search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி ஏ51 - கேலக்ஸி ஏ71
    X
    கேலக்ஸி ஏ51 - கேலக்ஸி ஏ71

    சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. இரு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா, கிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன.

    கேலக்ஸி ஏ51

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 12 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ71

    கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×