search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விவோ வி15 ப்ரோ
    X
    விவோ வி15 ப்ரோ

    இந்தியாவில் இரு விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

    விவோ நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி விவோ எஸ்1 மற்றும் விவோ வி15 ப்ரோ மாடல்களின் விலை குறைந்துள்ளது.

    விவோ நிறுவனம் தனது எஸ்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவி்ல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.

    விவோ எஸ்1 ஸ்மார்ட்போனுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் இந்தியாவில் ரூ. 28,990 விலையில் வெளியானது. இந்நிலையில் இதன் விலை ரூ. 19,990 என மாற்றப்பட்டுள்ளது.

    விலை குறைப்பின் படி விவோ எஸ்1 (4 ஜி.பி. + 128 ஜி.பி.) விலை ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 6 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ரூ. 28,990 விலையில் வெளியிடப்பட்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே இருமுறை குறைக்கப்பட்டு ரூ. 23,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இதன் விலை ரூ. 4000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவற்றின் விலை ரூ. 19,990 மற்றும் ரூ. 26,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    விவோ எஸ்1

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.

    விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி  கேமரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 2.5d வளைந்த பேக் பேனல், நானோ-ஐயன் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக ஸ்மார்ட் பட்டன், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் விவோவின் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×