search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா ஒன் ஹைப்பர்
    X
    மோட்டோரோலா ஒன் ஹைப்பர்

    64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மோட்டோரோலா நிறுவனம் முதல் முறையாக பாப் அப் ரக செல்ஃபி கேமராவினை வழங்கி இருக்கிறது. 

    மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் கேமரா எக்ஸ் ஏ.பி.ஐ. வழங்கப்பட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மோட்டோரோலாவின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

    முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஹைப்பர் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா ஒன் ஹைப்பர்

    மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஸ்கிரீன்
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - ஹைப்ரிட் டூயல் சிம் 
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, EIS, PDAF
    - 8 எம்.பி. 118-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, லேசர் ஆட்டோஃபோகஸ் (TOF)
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 45வாட் ஹைப்பர் சார்ஜிங்

    மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் டீப்சீ புளூ, டார்க் ஆம்பர் மற்றும் ஃபிரெஷ் ஆர்ச்சிட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. வரும் மாதங்களில் மற்ற பகுதிகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×