என் மலர்
மொபைல்ஸ்
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இத்துடன் கூகுள் உருவாக்கிய டைட்டன் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12.2 எம்.பி. கேமரா, 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புகைப்படங்களை அழகாக்கும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களில் மோஷன் சென்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் பிராஜக்ட் சோலி மூலம் இயங்குகிறது. இது ஸ்மார்ட்போன் அருகாமையில் நிகழும் அசைவுகளை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது.
இது ஸ்மார்ட்போனினை கையில் எடுக்க முற்படும் போது ஃபேஸ் அன்லாக் அம்சத்தை இயக்க தயார்படுத்தும். ஸ்மார்ட்போன் அருகாமையில் யாரும் இல்லையெனில் திரை ஆஃப் ஆகிவிடும்.
கூகுள் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL சிறப்பம்சங்கள்:
பிக்சல் 4: 5.7 இன்ச் 2280x1080 பிக்சல் FHD+ OLED 19:9 டிஸ்ப்ளே, 444 PPI, HDR வசதி
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- பிக்சல் 4XL: 6.3 இன்ச் 2960x1440 பிக்சல் குவாட் HD+ OLED 19:9 டிஸ்ப்ளே, 537 PPI, HDR வசதி
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. DDR4X ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம் ஸ்லாட்
- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.7, 77° FOV, டூயல் PD ஆட்டோஃபோகஸ், OIS, EIS
- 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1μm பிக்சல், f/2.4
- 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, 1.22μm பிக்சல், f/2.0, 90° FOV
- ஆக்டிவ் எட்ஜ்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- பிக்சல் 4: 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- பிக்சல் 4XL: 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், Qi வயர்லெஸ் சார்ஜிங்
இரு ஸ்மார்ட்போன்களும் ஜஸ்ட் பிளாக், கிளியர்லி வைட் மற்றும் லமிட்டெட் எடிஷன் ஓ சோ ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. வெர்ஷன் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 57,105) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 899 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 64,250) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் 4XL ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. மாடல் விலை 899 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 64,250) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 71,400) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் ஏ9 2020 ஸ்மார்ட்போன் ஏ5 2020 ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு பிரைமரி கேமராக்களுடன் அறிமுகமான இரு ஸ்மார்ட்போன்களில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமான நிலையில் ஒப்போ ஏ9 2020 4ஜி.பி. வேரியண்ட் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ9 2020 (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை மாற்றப்படாமல் ரூ. 19,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. குறைக்கப்பட்ட புதிய விலை அமேசான் மற்றும் ஆஃப்லைன் வலைத்தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

ஒப்போ ஏ9 2020 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 2 எம்.பி. சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- டால்பி அட்மோஸ்
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தற்சமயம் குறைந்த விலையில் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
புதிய விலை குறைந்த கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10இ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் SM-N770F என்ற பெயரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்பதால் இதன் ஹார்டுவேர் அம்சங்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமராவும் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் மாடலில் உள்ளதை விட சிறிய பேட்டரி, குறைந்த மெமரி மற்றும் ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
நோட் சீரிஸ் என்பதால் இந்த ஸ்மார்ட்போனுடன் எஸ் பென் வழங்கப்படலாம். எனினும், இதில் கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் ப்ளூடூத் பில்ட்-இன் வசதி வழங்கப்படலாம். இதன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
தற்சமயம் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 69,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என இரு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறேயே ரூ. 79,999 மற்றும் ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD+ வாட்டர் டிராப் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 6.2 சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ 19.5:9 HDR 10 பியூர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. LPPDDR4x ரேம்
- 64 ஜி.பி. (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்சடு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ZEISS ஆப்டிக்ஸ்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி 2.0
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதிய ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், லிக்விட் கூலிங், ஆண்ட்ராய்டு 10.0 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், OIS, 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க 16 எம்.பி. சோனி IMX471 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலில் 4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7டி ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 3120x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
- 675MHz அட்ரினோ 640 GPU
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 7P லென்ஸ், f/1.6, 0.8μm பிக்சல், OIS, EIS
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.0 μm பிக்சல், OIS, 3x சூம்
- 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4080 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ரேப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஹேஸ் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 53,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இதனை அமேசான் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும்.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் என்ட்ரி லெவல் மாடலான நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் ரூ. 6,599 விலையிலும் 3 ஜி.பி. வேரியண்ட் ரூ. 7,599 விலையில் வாங்கிட முடியும்.
இதேபோன்று நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 7,499 விலையிலும், 3 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 8,499 விலையில் வாங்கிடலாம்.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்தது. நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் வேகமாகவும், சீராகவும் கிடைக்கும்.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். மோட், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் a-Si TFT எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் நோட்டிஃபிகேஷன் லைட் கீ மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கி வருகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் முதல் நோக்கியா ஸ்மார்ட்போனாக நோக்கியா 8.1 இருக்கிறது.
Android 10 upgrade for Nokia 8.1 starts today! First on SD710 to bring new features such as Dark theme, Gesture Navigation and more. Staying the course to be the first across the portfolio! Nokia phones #Keepgettingbetter#nokiamobilepic.twitter.com/U9g1jZHtA6
— Juho Sarvikas (@sarvikas) October 9, 2019
ஏற்கனவே நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு கியூ பீட்டா அப்டேட் வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ரய்டு 10 இயங்குதளம் கூடுதல் பிரைவசி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.
