என் மலர்

  தொழில்நுட்பம்

  கூகுள் வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்
  X

  கூகுள் வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaOneVision  மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை கூகுள் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

  மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வசதியை சப்போர்ட் செய்யும் சாதனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9610 சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

  மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் போன்று புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோ ஸ்மார்ட்போனில் மென்பொருள் அப்டேட்கள் வேகமாக கிடைக்கும்.  மோட்டோரோலா ஒன் விஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  - 21:9 ரக ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
  - எக்சைனோஸ் 9610 சிப்செட்
  - ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் (சீனாவில் மட்டும்)
  - 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
  - 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 48 எம்.பி. பிரைமரி கேமரா 
  - ஹோல் பன்ச் டிஸ்ப்ளே 
  - டூயல் பிரைமரி கேமரா
  - ஆண்ட்ராய்டு 9.0 பை
  - டால்பி ஆடியோ

  புகைப்படம் நன்றி: TigerMobiles
  Next Story
  ×