search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ரெனோ 2 சீரிஸ்
    X
    ஒப்போ ரெனோ 2 சீரிஸ்

    இந்தியாவில் இரு ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

    ஒப்போ நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்த ரெனோ 2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 2எஃப் மற்றும் ரெனோ 2இசட் மாடல்களின் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பை தொடர்ந்து ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் ரூ. 23,990 விலையிலும், ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் ரூ. 27,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆஃப்லைன் தளங்களில் விலை குறைக்கப்பட்டுவிட்ட நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய விலை விரைவில் மாற்றப்படலாம்.

    ஒப்போ ரெனோ 2எஃப், ரெனோ 2இசட்

    ஒப்போ ரெனோ 2எஃப் சிறப்பம்சங்கள்:

    ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் AMOLED, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ், 2 எம்.பி. சென்சார், f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ 2இசட் சிறப்பம்சங்கள்:

    ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் AMOLED, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி90 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மோனோகுரோம் சென்சார், 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×