என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஐபோன்களில் சிறிய நாட்ச் கொண்ட வடிவமைப்பு வழங்கப்படும் என்றும் 2021 மாடல்களில் நாட்ச் முழுமையாக நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 2020 சீரிஸ் உயர் ரக மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் 2020 ஐபோனில் டச் ஐடி சென்சார் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்பட்டு, ஃபேஸ் ஐடி அம்சம் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான உயர் ரக ஐபோன் மாடலில் வழங்குவதற்கான ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை இறுதி செய்யும் பணிகளில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஐபோன் 11 சீரிஸ்

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் மாடல்களில் டிஸ்ப்ளே நாட்ச் இல்லாமல் மூன்று வடிவமைப்புகளுக்கு ஆப்பிள் காப்புரிமை கோரியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    ஃபுல் ஸ்கிரீன் ஐபோன் பற்றிய விவரங்களுடன், ஃபேஸ் ஐடி அம்சம் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபேஸ் ஐடி அம்சத்தை கொண்டு ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சேவைகளை உருவாக்கி இருப்பதோடு, இதற்கென அதிகளவு முதலீடுகளை செய்திருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் உண்மையில் நீக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியானது. இத்துடன் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மொத்தம் மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கியது முதல் ஏற்கனவே சிலமுறை நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு முதற்கட்டமாக அமேசான் தளத்தில் மட்டும் அமலாகி இருக்கிறது. விரைவில் மற்ற தளங்களிலும் அமலாகும் என தெரிகிறது. தவிர இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா இ ஸ்டோரில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கவில்லை. 

    நோக்கியா 4.2 விலை குறைப்பு

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,990 விலையில் வெளியாகி முதற்கட்டமாக ரூ. 500 விலை குறைக்கப்பட்டது. பின் செப்டம்பர் 2019 இல் இதன் விலை மீண்டும் குறைக்கப்பட்டு ரூ. 9,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்சமயம் நோக்கியா 4.2 விலை குறைக்கப்பட்டுள்ளது.

    குறைக்கப்பட்ட புதிய விலை விரைவில் ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இந்தியா இ ஸ்டோரில் விரைவில் மாற்றப்படும் என தெரிகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கிளாஸ் பேக் கொண்டிருக்கும் நோக்கியா 4.2 மாடலில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், பவர் பட்டனில் நோட்டிஃபிகேஷன் லைட், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் 2020 ஏ5 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முழு விவரங்களை பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ5 2020 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய வேரியண்ட்டில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், நான்கு பிரைமரி கேமராக்கள், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஏ5 2020

    ஒப்போ ஏ5 2020 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்.பி. மோனோகுரோம் கேமரா
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ரய்டு 9 மற்றும் கலர் ஒ.எஸ். 6.0.1
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ரிவர்ஸ் சார்ஜிங் வசதி


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் பிப்ரவரி 11-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் பிப்ரவரி 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.

    புதிய 2020 கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெறும் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்கள் தவிர 2020 கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனையும் சாம்சங் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்றே கேலக்ஸி எஸ்11 மாடல்களும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2020 விழாவுக்கு முன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகம் செய்வதன் மூலம் போட்டி நிறுவனங்களுக்கு முன்னதாகவே 2020 ஃபிளாக்‌ஷிப் போன்களை சாம்சங் அதிகளவு விளம்பரப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ரென்டர்கள்

    கேலக்ஸி எஸ்11 சீரிஸ்: கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்11இ என மூன்று மாடல்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இவற்றின் வடிவமைப்புகளில் அதிகளவு மாற்றம் செய்யப்படாது என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்11 மாடல்களுடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனினையும் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஃபோல்டு மாடல் பார்க்க 2019 மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனகள் தவிர கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனையும் சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் விற்பனை துவங்கியுள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்களை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்து வந்தது. அறிமுகமாகி இரண்டு மாதங்களாக ஃபிளாஷ் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்சமயம் இவை ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அந்த வகையில் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ துவங்க விலை ரூ. 14,999 என்று்ம ரெட்மி நோட் 8 ரூ. 9,999 என்றும் ரெட்மி 8 விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி 8 சீரிஸ் ஓபன் சேல்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 8 ப்ரோ இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.

    முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. 

