search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 8
    X
    ரெட்மி நோட் 8

    மூன்று மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையான ரெட்மி நோட் 8 சீரிஸ்

    ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியான மூன்றே மாதங்களில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் மாத வாக்கில் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் வெளியானது.

    இந்நிலையில், சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது.

    புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் விலை குறைத்து 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 13,250) விலையில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 8 விலை ரூ. 12,999 முதல் துவங்குகிறது.

    ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை விவரம்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என மொத்தம் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. + 8 எம்.பி. + 2 எம்.பி. + 2 எம்.பி. என நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×