என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய கியூ60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    எல்.ஜி. நிறுவனம் கியூ6 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

    புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் டி.டி.எஸ். எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது கேமிங், திரைப்படம் மற்றும் பாடல்களை கேட்கும் போது 7.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்கும். எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போனில் MIL-STD-810G தரச்சான்று பெற்றிருக்கிறது. இது வித்ஸ்டான்டு இம்பேக்ட், வைப்ரேஷன், ஹை டெம்பரேச்சர், லோ டெம்பரேச்சர், தெர்மல் ஷாக் மற்றும் ஹியுமிடிட்டி கொண்டிருக்கிறது.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போனில் பிர்தயேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    எல்.ஜி. கியூ60

    எல்.ஜி. கியூ60 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி.+ 19:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650MHz IMG பவர் விஆர் GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்,PDAF
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - MIL-STD 810G தரச்சான்று
    - டி.டி.எஸ். எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போன் நியு மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்குகிறது.
    டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, வி.ஜி.ஏ. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    டெக்னோ ஸ்பார்க் 4

    டெக்னோ ஸ்பார்க் 4 சிறப்பம்சங்கள்:

    - 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
    - மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. இரண்டாவது கேமரா
    - வி.ஜி.ஏ. கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஹை ஒ.எஸ். 
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, வைபை

    இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ நிறுவனத்தின் கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 120 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் லெனோவோ கே10 பிளஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    லெனோவோ கே10 பிளஸ்

    லெனோவோ கே10 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. + 19:9 டாட் நாட்ச் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 120 டிகிரி வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    லெனோவோ கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்பிரைட் மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30 ஆம் தேதி துவங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் நிறுவனம் ரோக் போன் 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED HDR 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆப்டிக்கல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரோக் போன் 2 மாடலில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 24 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கபப்ட்டுள்ளது. 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் ரோக் போன் 2 மாடலில் 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    அசுஸ் ரோக் போன் 2

    அசுஸ் ரோக் போன் 2 சிறப்பம்சங்கள்:

    - 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 120Hz OLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ்
    - 675MHz அட்ரினோ 640 GPU
    - 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - 12 ஜி.பி. LPDDR4x ரேம், 512 ஜி.பி. (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரோக் யு.ஐ.
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா 1/2″சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.79
    - 13 எம்.பி. 125 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, EIS
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    அசுஸ் ரோக் போன் 2 மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் திருவிழாவில் துவங்குகிறது. 
    ரெட்மியின் புதிய கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்படுகிறது. விலை குறைப்பு பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. அந்த வகையில் ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. ரெட்மி கே20 ப்ரோ டாப் எண்ட் மாடலான 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என மாற்றப்பட்டுள்ளது.

    ரெட்மி கே20 ப்ரோ


    அந்த வகையில் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3000 வரை குறைக்கப்படுகிறது. இதுதவிர ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. 124.8° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா, ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3P லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியாவின் புதிய ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன் வீடியோ ஆன்லைனில் வெளியாகியுள்ளது. புதிய மொபைல் போன் கீபேட் கொண்டிருக்கிறது. புதிய வீடியோவின் படி கூகுள் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஃபீச்சர் போனிற்கு ஏற்ப அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

    ஏற்கனவே பலமுறை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதவிர கூகுள் க்ரோம் சேவையின் டச்-லெஸ் பதிப்பு ஸ்கிரீன்ஷாட்களும் லீக் ஆகியிருந்தன.

    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன் வீடியோ விமியோ தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஒருநிமிடம் ஓடும் வீடியோவில் ஆண்ட்ராய்டு டச்-லெஸ் பதிப்பின் யு.ஐ. விவரங்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் பிரபல ஸ்னேக் கேமின் டச்-லெஸ் பதிப்பும் இடம்பெற்றிருக்கிறது.

    நோக்கியா போன்

    வீடியோவில் ஹோம் ஸ்கிரீன், ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட்கள், ஆப் டிராயர், பல்வேறு செயலிகள் மற்றும் செட்டிங் ஆப் போன்றவை காணப்படுகிறது. இதே வீடியோவில் பயனர் கூகுள் மேப்ஸ் செயலியை திறக்க முயலும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. எனனும், மேப்ஸ் செயலி சீராக இயங்கவில்லை.

