என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    டெலிகாம் துறையில் அதிநவீன தொழில்நுட்பமான 5ஜி சேவை சீனாவில் துவங்கப்பட்டது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



    இணைய தொழில்நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ள 5ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. 5ஜி சேவையில் இணைய வேகம் 4ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  

    கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அமெரிக்கா தனது 5ஜி மொபைல் சேவையை அடுத்த சில வாரங்களில் வெளியிட்டது. இந்தநிலையில் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    5ஜி கோப்புப்படம்

    சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவை பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு வந்த நிலையில், முதல்கட்டமாக சீனா அதனை தங்கள் நாட்டிலேயே அறிமுகம் செய்துள்ளது.

    5ஜி சேவை பெற குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1272 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான ரூ.6000 செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    விவோ நிறுவனத்தின் யு10 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    விவோ நிறுவனத்தின் புதிய யு10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட விவோ யு10 ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ யு10 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள விவோ யு10 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விவோ யு10

    விவோ யு10 சிறப்பம்சங்கள்:

    - 6.35 இன்ச் 1544x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ யு10 ஸ்மார்ட்போன் தன்டர் பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8,990 என்றும், 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,990 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ. 2 மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    பிரபல ஆப்பிள் வல்லுநர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜனவரி 2020 வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்து இருக்கும் தகவல்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்.இ. மாடல் பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

    முந்தையை ஐபோன் எஸ்.இ. வடிவமைப்பு ஐபோன் 5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டது. புதிய ஐபோன் எஸ்.இ. மாடல் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் பயனர்களுக்கு அப்கிரேடு ஆப்ஷனாக இருக்கும்.

    ஐபோன் எஸ்.இ. 2 ரென்டர்

    இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் புதிய ஏ13 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதே சிப்செட் தற்போதைய ஐபோன் 11 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் 3 ஜி.பி. ரேம் மற்றும் ஃபேஸ் ஐடி அம்சத்திற்கு மாற்றாக டச் ஐடி கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த வடிவமைப்பு வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.

    ஐபோன் எஸ்.இ. 2 மாடல் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,300) முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் சாம்சங் தனது எஸ் சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

    அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. புதிய விவரங்கள் ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி குவால்காம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 9830 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 பிளஸ் கோப்புப்படம்

    ஒவ்வொரு ஆண்டும் சாம்சங் இதே வழக்கத்தை பின்பற்றி வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் டிசம்பர் மாதம் நடைபெறும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சாம்சங் 9830 பிராசஸர் ஒன்றிரண்டு மாதங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    2020 கேலக்ஸி எஸ் சீரிஸ் மொத்தம் மூன்று மாடல்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு மாடலில் 5ஜி வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் LPDDR5 ரேம் மற்றும் UFS 3.0 மெமரி கொண்டிருக்கலாம்.
    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. நிறுவனத்தின் டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் அறிவிக்கப்பட்ட எல்.ஜி. டபுள்யூ30 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் எதுவும் அறிவி்க்கப்படவில்லை.

    அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் எல்.ஜி. டபுள்யூ30 ப்ரோ விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் துவங்கி இருக்கிறது. சிறப்பம்ங்களை பொருத்தவரை எல்.ஜி. டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக், பொக்கே எஃபெக்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    எல்.ஜி. டபுள்யூ30 ப்ரோ

    எல்.ஜி. டபுள்யூ30 ப்ரோ சிறப்பம்ங்கள்:

    - 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. வைடு ஆங்கில் சென்சார்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மிட்நைட் புளு மற்றும் மிட்நைட் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



    மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ததோடு மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

    மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 6.2 ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஹீலியோ பி70 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 117° அல்ட்ரா வைடு, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் முறையே 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோ ஜி8 பிளே

    மோட்டோ ஜி8 பிளே சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலிோ பி70 பிராசஸர்
    - ARM மாலி-G72 MP3 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிலாஷ், f/2.0, 1.25um பிக்சல்
    - 8 எம்.பி. 117° அல்ட்ரா வைடு கேமரா, 1.12µm பிக்சல், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2, 1.75um பிக்சல்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மோட்டோ இ6 பிளே

    மோட்டோ இ6 பிளே சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1520x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிலாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX2)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன் நைட் கிரே மற்றும் ராயல் மஜென்டா நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 240 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 17,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் ஸ்டீல் பிளாக், ஓசன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 121 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8,590) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடலின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.



