search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி Mi சிசி9 ப்ரோ
    X
    சியோமி Mi சிசி9 ப்ரோ

    108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா கொண்ட Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    சியோமி நிறுவனத்தின் Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் பேக், என்.எஃப்.சி., 1சிசி லவுட் ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 65 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடும்.

    புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. 1/1.33-இன்ச் சென்சார், f/1.69 அப்ரேச்சர் 7P லென்ஸ், OIS, 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சாம்சங் SAK2L3 சென்சார், f/2.0, 2x சூம், 8 எம்.பி. 1/3.6-சென்சார், f/2.0, டெலிபோட்டோ லென்ஸ், OIS, 5X ஆப்டிக்கல், 10X ஹைப்ரிட் மற்றும் 50X டிஜிட்டல் சூம், 20 எம்.பி. 1/2.8 இன்ச் சென்சார், f/2.2, 117 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. f/2.4 அப்ரேச்சர், மேக்ரோ லென்ஸ் என மொத்தம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சியோமி Mi சிசி9 ப்ரோ

    சியோமி Mi சிசி9 ப்ரோ சிறப்பம்சங்கள்

    – 6.47 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    – அட்ரினோ 618 GPU
    – 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    – 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    – 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
    – 256 ஜி.பி. UFS 2.1 மெமரி
    – டூயல் சிம்
    – MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0
    – 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    – இன்ஃப்ராரெட் சென்சார்
    – 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    – யு.எஸ்.பி. டைப்-சி
    – 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அரோரா கிரீன் மற்றும் ஸ்னோ அரோரா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 28,235) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 31,280) என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 35,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×