என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இது இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Pixel3a



    கூகுள் நிறுவன பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கூகுள் வலைதளத்திலேயே பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.

    பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 3 மாடலின் சிறிய ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் பிக்சல் 3ஏ என்ற பெயரில் ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு, பின் நீக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் ஸ்டோரின் போன்ஸ் (Phones) பிரிவின் கம்பேர் போன்ஸ் (Compare Phones) பிரிவில் காணப்பட்டது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கோடை காலத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கூகுள் நிறுவனம் 2019 I/O நிகழ்வை மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் பலமுறை வெளியானது. அதன்படி பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இருவித பதிப்புகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இவற்றில் ஸ்னாப்டிராகன் 670 ரக பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் OLED டிஸ்ப்ளே, 12 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் மீண்டும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyA20



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங் தற்சமயம் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது.

    கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது 123° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஏ20 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884 பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.1,500 குறைப்பதாக அறிவித்துள்ளது. 

    இத்துடன் நோக்கியா 6.1 பிளஸ் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 15 சதவிகிதம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    நோக்கியா 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    தற்போதைய விலை குறைப்பின் மூலம் இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக நோக்கியா 1 இருக்கிறது. 



    இதுமட்டுமின்றி விலைகுறைப்பு காரணமாக நோக்கியா 1 மாடல் ரெட்மி கோ மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. 

    நோக்கியா 1 மாடலுடன் நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.5499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.16,999 விலையில் கிடைக்கிறது. 

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விலை குறைப்பு மட்டுமின்றி ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் மூன்று பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO



    டெக்னோ மொபைல் இந்தியாவில் கேமான் ஐ4 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட், 2 ஜி.பி., 3 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி வெர்ஷனில் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

    செல்ஃபி எடுக்க முன்புறம் 16 எம்.பி. கேமரா, 6-லெவல் ஏ.ஐ. பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சார்ந்து இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    டெக்னோ கேமான் ஐ4 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU 
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்
    - 650MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹை ஓ.எஸ். 4.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 2 எம்.பி. கேமரா 
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    டெக்னோ கேமான் ஐ4 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அக்வா புளு, நெபுளா பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,599 என்றும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,599 என்றும் ஹீலியோ பி22 பிராசஸர் கொண்ட 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. #iPhone7



    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 மாடலை 2016 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், இந்த மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

    மேட் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐபோன் 7 மாடல் பெங்களூருவில அமைந்திருக்கும் விஸ்ட்ரன் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 



    தாய்வானை சேர்ந்த விஸ்ட்ரன் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தி்ற்கு ஒப்பந்த முறையில் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களை ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இதே ஆலையில், ஐபோன் 7 மாடலின் உற்பத்தி மார்ச் மாதத்தில் துவங்கியது.

    இந்தியாவில் ஐபோன் 7 உற்பத்தி துவங்கியிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்படும் வாய்ப்புகள் குறைவு தான் என கூறப்படுகிறது. முன்னதாக விஸ்ட்ரன் நிறுவன உற்பத்தி திறனை அதிகப்படுத்த ரூ.5000 கோடி முதலீடு செய்ய அனுமதி பெற்றிருந்தது.

    இந்திய உற்பத்தி மூலம் கிடைக்கும் தொகையை ஆப்பிள் நிறுவனம் விளம்பரம் மற்றும் விற்பனையில் முதலீடு செய்யலாம் என ஆப்பிள் வல்லுநர்கள் சார்பில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் ஐபோன் 7 (32 ஜி.பி.) மாடல் ரூ.39,990 மற்றும் ஐபோன் 7 (128 ஜி.பி.) மாடல் ரூ.49,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா, இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #NokiaX71



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    செல்ஃபி எடுக்க 16 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, 93 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், ஏ.ஐ. வசதி, 5 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா எக்ஸ்71 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.3:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8µm பிக்சல், 6P லென்ஸ், ZEISS ஆப்டிக்ஸ்
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு லென்ஸ்
    - 5 எம்.பி. கேமரா, f/2.4, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
    - நோக்கியா OZO ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. தாய்லாந்தில் இதன் விலை NT$ 11,990 (இந்திய மதிப்பில் ரூ.26,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் நோக்கியா 6.2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #OnePlus7



    சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சீன நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 7 விவரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் இந்த ஆண்டு மூன்று ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் 7, 5ஜி வேரியண்ட் மற்றும் ஒன்பிளஸ் 7டி என மூன்று மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி மாடலில் சிறிய ரக நாட்ச் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முற்றிலும் நாட்ச் இல்லா வடிவமைப்பை வழங்க ஒன்பிளஸ் முடிவு செய்திருக்கிறது.



    ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்க ஏதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்குகிறது. இதேபோன்ற தொழில்நுட்பத்தை விவோ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கியது. இந்த வடிவமைப்பின் மூலம் 100 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்க முடியும். ஒன்பிளஸ் 7 மாடலில் அந்நிறுவனம் 90 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    முந்தைய ஒன்பிளஸ் 6டி மாடலில் வழங்கப்பட்டதை போன்று புதிய ஒன்பிளஸ் 7 மாடலிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் 3டி சோனிக் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Waqar Khan/YouTube
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaOneVision



    மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை கூகுள் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

    மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வசதியை சப்போர்ட் செய்யும் சாதனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9610 சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் போன்று புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோ ஸ்மார்ட்போனில் மென்பொருள் அப்டேட்கள் வேகமாக கிடைக்கும்.



    மோட்டோரோலா ஒன் விஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 21:9 ரக ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 9610 சிப்செட்
    - ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் (சீனாவில் மட்டும்)
    - 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா 
    - ஹோல் பன்ச் டிஸ்ப்ளே 
    - டூயல் பிரைமரி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டால்பி ஆடியோ

    புகைப்படம் நன்றி: TigerMobiles
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இையத்தில் லீக் ஆகியுள்ளது. #NokiaX71



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏப்ரல் 2 ஆம் தேதி தாய்வானில் நிகழ்சிக்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்வில் அந்நிறுவனம் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 பிளஸ் மாடலுடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.  இதுதவிர புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2019) மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது. 

    இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. பென்ச்மார்க் தளத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் சோகனையில் 1455 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 5075 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 



    முன்னதாக நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் சீனாவில் கிளியரன்ஸ் சான்று பெற்றிருந்தது. பென்ச்மார்க் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6.1 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனி்ல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற நோக்கியா ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய மாடலிலும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் தற்சமயம் 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.  

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா மாட்யூல் வழங்கப்படும் என்றும் இதில் ஒன்று 48 எம்.பி. சென்சாராக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles
    ஒப்போவின் ரெனோ பிராண்டு ஸ்மார்ட்போனில் புதிய வகை பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட இருப்பது சமீபத்திய வீடியோவில் தெரியவந்துள்ளது. #OPPOReno



    ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் PCAM00 மற்றும் PCAT00 என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. சீனாவின் TENAA வலைதளத்தில் ரெனோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியானது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனோ ஸ்மார்ட்போனில் புதிய வடிவமைப்பு கொண்ட பிரத்யேக பாப்-அப் ரக கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. பின்புறம் இரண்டு பிரைமரி கேமராவும், டாப் எண்ட் மாடலில் 10X லாஸ்லெஸ் சூம் வசதி வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் இரண்டு வெர்ஷன்களிலும் சோனியின் IMX586 48 எம்.பி. சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன் 12 ஜி.பி. ரேமுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி 8GB RAM
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - பாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது. 
    சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் வெர்ஷன் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை மட்டும் புதிய வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சியோமி இதே ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோவினை வெளியிட்டது. இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக இந்த ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.



    சியோமியின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் வெளியாகி இருக்கும் வீடியோவில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போர்டிரெயிட் மோட் மற்றும் மடிக்கப்படாத நிலையில் ஒருவர் பயன்படுத்துவதும், ஸ்மார்ட்போனினை இருபுறங்களிலும் மடித்து அதனை நூடுல்ஸ் பெட்டியின் மேல் வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 

    இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் மென்பொருள் சீராக இயங்கவில்லை. ஸ்மார்ட்போன் மடிக்கப்படும் போது யு.ஐ. புதிய திரையின் அளவிற்கு மாற சிறிது நேரம் எடுத்துக் கொள்வது தெளிவாக தெரிகிறது. சந்தையில் அறிமுகமாகும் போது இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சியோமி தவிர சாம்சங், ஹூவாய் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன.

    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலின் புதிய வீடியோவை கீழே காணலாம்..,


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung



    சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் உருவாகி இருப்பதும், இதில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட் வழங்கப்படுவதும் தெரியவந்தது.

    தற்தமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் என்ட்ரி-லெவல் கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A260F என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ20 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் SM-A205F என்ற மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD 540x960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 வழங்கப்படுகிறது. முன்புற கேமரா பற்றி எவ்வித தகவலும் இல்லை. இவற்றுடன் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி ஏ2 கோர் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: Samsung
    ×