    ஒப்போ நிறுவனத்தின் ஏ9 2020 மற்றும் ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சமீபத்தில் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மாடல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலையில் ரூ. 500 நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி விலை குறைப்புக்கு பின் ஸ்மார்ட்போன் ரூ. 11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    3 ஜி.பி. ரேம் வேரியண்ட் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்போ ஏ5 2020 4 ஜி.பி. ரேம் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ. 13,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனின் புதிய விலை அமேசான் மற்றும் ஒப்போ அதிகாரப்பூர்வ விற்பனை வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.

    ஒப்போ ஏ5 2020

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    12 எம்.பி. பிரைமரி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி மற்றும் முன்புற கேமராக்களில் EIS மற்றும் அல்ட்ரா நைட் மோட் 2.0 வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் டால்பி அட்மோஸ் ஆடியோ, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டி, ரிவர்ஸ் சார்ஜிங் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
    விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



    விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. டூயல் பாப்-அப் கேமரா கொண்ட வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பிரைமரி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்.பி. பிரைமரி சென்சாருடன் மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. விவோ வி17 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 27,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    முன்னதாக வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விலை குறைப்பு அமேசன், ப்ளிப்கார்ட் மற்றும் இதர முன்னணி வலைத்தளங்களில் அமலாகி இருக்கிறது. விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் கிளேசியர் ஐஸ் மற்றும் மிட் ஓசன் நிறங்களில் கிடைக்கிறது. 

    விவோ வி17 ப்ரோ

    விவோ வி17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் அல்ட்ரா ஃபுல்வியூ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - 45 எம்.பி. பிரைமி கேமரா, f/1.8
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.5
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
    - 8 எம்.பி. இரண்டாவது சென்சார், f/2.2
    - 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத், வைபை
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகி சில வாரங்களே ஆகியிருக்கிறது. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 90 ஹெர்ட்ஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனை விட சற்றே சிறிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

    ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்

    புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம். இவற்றில் மூன்று கேமராக்கள் செங்குத்தாகவும் இதன் அருகில் 3டி ToF சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார் காணப்படுகிறது. இதன் பவர் பட்டன் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

    வால்யூம் பட்டன்கள் இடதுபுறத்திலும், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மேம்பட்ட ஸ்பீக்கர் கிரில் ஸ்மார்ட்போனின் கீழ்பகுதியில் வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ஒன்பிளஸ் 8 ப்ரோ தகவல்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்றே தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: @OnLeaks 
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே மொபைல் போன் நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720 ஃப்ளிப் 4ஜி போன் மாடல்களுடன் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 110 (2019) மாடலில் 1.77 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளே, SPRD 6531E பிராசஸர், 4 எம்.பி. ரேம், 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள் கொண்டு இயங்கும் நோக்கியா 110 (2019) மாடலில் பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர், ஸ்னேக் கேம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் பிரைமரி கேமரா, 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 110 (2019)

    நோக்கியா 110 (2019) சிறப்பம்சங்கள்:

    - 1.77 இன்ச் 160x120 பிக்சல் QQVGA கலர் டிஸ்ப்ளே
    - நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள்
    - SPRD 6531E பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி
    - எஃப்.எம். ரேடியோ
    - டார்ச்லைட்
    - சிங்கில் / டூயல் சிம்
    - மைக்ரோ யு.எஸ்.பி. 2.0
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 110 (2019) மாடல் ஓசன் புளு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்குகிறது.

    நுபியா பிராண்டு ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிராண்டு இந்தியாவில் ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

    புதிய ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழஙஅகப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 27 வாட் குவிக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    நுபியா ரெட் மேஜிக் 3எஸ்

    நுபியா ரெட் மேஜிக் 3எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.65 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
    - 675 மெகாஹெர்ட்ஸ் அட்ரினோ 640 GPU
    - 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - 12 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.1
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், முன்புறம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 27 வாட் 27W QC4.0, யு.எஸ்.பி.-பி.டி. ஃபாஸ்ட் சார்ஜிங்

    நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் மெக்கா சில்வர், சைபர் ஷேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 47,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி ப்ளி்ப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 8 ப்ரோ இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.

    முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 

    ரெட்மி நோட் 8 ப்ரோ

    ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
    - 800MHz மாலி-G76 3EEMC4 GPU
    - 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 2 எம்.பி. கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அக்டோபர் 21 ஆம்  தேதி துவங்குகிறது.
    ×