search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எஸ்11 பிளஸ் ரென்டர்
    X
    கேலக்ஸி எஸ்11 பிளஸ் ரென்டர்

    கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் பிப்ரவரி 11-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் பிப்ரவரி 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.

    புதிய 2020 கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெறும் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்கள் தவிர 2020 கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனையும் சாம்சங் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்றே கேலக்ஸி எஸ்11 மாடல்களும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2020 விழாவுக்கு முன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கு முன் அறிமுகம் செய்வதன் மூலம் போட்டி நிறுவனங்களுக்கு முன்னதாகவே 2020 ஃபிளாக்‌ஷிப் போன்களை சாம்சங் அதிகளவு விளம்பரப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஃபோல்டு 2 ரென்டர்கள்

    கேலக்ஸி எஸ்11 சீரிஸ்: கேலக்ஸி எஸ்11, கேலக்ஸி எஸ்11 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்11இ என மூன்று மாடல்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இவற்றின் வடிவமைப்புகளில் அதிகளவு மாற்றம் செய்யப்படாது என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி எஸ்11 மாடல்களுடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனினையும் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஃபோல்டு மாடல் பார்க்க 2019 மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனகள் தவிர கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனையும் சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    Next Story
    ×