search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung



    சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் உருவாகி இருப்பதும், இதில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 சிப்செட் வழங்கப்படுவதும் தெரியவந்தது.

    தற்தமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் என்ட்ரி-லெவல் கேல்கஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A260F என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ20 என்ற பெயரில் அழைக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் SM-A205F என்ற மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் qHD 540x960 பிக்சல் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 1 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 5 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 வழங்கப்படுகிறது. முன்புற கேமரா பற்றி எவ்வித தகவலும் இல்லை. இவற்றுடன் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி ஏ2 கோர் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் என்பதால் இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் வழங்கப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: Samsung
    Next Story
    ×