    ரெட்மி நோட் 8 சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 8

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் இருபுறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழ்கப்பட்டுள்ளது. ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி 8 ஸ்மார்ட்போனி்ல் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஔரா மிரர் வடிவமைப்பு, பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கில் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. நோக்கியா 1.3 எனும் பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் என்ட்ரி லெவல் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் என கூறப்படுகிறது.

    ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி. வலைத்தளத்தில் லீக் ஆகியிருக்கும் விவரங்களின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் TA-1123 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர், 4ஜி கனெக்டிவிட்டி, ப்ளூடூத் 4.2 வசதி கொண்டிருக்கிறது.

    முந்தைய சாதனங்களை போன்று புதிய ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படலாம். இதனால் புதிய ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் விரைவாக வழங்கப்படலாம்.

    இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை, எனினும் இது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பாபர்க்கப்படுகிறது.

    நோக்கியா

    சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. என்ட்ரி லெவல் அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,199 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    விவோ நிறுவனத்தின் புதிய வை11 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனம் தனது வை11 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் வடிவமைப்பு பார்க்க விவோ ஏற்கனவே அறிமுகம் செய்த வை12 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வை11 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ ஃபுல்வியூ எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பின்புறம் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமராக்களுடன் ஏ.ஐ. வசதி, பல்வேறு போட்டோ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ வை11

    விவோ வை111 சிறப்பம்சங்கள்:

    - 6.35 இன்ச் 1544x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஒ.எஸ். 9.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ வை11 ஸ்மார்ட்போன் மினரல் புளூ மற்றும் அகேட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

    இவற்றின் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாஸ்டர் எடிஷன் ரெட் ப்ரிக் மற்றும் கான்க்ரீட் நிற வேரியண்ட் ரூ. 34,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

    ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளூயிட் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
    - டூயல் சிம்
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1/3.4″, 1μm பிக்சல், f/2.5
    - 8 எம்.பி. 115° 1/3.13″ அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.4μm பிக்சல், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 50 வாட் சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ நிறுவனத்தின் ஏ91 மற்றும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனம் சீனாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஏ8 மற்றும் ஒப்போ ஏ91 என அழைக்கப்படுகிறது. உயர் ரக ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் நான்கு கேமரா யூனிட் மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. 

    ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி சென்சாருடன் 2 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஏ91

    ஒப்போ ஏ91 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டா-கோர் பிராசஸர்
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - பிரத்யேக மேக்ரோ கேமரா
    - டெப்த் சென்சார் கேமரா
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம்

    ஒப்போ ஏ8

    ஒப்போ ஏ8 சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் பிராசஸர்
    - ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
    - 2 எம்.பி. டெப்த் சென்சார் கேமரா
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சீனாவில் ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனின் விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் ரூ. 20,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன் விலை CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அசூர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    எல்.ஜி. நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் FHD+OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. 136 டிகிரி சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. ஸ்டான்டர்டு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் OLED FHD+ 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளேவுடன் கூடுதலாக 2.1 இன்ச் மோனோ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நேரம், பேட்டரி விவரம், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு பயனுள்ள அம்சங்களை இயக்க முடியும்.

    எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க்

    எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் 19.5:9 FHD+ ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. LPDDR4x ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
    - 13 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.4, 1.0µm பிக்சல், 136° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 0.8μm பிக்சல், 79° லென்ஸ்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெனோ 3 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஒப்போ நிறுவனத்தின் ரெநோ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய ரெனோ 3 சீரிஸ் ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ என இரண்டு மாடல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும். தற்சமயம் ஒப்போ ரெனோ 3 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    அதில் ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் கிளாஸ் பேக், கிரேடியன்ட் ஃபின்ஷ் கொண்டிருக்கிறது. முன்புறம் டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் வடிவ நாட்ச், கீழ்புறத்தில் மெல்லிய சின் வழங்கப்பட்டுள்ளது.

    ரெனோ 3 லீக் புகைப்படங்கள்

    புகைப்படங்களின்படி ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் தென்படவில்லை என்பதால், இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஒப்போ ரெனோ 3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் சார்ந்த கலர் ஒ.எஸ். 7 வழங்கப்படும் என்றும் மீடியாடெக் எம்டி6885 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 6.5 இன்ச் AMOLED FHD+ 1080x2400 டிஸ்ப்ளே, 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 2.3

    நோக்கியா 2.3 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
    - குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE-class GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9 பை 
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது கேமரா
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
    - எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. 
    ×