128 ஜிபி விலை 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 67,490 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,995 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி விலை 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை வை சீரிசில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ வை3எஸ் அம்சங்கள்
- 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
- ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 5 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
விவோ வை3எஸ் ஸ்மார்ட்போன் ஸ்டேரி புளூ, பியல் வைட் மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9490 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ ஸ்டோர், அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஸ்பேஷியல் ஆடியோ, புதிய ஸ்பீடுவார்ப் மோட் உள்ளது.

புதிய நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் கிராணைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 46,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 முதல் அக்டோபர் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது.
நத்திங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமான இரண்டு மாதங்களில் இந்த இயர்பட்ஸ் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் எசென்ஷியல் நிறுவன காப்புரிமைகளை நத்திங் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அதன்படி எசென்ஷியல் காப்புரிமைகளை கொண்டு நத்திங் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது. சில தினங்களுக்கு முன் குவால்காம் நிறுவன சிப்செட்களை தனது புதிய சாதனங்களில் பயன்படுத்த இருப்பதாக நத்திங் அறிவித்தது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பவர் 1 பெயரில் பவர் பேங்க் ஒன்றை நத்திங் உருவாக்கி வருவதாகவும், வரும் வாரங்களில் இது அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்தது. முன்னாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளம் ஒன்றில் இடம்பெற்று இருந்தது.
அதன்படி புதிய ஒப்போ கே9எஸ் மாடலில் 6.59 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் அல்லது மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் வூக் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பர்பில், நியான் சில்வர் மற்றும் அப்சிடியன் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.






