என் மலர்
மொபைல்ஸ்
விவோ நிறுவனத்தின் எக்ஸ்30 மற்றும் எக்ஸ்30 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விவோ நிறுவனத்தின் எக்ஸ்30 மற்றும் எக்ஸ்30 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 32 எம்.பி. பிரைமரி கேமரா, சாம்சங் எக்சைனோஸ் 980 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்.10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனில் கூடுதலாக 13 எம்.பி. பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கிளாஸ் பேக், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4350 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்30 மற்றும் எக்ஸ்30 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 980 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 8 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 2.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 10
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 32 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ், f/2.0
- 13 எம்.பி. பெரிஸ்கோப் லென்ஸ், f/3.0
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4350 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ எக்ஸ்30 மற்றும் எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 3298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 33,450), 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 36,490) என்றும் எக்ஸ்30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் 3998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 40,550) 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடல் 4298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 43,950) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போன் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன. இதில் ஸ்மார்ட்போன் விவரங்கள் ஓரளவு வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இதுரை வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், பின்புற கேமராக்களில் 3D ToF சென்சொர் ஒன்றும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

புதிய புகைப்படங்களில் கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 3D கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான ரென்டர்களில் கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
சென்சார் ளை பொருத்தவரை கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, 5x சூம் வசதி கொண்ட டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனிலும் 108 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, முன்புறம் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, எக்சைனோஸ் 9830 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 3000 வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி தற்சமயம் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் வழங்கப்படுகிறது. இதுவும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகையின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3000 உடனடி கேஷ்பேக், கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

தள்ளுபடியை தொடர்ந்து கேலக்ஸி ஏ50எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. பிளாக் மற்றும் வைலட் நிற மாடல் ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது. மற்ற மாடல்கள் ரூ. 20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ50எஸ் வைட் நிற எடிஷன் ரூ. 2000 விலை குறைக்கப்பட்டு 4 ஜி.பி. மாடல் ரூ. 18,999, 6 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் ரூ. 25,999, 8 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரெட், ப்ரிசம் கிரஷ் பிளாக் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
விவோ நிறுவனத்தின் இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் நவிலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டது.
தற்சமயம் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது. விவோ இசட்1 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ இசட்1 ப்ரோ டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட் மட்டும் விலை குறைக்கப்படாமல் ரூ. 15,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ்., 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமராசென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 4D கேமிங் அனுபவம் வழங்கப்படுகிறது.
இது கேமின் போக்கிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை வைப்ரேட் செய்யும். பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியண்ட் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. இரு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, கிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ், கேலக்ஸி எஸ்11இ ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களும் அவ்வப்போது வெளியாகியுள்ளன.
சாம்சங் வழக்கப்படி புதிய கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2020) நிகழ்வுக்கு முன் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 18, 2020 தேதியில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதும், இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகமாகிவிடும். அடுத்த ஆண்டு சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3D டைம் ஆஃப் ஃபிளைட் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எஸ்11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.9 இன்ச் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: OnLeaksx@Pricebaba
விவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வேரியண்ட்டில் 8 ஜி.பி. ரேமுடன் 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமாரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ யு20 ஸ்மார்ட்போனில் வளைந்த பிளாஸ்டிக் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
விவோ யு20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ யு20 சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ யு20 ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. புதிய 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 பற்றிய விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.
2016 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களில் ஹெட்போன் ஜாக் அம்சத்தை முதல் முறையாக நீக்கியது. அதன்பின் அந்நிறுவனம் வெளியிட்ட ஐபோன்களில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை. அந்த வரிசையில் ஐபோன் எஸ்.இ. 2 மாடலிலும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐபோனில் ஆடியோ அம்சத்தை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் லைட்னிங் கேபிள் அல்லது ப்ளூடூத் போன்ற வசதிகளை பயன்படுத்த வேண்டி இருக்கும். மேலும் இந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதே சிப்செட் சமீபத்திய 10.2 இன்ச் ஐபேட் 2019 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சிப்செட் ஐபோன் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
இதுதவிர புதிய ஐபோன் மாடலில் 3 ஜி.பி. ரேம், டச் ஐடி கைரேகை சென்சார், லிக்விட் க்ரிஸ்டல் பாலிமர் ஆன்டெனா டிசைன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த டிசைன் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் வசதியை அதிகளவு மேம்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.
ஐபோன் எஸ்.இ. 2 மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் எஸ்.இ. 2 பிளஸ் ஸ்மார்ட்போனினை 2021 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய சாதனத்தில் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய மாடலின் பவர் பட்டனில் டச் ஐடி வசதியை வழங்க ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் புதிய வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய விவோ வி17 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 9 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 120° அல்ட்ராவைடு சென்சார், 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட்களை கொண்டிருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி17 சிறப்பம்சங்கள்:
- 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 9.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.78, 0.8μm பிக்சல், EIS, 6P லென்ஸ், டூயல் LED ஃபிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.4
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 4500 எம்ஏஹெச். பேட்டரி
- 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் விவோ வி17 ஸ்மார்ட்போன் கிளேசியர் ஐஸ் வைட் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 22990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு இன்று துவங்கியுள்ள நிலையில், விற்பனை டிசம்பர் 17 ஆம் தேதி துவங்குகிறது.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனுடன் ரியல்மி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனமும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக், வைட் மற்றும் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 4.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்.டி. 730ஜி சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
- டூயல் சிம்
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 119° 1/3.13″ அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
- 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், f/2.4, 1.75μm பிக்சல்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 30 வாட் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2.3 சிறப்பம்சங்கள்:
- 6.2-இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 109 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,625) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மோட்டோரோலா நிறுவனம் முதல் முறையாக பாப் அப் ரக செல்ஃபி கேமராவினை வழங்கி இருக்கிறது.
மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் கேமரா எக்ஸ் ஏ.பி.ஐ. வழங்கப்பட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மோட்டோரோலாவின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஹைப்பர் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஸ்கிரீன்
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
- அட்ரினோ 612 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10
- 64 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, EIS, PDAF
- 8 எம்.பி. 118-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, லேசர் ஆட்டோஃபோகஸ் (TOF)
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 45வாட் ஹைப்பர் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் டீப்சீ புளூ, டார்க் ஆம்பர் மற்றும் ஃபிரெஷ் ஆர்ச்சிட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. வரும் மாதங்களில் மற்ற பகுதிகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






