search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்.ஜி. கியூ60
    X
    எல்.ஜி. கியூ60

    மூன்று பிரைமரி கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய கியூ60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    எல்.ஜி. நிறுவனம் கியூ6 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

    புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் டி.டி.எஸ். எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது கேமிங், திரைப்படம் மற்றும் பாடல்களை கேட்கும் போது 7.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்கும். எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போனில் MIL-STD-810G தரச்சான்று பெற்றிருக்கிறது. இது வித்ஸ்டான்டு இம்பேக்ட், வைப்ரேஷன், ஹை டெம்பரேச்சர், லோ டெம்பரேச்சர், தெர்மல் ஷாக் மற்றும் ஹியுமிடிட்டி கொண்டிருக்கிறது.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போனில் பிர்தயேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    எல்.ஜி. கியூ60

    எல்.ஜி. கியூ60 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி.+ 19:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650MHz IMG பவர் விஆர் GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்,PDAF
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - MIL-STD 810G தரச்சான்று
    - டி.டி.எஸ். எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. கியூ60 ஸ்மார்ட்போன் நியு மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×