search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா 4.2
    X
    நோக்கியா 4.2

    இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை மீண்டும் குறைப்பு

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கியது முதல் ஏற்கனவே சிலமுறை நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 6,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு முதற்கட்டமாக அமேசான் தளத்தில் மட்டும் அமலாகி இருக்கிறது. விரைவில் மற்ற தளங்களிலும் அமலாகும் என தெரிகிறது. தவிர இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா இ ஸ்டோரில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கவில்லை. 

    நோக்கியா 4.2 விலை குறைப்பு

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10,990 விலையில் வெளியாகி முதற்கட்டமாக ரூ. 500 விலை குறைக்கப்பட்டது. பின் செப்டம்பர் 2019 இல் இதன் விலை மீண்டும் குறைக்கப்பட்டு ரூ. 9,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்சமயம் நோக்கியா 4.2 விலை குறைக்கப்பட்டுள்ளது.

    குறைக்கப்பட்ட புதிய விலை விரைவில் ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இந்தியா இ ஸ்டோரில் விரைவில் மாற்றப்படும் என தெரிகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கிளாஸ் பேக் கொண்டிருக்கும் நோக்கியா 4.2 மாடலில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், பவர் பட்டனில் நோட்டிஃபிகேஷன் லைட், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×