என் மலர்

  தொழில்நுட்பம்

  நோக்கியா டீசர்
  X
  நோக்கியா டீசர்

  விரைவில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் டீசர் மூலம் அறிவித்துள்ளது.

  புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு நிகழ்வு எகிப்து நாட்டின் கைரோவில் நடைபெற இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இதே தேதியில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. சமீபத்தில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது.

  நோக்கியா டீசர்

  இந்த ஆண்டு ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனில் சிறிய வாட்டர் டிராப் நாட்ச், FHD+HDR10 பியூர்டிஸ்ப்ளே, மேம்பட்ட பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்கப்படலாம்.

  இத்துடன் வேகமான ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், நோக்கியா 8.1 மாடலில் வழங்கப்பட்டதை விட அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.

  நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யலாம். இதிலும் முந்தைய மாடலில் வழங்கப்பட்டுள்ளதை விட வேகமான பிராசஸர், பெரிய பேட்டரி, மேம்பட்ட கேமரா, சிறிய HD+ ஸ்கிரீன் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×