என் மலர்
மொபைல்ஸ்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10 போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் வடிவமைப்பு, பின்பறம் சதுரங்க வடிவ கேமரா பம்ப் வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன் சில நாடுகளில் கேலக்ஸி எஸ்10 லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
முன்னதாக வெளியான கேலக்ஸி எஸ்11 ரென்டர்களும் தற்சமயம் வெளியாகி இருக்கும் ரென்டர்களுக்கும் பல அம்சங்கள் ஒற்றுபோகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிளாஸி ஃபினிஷ் மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. பின்புறம் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் காணப்படுகிறது.

புதிய ரென்டர்களில் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன் இருவித அளவுகளில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு வேரியண்ட் மூன்று கேமரா சென்சார்களையும் மற்றொன்று நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இதில் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன் கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மைக்ரோபோன் மாட்யூல் வழங்கப்படுகிறது. எனினும் இதில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் காணப்படவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.
இதுவரை வெளியான தகவல்களின் படி கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க பின்புறம் 48 எம்.பி. சென்சார், 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெரிடரி சென்சார் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம்.
புகைப்படம் நன்றி: OnLeaks/ 91Mobiles
விவோ நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி விவோ எஸ்1 மற்றும் விவோ வி15 ப்ரோ மாடல்களின் விலை குறைந்துள்ளது.
விவோ நிறுவனம் தனது எஸ்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவி்ல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.
விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் இந்தியாவில் ரூ. 28,990 விலையில் வெளியானது. இந்நிலையில் இதன் விலை ரூ. 19,990 என மாற்றப்பட்டுள்ளது.
விலை குறைப்பின் படி விவோ எஸ்1 (4 ஜி.பி. + 128 ஜி.பி.) விலை ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 6 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரூ. 28,990 விலையில் வெளியிடப்பட்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே இருமுறை குறைக்கப்பட்டு ரூ. 23,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இதன் விலை ரூ. 4000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவற்றின் விலை ரூ. 19,990 மற்றும் ரூ. 26,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.
விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 2.5d வளைந்த பேக் பேனல், நானோ-ஐயன் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக ஸ்மார்ட் பட்டன், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் விவோவின் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியான மூன்றே மாதங்களில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் மாத வாக்கில் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் வெளியானது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது.
புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் விலை குறைத்து 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 13,250) விலையில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 8 விலை ரூ. 12,999 முதல் துவங்குகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. + 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட வி17 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
விவோ நிறுவனத்தின் வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவோ வி17 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி17 ரஷ்ய மாடலில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் சூப்பர் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் வி17 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி17 சிறப்பம்சங்கள்:
- 6.38 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 8 ஜி.பி. LPPDDR4x ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 8 ப்ரோ எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரெட்மி நோட் 8 காஸ்மிக் பர்ப்பிள் நிறத்தில் அறிமுகம் செய்தது.
ரெட்மி நோட் 8 ப்ரோ எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் விலை ரூ. 14,999 முதல் துவங்குகிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெறுகிறது. புதிய எலெக்ட்ரிக் புளூ வேரியண்ட் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹாலோ வைட், காமா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 8 ப்ரோ இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.
முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனினை காஸ்மிக் பர்ப்பிள் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளூ, மூன்லைட் வைட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
புதிய காஸ்மிக் பர்ப்பிள் வேரியண்ட் விற்பனை அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோரில் நவம்பர் 29-ம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 9,999 முதல் துவங்குகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் இருபுறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழ்கப்பட்டுள்ளது. ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 மற்றும் நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சீரிசை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதுவரை நடைபெற்ற விற்பனைகளில் ரெட்மி நோட் 8 சீரிஸ் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் இந்திய விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை ஒரு மாதத்தில் கடந்துள்ளது.
