என் மலர்
மொபைல்ஸ்
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரெனோ 4 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் இ3 சூப்பர் AMOLED 3D பார்டர்லெஸ் சென்ஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் டிஸ்ப்ளேவில் ஒற்றை பன்ச் ஹோல் கொண்ட 32 எம்பி செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 0.34 நொடிகளில் அன்லாக் செய்யும் திறன் கொண்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் ரெனோ 4 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2 கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED 90Hz வளைந்த டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி UFS 2.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, EIS, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜ்
ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி நைட் மற்றும் சில்கி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 34990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீடு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஐபோன் 12 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டின் வருவாய் அறிக்கையை தாக்கல் செய்யும் போது அந்நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் லுகா மேஸ்ட்ரி ஐபோன் வெளியீட்டு விவரங்களை தெரிவித்தார்.
முன்னதாக குவால்காம் நிறுவனம் உதிரிபாகங்கள் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்கலாம் என தெரிவித்து இருந்தது. ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் ஐபோன் 12 சீரசில் வெளியாகும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு புதிய ஐபோன் விற்பனை செப்டம்பர் மாதத்தில் துவங்கியது. இந்த ஆண்டு விநியோக திட்டம் சில வாரங்கள் வரை தாமதம் ஆகும் என மேஸ்ட்ரி தெரிவித்தார். வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபோன் 11 சீரிசிலும் பின்பற்றப்பட்டது. முன்னதாக ஐபோன் எக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் வெளியீடும் தாமதமாகவே துவங்கியது. வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டாலும் ஆப்பிள் தனது புதிய ஐபோன் சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் மற்றும் எம்1 ட்ரூ வயர்லெஸ் சிங்கிள் இயர்பட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
புதிய டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போனில் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 6ஏர் சிறப்பம்சங்கள்
- 7 இன்ச் 1640X720பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
- IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைஒஎஸ் 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
- 2 எம்பி டெப்த் சென்சார், ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் கொமெட் பிளாக் மற்றும் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டெக்னோ மினிபாட் எம்1 ட்ரூ வயர்லெஸ் சிங்கிள் இயர்பட் ப்ளூடூத் 5.0, என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இத்துடன் டச் கண்ட்ரோல்கள், ஐபிஎக்ஸ்4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் இயர்பட் 50 எம்ஏஹெச் பேட்டரியும் சார்ஜிங் கேஸ் 110 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. டெக்னோ மினிபாட் எம்1 வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையின் மிட் ரேன்ஜ் பிரிவில் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்31எஸ் மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 ஜிபியு
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மிரேஜ் பிளாக் மற்றும் மிரேஜ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசானில் நடைபெற இருக்கிறது.
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அவ்வப்போது நோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 6.3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்சமயம் இந்த வரிசையில் நோக்கியா 2.4 இணைந்துள்ளது.
என்ட்ரி லெவல் மாடலான நோக்கியா 2.4 இந்த ஆண்டின் அடுத்த காலாண்டு வாக்கில் அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் கனடா நாட்டின் சான்றளிக்கும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்து இருக்கிறது.

அதன்படி புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் நோக்கியா 2.4 2 ஜிபி ரேம், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மற்றும் 5 எம்பி சென்சார்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் மாடலான ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஒன்பிளஸ் நார்டு வெளியான சில வாரங்களுக்குள் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பில்லி எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் எஸ்எம்350 எனும் பார்ட் நம்பர் கொண்டிருக்கிறது. இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், 5ஜி வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆக்சிஜன் ஒஎஸ் செட்டிங்ஸ் ஏபிகே விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பிஇ2025, பிஇ2026, பிஇ2028 மற்றும் பிஇ 2029 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்டு சீரிசில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இதுதவிர அமெரிக்க சந்தைக்கென பிரத்யேக நார்டு ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புகிய ஸ்மார்ட்போன் தற்போதைய மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே மாடல் இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் அறிமுகமாகும் என தெரிகிறது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. பின் இதைத் தொடர்ந்து பலமுறை இதன் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வரிசையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 3 இல் அறிமுகமாகும் என கூறப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டன் M செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
- 3080 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ நிறுவனத்தின் புதிய வி19 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ. 27990 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ வி19 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 4 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பின் படி விவோ வி19 8 ஜிபி+128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 27990 என மாறி உள்ளது. அந்த வகையில் இரு மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட விலை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் பிரதிபலிக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி19 மாடலில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜிபி ரேம், காப்பர் டியூப் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் கிளாஸ் சான்ட்விட்ச் டிசைன் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ்சார்ஜ் 2.0, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
எனினும், இதன் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் முதல் விற்பனை ஜூலை 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெற இருக்கிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் புதுவரவு மாடலாக கேலக்ஸி எம்01 கோர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்01 கோர் மாடலில் 5.3 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1480 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் எம்டி6739 பிராஸர், 1ஜிபி/2ஜிபி ரேம், 16ஜிபி/32ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா,f/2.2 மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அக்செல்லோமீட்டர், விர்ச்சுவல் பிராக்சிமிட்டி சென்சிங் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் சிறப்பம்சங்கள்
- 5.3 இன்ச் 720x1480 பிக்சல் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6739 பிராசஸர்
- பவர்விஆர் ரோக் ஜிஇ8100 ஜிபியு
- 1ஜிபி / 2ஜிபி ரேம்
- 16ஜிபி / 32ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 3000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்01 கோர் ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 1ஜிபி ரேம், 16ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5499 என்றும் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ42 ஸ்மார்ட்போன் சீனாவின் 3சி வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் சாம்சங் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் என்றும் இது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A426B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த மாடல் 4860 எம்ஏஹெச் பேட்டரியுடன் சீன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி EB-BA426ABY எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது 5000 எம்ஏஹெச் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முந்தைய தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ42 ஸ்மார்ட்போன் SM-A426B மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. மேலும் இது அடுத்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போதைய தகவலில் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் முன்னதாக அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ41 மாடடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். கேலக்ஸி ஏ41 மாடலில் 3500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய மாடலில் 5ஜி வழங்கப்படுவதால் அதிக திறன் கொண்ட 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுவதால் இந்த சற்றே தடிமனாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. போதுமான இடவசதியின்மை காரணமாக புதிய கேலக்ஸி ஏ42 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுவதாக தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் எடிஷன் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.
தட்சு வலைதளத்தில் லீக் ஆகி உள்ள விவரங்களின் படி கேலக்ஸி எஸ்20 லைட் எடிஷன் EB-BG781ABY எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் 4370 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே அளவு பேட்டரி சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.

நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.






