என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பேக் மற்றும் க்ரிஸ்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 5எஸ்

    ரியல்மி 5எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.0 மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, EIS
    - 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 1.75μm பிக்சல், f/2.4
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ. க்ரிஸ்டல் பர்ப்பிள் மற்றும் க்ரிஸ்டல் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செ்யயப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் ஹாலிவுட் திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை தழுவிய வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் சாதனத்துடன் பிரத்யேக கேஸ், மெட்டல் பேட்ஜ், எஸ் பென் மற்றும் கேலக்ஸி பட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

    இத்துடன் ஸ்டார் வார்ஸ் தீம் கொண்ட வால்பேப்பர், ஷட்-டவுன் அனிமேஷன், ஐகான் மற்றும் சிறப்பு சத்தங்கள் இடம்பெற்றிருக்கிறது. சாம்சங் மற்றும் லுகாஸ்ஃபிலிம் நிறுவனங்களிடையே கையெழுத்தான வியாபார ரீதியிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

    கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 1,299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 93,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் புதிய யு20 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய டீசரின் படி விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.

    விவோ யு20 டீசர்

    இந்திய சந்தையில் ரூ. 10,000 முதல் ரூ. 12,000 பட்ஜெட்டில் பெரிய டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று என விவோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என உறுதியாகிவிட்டது.

    புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. எனினும், 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படலாம்.  
    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் எஸ்5 லைட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5 இயங்குதளம் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், லோ-லைட் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட்

    இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
    - மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - லோ-லைட் சென்சார்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5
    - ஃபேஸ் அன்லாக்
    - கைரேகை சென்சார்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனத்தின் எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஸ்5 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9, 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் எஸ்5 ஸ்மார்ட்போன் 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ எஸ்5

    விவோ எஸ்5 சிறப்பம்சங்கள்:

    - 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஒ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, f/2.48
    - 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
    - 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, f/2.45
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 27,640) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30,715) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் 2019 ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு ரேசர் 2019 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. 

    மோட்டோரோலா ரேசர் என அழைக்கப்படும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது. 

    இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:

    – 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
    – 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
    – ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
    – 6 ஜி.பி. பேம்
    – 128 ஜி.பி. மெமரி
    – 16 எம்.பி. f/1.7 கேமரா
    – 5 எம்.பி. கேமரா
    – ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
    – 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
    – இசிம் வசதி
    – ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை

    புதிய மோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போனின் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,07,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேசர் 2019 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    அசுஸ் நிறுவனத்தின் 6இசட் மற்றும் 5இசட் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.



    அசுஸ் நிறுவனம் இந்தியாவில் 6இசட் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 7 மாடலுக்கு போட்டியாக ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. பின் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், அசுஸ் நிறுவனம் தனது 6இசட் ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் தவிர 5இசட் ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 

    அசுஸ் 5இசட்

    வெளியீட்டை தொடர்ந்து ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 4000 விலை குறைக்கப்பட்டு ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் 6இசட் பேஸ் மாடல் விலை ரூ. 27,999 என மாறி இருக்கும் நிலையில், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 30,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    இத்துடன் அசுஸ் 6இசட் டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 5000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போன் விலை மார்ச் மாதத்தில் ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில், இதன் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அசுஸ் 5இசட் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 விலையிலும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 6000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் 108 எம்.பி. கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய விவரங்கள் மூன்றாவது ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவிற்கான சாம்சங் கேமரா செயலியில் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. கேமரா செயலியில் 12000 - 9000 பிக்சல் ரெசல்யூஷனை சப்போர்ட் செய்கிறது. 

    செயலியின் குறியீடுகளில் கேலக்ஸி எஸ்11 என குறிப்பிடப்படவில்லை என்றாலும் 108 எம்.பி. சென்சார் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. கேமராவுடன் 5X ஆப்டிக்கல் சூம் லென்ஸ் வழங்கப்படுகிறது.

    எக்ஸ்.டி.ஏ. ஸ்கிரீன்ஷாட்

    சாம்சங் ஸ்மார்ட்போனின் கேமரா Mi மிக்ஸ் ஆல்ஃபா மற்றும் Mi நோட் 10 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருந்ததை போன்று 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது குறைந்த வெளிச்சத்திலும் அதிக தெளிவான புகைப்படங்களை எடுக்கும்.

    108 எம்.பி. ISOCELL சென்சார் புகைப்படங்களை 27 எம்.பி. தரத்தில் வழங்கும். இது அனைத்து விதமான வெளிச்சங்களிலும் புகைப்படத்தின் தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9830 ஆக்டா-கோர் பிராசஸரும், அமெரிக்காவில் வெளியாகும் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி8 பிளே மற்றும் ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை உணர்த்தும் வகையில் மோட்டோ ஜி8 விளம்பர வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    விளம்பர வீடியோவின் படி மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. + 4 எம்.பி. சென்சார் மற்றும் ஏ.ஐ. அம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி8 பிளாக், ரெட் மற்றும் புளு என மூன்று நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    மோட்டோ ஜி8 லீக்

    இவைதவிர மோட்டோ ஜி8 சிறப்பம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் மோட்டோ ஜி8 பிளஸ் மாடலை விட புதிய மோட்டோ ஜி8 குறைந்த திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. ஆக்‌ஷன் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்த ரெனோ 2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 2எஃப் மற்றும் ரெனோ 2இசட் மாடல்களின் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பை தொடர்ந்து ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் ரூ. 23,990 விலையிலும், ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் ரூ. 27,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆஃப்லைன் தளங்களில் விலை குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலை விரைவில் மாற்றப்படலாம்.

    ஒப்போ ரெனோ 2எஃப், ரெனோ 2இசட்

    ஒப்போ ரெனோ 2எஃப் சிறப்பம்சங்கள்:

    ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் AMOLED, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ், 2 எம்.பி. சென்சார், f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ 2இசட் சிறப்பம்சங்கள்:

    ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் AMOLED, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி90 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மோனோகுரோம் சென்சார், 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.

    புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. 1/1.33-இன்ச் சென்சார், f/1.69 அப்ரேச்சர் 7P லென்ஸ், OIS, 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் என மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சியோமி Mi சிசி9 ப்ரோ

    சியோமி Mi சிசி9 ப்ரோ சிறப்பம்சங்கள்

    – 6.47 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    – அட்ரினோ 618 GPU
    – 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    – 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    – 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    – 256 ஜி.பி. UFS 2.1 மெமரி
    – டூயல் சிம்
    – MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0
    – 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    – இன்ஃப்ராரெட் சென்சார்
    – 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    – யு.எஸ்.பி. டைப்-சி
    – 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அரோரா கிரீன் மற்றும் ஸ்னோ அரோரா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 28,235) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 31,280) என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 35,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



    இந்தியாவில் விவோ வை91 மற்றும் வை91ஐ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ. 10,990 மற்றும் ரூ. 7,990 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் மே மாதத்தில் இவற்றின் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இரு ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

    விவை வை91 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,490க்கும், விவோ வை91ஐ 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 6,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது முந்தைய விலையை விட ரூ. 500 குறைவு ஆகும். ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இவற்றின் விலை விரைவில் மாற்றப்படும் என்றும் ஆஃப்லைனிலும் இந்த விலையிலேயே விற்பனை செய்யப்படும்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வை91 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக ஹாலோ ஃபுல்வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 4.5, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    விவோ வை91ஐ

    இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க 8 எம்.பி. முன்பக்க கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி, பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ வை91ஐ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது. 
    ×