இது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களை உள்ளடக்கியது என சியோமி தெரிவித்துள்ளது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. + 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளூ, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் காமா கிரீன், ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999, டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், தனது சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய சலுகைகளின் படி ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய சலுகை டிசம்பர் 2 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 5000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 39,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஃபிளாக்ஷிப் வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 3000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நெபுளா புளூ, அல்மாண்ட் மற்றும் மிரர் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7000 வரை தள்ளுபடி பெற முடியும்.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஃபிளாக்ஷிப் வேரியண்ட் ரூ. 37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் டீசர் மூலம் அறிவித்துள்ளது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு நிகழ்வு எகிப்து நாட்டின் கைரோவில் நடைபெற இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இதே தேதியில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. சமீபத்தில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனில் சிறிய வாட்டர் டிராப் நாட்ச், FHD+HDR10 பியூர்டிஸ்ப்ளே, மேம்பட்ட பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்கப்படலாம்.
இத்துடன் வேகமான ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், நோக்கியா 8.1 மாடலில் வழங்கப்பட்டதை விட அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.
நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாம். இதிலும் முந்தைய மாடலில் வழங்கப்பட்டுள்ளதை விட வேகமான பிராசஸர், பெரிய பேட்டரி, மேம்பட்ட கேமரா, சிறிய HD+ ஸ்கிரீன் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன் மாடல்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ்களை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடல்களை போன்று புதிய பேட்டரி கேஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு அவற்றின் பேட்டரி ஆயுளையும் நீட்டிக்கிறது.
ஸ்மார்ட் பேட்டரி கேஸ் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மென்மையான மைக்ரோஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் எடை குறைவாக இருப்பதோடு அதிக உறுதியாகவும் இருக்கிறது. இது லைட்னிங் உதிரிபாகங்களான இயர்பாட்ஸ் போன்ற சாதனங்களுக்கும் சப்போர்ட் செய்கிறது.
ஐபோன் எக்ஸ்.எஸ். மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ் மாடல்களுக்கு வெளியான ஸ்மார்ட் பேட்டரி கேஸ்களை போன்று புதிய பேட்டரி கேஸ் பின்புறம் பேட்டரி பம்ப் கொண்டிருக்கிறது. மூன்றாம் தரப்பு பேட்டரி கேஸ் போன்று இல்லாமல், அதிகாரப்பூர்வ கேஸ் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இது போன் மற்றும் கேஸ் என இரண்டிலும் இருக்கும் பேட்டரி அளவுகளை காண்பிக்கிறது. இந்த கேஸ் யு.எஸ்.பி. பி.டி. ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கிறது. மேலும் ஸ்மார்ட் பேட்டரி கேஸ் பிரத்யேக கேமரா ஷட்டர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
இது போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், கேமராவை இயக்கும். சிறிய க்ளிக் மூலம் போட்டோ எடுக்கவும், நீண்ட க்ளிக் செய்தால் வீடியோவை எடுக்க முடியும். புதிய ஸ்மார்ட் பேட்டரி கேஸ் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு 50 சதவிகிதம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ்களுக்கான ஸ்மார்ட் பேட்டரி கேஸ் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் இதன் விலை 129 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 9300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் இந்திய விலை மற்றும் விற்பனை பற்றி எவ்வித தகவலும் இல்லை.
ஹானர் பிராண்டு 20ஐ ஸ்மார்ட்போனின் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் விலையயை குறுகிய காலத்திற்கு குறைத்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. என ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகமான ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்சமயம் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் வேரியண்ட் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹானர் 20ஐ 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் மற்ற வேரியண்ட்கள் (ஃபேண்டம் புளூ மற்றும் கிரேடியன்ட் ரெட்) விலை குறைக்கப்படவில்லை. இதனால் மிட்நைட் பிளாக் வேரியண்ட் புதிய விலை ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
3டி லித்தோகிராஃபி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனில் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து நோக்கியா 2.2 விலை மீண்டும் குறைக்கப்படுகிறது.
விலை குறைப்பின் படி நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை நோக்கியா இந்தியா ஆன்லைன் தளம், ஃப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,699 விலையிலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8699 விலையில் வெளியிடப்பட்டது. கடந்த மாதம் இதன் விலை குறைக்கப்படு ரூ. 6,599 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டகளை வழங்குவதாக அறிவித்தது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். மோட், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.






