search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா 3.2
    X
    நோக்கியா 3.2

    இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



    இந்தியாவில் நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் என்ட்ரி லெவல் மாடலான நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் ரூ. 6,599 விலையிலும் 3 ஜி.பி. வேரியண்ட் ரூ. 7,599 விலையில் வாங்கிட முடியும்.

    இதேபோன்று நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 7,499 விலையிலும், 3 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 8,499 விலையில் வாங்கிடலாம். 

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்தது. நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் வேகமாகவும், சீராகவும் கிடைக்கும். 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 2.2

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். மோட், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் a-Si TFT எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் நோட்டிஃபிகேஷன் லைட் கீ மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×