புதிய அப்டேட் மூலம் டார்க் மோட், ஸ்மார்ட் ரிப்ளை, ஃபோக்கஸ் மோட், பிரத்யேக பிரைவசி பகுதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெர்ஷன் 4.15பி மொத்தம் 1.44 ஜி.பி. அளவில் கிடைக்கிறது. இத்துடன் செப்டம்பர் மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 2246x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் ப்யூர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். சிப்செட்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 9.0 பை
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
- 13 எம்பி இரண்டாவது பிரைமரி, ZEISS ஆப்டிக்ஸ்
- 20 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3500 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 8 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. இதில் டூயல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ரெட்மி 8 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி 8 ஸ்மார்ட்போனி்ல் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஔரா மிரர் வடிவமைப்பு, பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 8 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. சோனி IMX363 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், f/1.8, 6P லென்ஸ், டூயல் PD ஆட்டோஃபோகஸ்
- 2 எம்.பி. டெப்த் கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12μm பிக்சல்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி 8 ஸ்மார்ட்போன் சஃபையர் புளு, ரூபி ரெட், எமரால்டு கிரீன், ஆன்சி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 7,999 என்றும் 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சாம்சங் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.
3டி பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 1560x720 பிக்சல் HD+ TFT இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் முப்பது நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் துவங்கிய முப்பது நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் இதர தளங்களில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நடைபெற்றது.
முன்பதிவு துவங்கிய முப்பது நிமிடங்களில் சாம்சங் மொத்தம் 1200 கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை விற்றதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.3 இன்ச் டிஸ்ப்ளே, ஆறு கேமராக்கள், 12 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ஒரு வருடத்திற்கான கேலக்ஸி ஃபோல்டு பிரீமியர் சர்வீஸ் வழங்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 12 ஜி.பி. + 512 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் காஸ்மோஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி பட்ஸ் ஹெட்போன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுக்கான பாதுகாப்பு சலுகை ரூ. 10,500 விலையில் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:
- 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே
- 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 12 ஜி.பி. ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS, f/1.5 - f/2.4
- 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9
- 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா, f/2.2
- 10 எம்.பி. கவர் கேமரா, f/2.2
- AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
- 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)
- 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சியோமியன் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முன்னதாக M1908C3IC என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆனது.
அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை பெறாத நிலையில் கேமரா மட்டும் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் ஸ்கிரீன், 156.3×75.4×9.4mm அளவுகளில் உருவாகியுள்ளது. இது அளவில் சற்று சிறியதாகவும், ரெட்மி 7 மாடலை விட தடிமனாகவும் இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. முந்தைய ரெட்மி 7 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருந்தது.
3சி சான்று பெற்றிருப்பதால், இதில் 10வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்படுவதால் இது ரெட்மி நோட் 8 மாடலாக இருக்காது. ரெட்மி நோட் 8 மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்.பி. சென்சாருடன் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது.
ரெட்மி 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ரூ. 7,999 எனும் துவக்க விலையில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ரெட்மி 8 விலையும் இதே போன்று நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ரூ.1,500 மதிப்புள்ள ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்து உள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் சலுகைகள் அளித்து வருகின்றன. அந்த வரிசையில் தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சலுகை விலையில் ஜியோ போனை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ‘தீபாவளி 2019’ என்ற புதிய சலுகை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ரூ.1,500 மதிப்புள்ள 4ஜி ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் ரூ.800 சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புக்கு எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது. குறிப்பாக பழைய போன்களை ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது’ என கூறப்பட்டுள்ளது.,
இதுபற்றி ரிலையன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறுகையில், ‘இந்த விலை சந்தையில் உள்ள 2ஜி அம்ச செல்போன்களை விட மிகக்குறைவு ஆகும். எனவே 2ஜி செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 4ஜி அம்சம் நிறைந்த செல்போன் சேவையை பயன்படுத்துவதில் இருந்த தடை தற்போது நீக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு இந்தியனும் மலிவான இணைய வசதி மற்றும் டிஜிட்டல் புரட்சியின் பலன்களை பெறுவதை ஜியோ உறுதி செய்யும். ‘ஜியோ போன் தீபாவளி பரிசு’ வழங்குவதன் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள அனைவரையும் இணைய வசதிக்குள் கொண்டு வருவதற்காக ரூ.1,500 முதலீடு செய்கிறோம்’ என்றார்.
இந்த ஜியோ போனில் 2.4 அங்குல திரையும், 2 ஆயிரம் எம்.ஏ.எச். பேட்டரி வசதியும், 2 எம்.பி. பின்பக்க கேமரா மற்றும் 0.3 எம்.பி. முன்பக்க கேமரா வசதியும் உள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு ‘தீபாவளி 2019’ என்ற புதிய சலுகை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, ரூ.1,500 மதிப்புள்ள 4ஜி ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் ரூ.800 சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்புக்கு எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது. குறிப்பாக பழைய போன்களை ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது’ என கூறப்பட்டுள்ளது.,
இதுபற்றி ரிலையன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறுகையில், ‘இந்த விலை சந்தையில் உள்ள 2ஜி அம்ச செல்போன்களை விட மிகக்குறைவு ஆகும். எனவே 2ஜி செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 4ஜி அம்சம் நிறைந்த செல்போன் சேவையை பயன்படுத்துவதில் இருந்த தடை தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
‘தீபாவளி 2019’ சலுகையின் கீழ் ஜியோ போன் வாங்குபவர்களுக்கு ரூ.700 மதிப்புள்ள சலுகைகளும், முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்களும் இலவசமாக கிடைக்கும்.

இந்த ஜியோ போனில் 2.4 அங்குல திரையும், 2 ஆயிரம் எம்.ஏ.எச். பேட்டரி வசதியும், 2 எம்.பி. பின்பக்க கேமரா மற்றும் 0.3 எம்.பி. முன்பக்க கேமரா வசதியும் உள்ளது.