    இத்துடன் க்ரோம், யூடியூப், கேமரா, கால் லாக், கால்குலேட்டர் மற்றும் காலண்டர் போன்ற முதன்மை செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் கேலரி, கிளாக், மியூசிக், போன், கான்டாக்ட்ஸ், ஷேர் ஃபைல்ஸ், சவுண்ட், போன் டிப்ஸ் மற்றும் செட்டிங் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
    விவோ நிறுவனத்தின் புதிய வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ நிறுவனத்தின் புதிய வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED 20:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் கேமரா, 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. 

    விவோ வி17 ப்ரோ

    விவோ வி17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 8 ஜி.பி. LPDDR4x ரேம்
    - 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை, ஃபன்டச் ஒஎஸ் 9.1
    - டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, 1/2″ சோனி IMX582, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 32 எம்.பி. வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஓசன் மற்றும் கிளேசியர் ஐஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்கி விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது அல்ட்ரா வைடு சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி எம்10எஸ்

    சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884பி பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் ஸ்டோன் புளு மற்றும் பியானோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைத்தளங்களில் துவங்குகிறது. 
    இந்தியாவில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



    இந்தியாவில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமரா மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    ஒப்போ ஏ1கே

    ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் தற்சமயம் ரூ. 7,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இதன் விலையில் ரூ. 500 குறைக்கப்பட்டிருந்தது.

    ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி.) மாடல் விலை ரூ. 16,990 இல் இருந்து தற்சமயம் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் எஃப்11 ப்ரோ மாடலுடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யஇருப்பதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்2 என அழைக்கப்படுகிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி வெளியிட்டது. புதிய ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ரியல்மி எக்ஸ்.டி. மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சாம்சங் AMOLED வாட்டர் டிராப் ஸ்கிரீன், 64 எம்.பி. குவாட் பிரைமரி கேமராக்கள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    ரியல்மி எக்ஸ்2

    ரியல்மி எக்ஸ்2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஒ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.72″ சாம்சங் GW1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 8 எம்.பி. 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
    - 2 எம்.பி. 4 செ.மீ. மேக்ரோ, f/2.4, 1.75μm பிக்சல்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 30 வாட் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
    சியோமி நிறுவனத்தின் Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    சியோமி நிறுவனத்தின் Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதே நிகழ்வில் சியோமி தனது அடுத்த தலைமுறை Mi மிக்ஸ் கான்செப்ட் போனையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கான்செப்ட்டில் 108 எம்.பி. சாம்சங் சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இந்த ஸ்மார்ட்போனுடன் MIUI 11 இயங்குதளம் மற்றும் Mi டி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வையர்டு OTG ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் என நான்கு வித சார்ஜிங் வசதிகளை வழங்க இருக்கிறது.

    வையர் மூலம் சார்ஜ் செய்யும் போதே, வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் கொண்டு வயர்லெஸ் முறையில் மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

    Mi 9 ப்ரோ டீசர்

    சியோமி Mi 9 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.39 இன்ச் 1080x2280 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. / 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS, லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF, CAF
    - 12 எம்.பி. 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 2x லாஸ்லெஸ் சூம்
    - 16 எம்.பி. 1/1.3″ சோனி IMX481 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 4cm மேக்ரோ
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஐபோன்கள் அறிமுகமானதைத் தொடர்ந்து விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. இதே நிகழ்வில் ஐபோன் அறிவிப்புகளுடன் ஐபோன் XR, ஐபோன் 8 சீரிஸ் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

    புதிய விலை குறைப்பு இந்தியாவிலும் அமலாகியிருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளால் விலை குறைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் ஐபோன் XR 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மாடல்களின் விலை ரூ. 27,000 குறைக்கப்பட்டுள்ளது.

    ஐபோன் 8

    ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64 ஜி.பி. வெர்ஷன்களின் விலை ரூ. 20,000 குறைக்கப்பட்டது. முன்னதாக இவற்றின் விலை கடந்த ஆண்டும் குறைக்கப்பட்டிருந்தது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 128 ஜி.பி. மாடல்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது. ஐபோன் 7 சீரிஸ் மாடலின் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.

    ஐபோன் X சீரிஸ் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஐபோன்கள் தவிர ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலின் விலை ரூ. 8000 குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ஏற்கனவே கடந்த ஆண்டும் குறைக்கப்பட்டது. 
    ×