என் மலர்
மொபைல்ஸ்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான பாப் அப் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்குகிறது. எனினும், முன்கூட்டியே ஒன்பிளஸ் நார்டு வாங்க விரும்புவோருக்கு விர்ச்சுவல் பாப் அப் விற்பனை ஜூலை 27 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. பாப் அப் விற்பனைக்கான முன்பதிவுகள் ஜூலை 26 ஆம் தேதி துவங்குகிறது.
முதல் இரண்டு ரவுண்டு விற்பனைகள் ரெட் கேபிள் கிளப் வாடிக்கையாளர்களுக்கு பிரத்கயேமாக நடைபெற இருக்கிறது. மூன்றாவது ரவுண்ட் விற்பனை ஜூலை 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு முன்பதிவுகள் ஏற்கனவே ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் நார்டு பாப் அப் விற்பனை ரவுண்ட்களில் பங்கேற்க ஒன்பிளஸ் வலைதளம் சென்று அவதார் ஒன்றை உருவாக்க வேண்டும். பின் அவதாரை இன்ஸ்டாகிராமில் #NordPopUp எனும் ஹேஷ்டேக் சேர்த்து பகிர வேண்டும்.
இவ்வாறு செய்தால் பாப் அப் விற்பனைக்கான இன்விடேஷனை வென்றிட முடியும். அவதாரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும், ஒன்பிளஸ் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து பதிவினை சமர்பிக்க வேண்டும். பாப் அப் விற்பனை நிகழ்வுக்கான இன்விடேஷன் முதல் 100 பேருக்கு கட்டாயம் வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது ரியல்மி ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த எடிஷன் ஆகும்.
புதிய ரியல்மி 6ஐ மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 6ஐ மாடல் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்கள் வழங்கப்படுகிறது.

ரியல்மி 6ஐ சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
- 800MHz மாலி-G76 3EEMC4 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்இடி ஃபிளாஷ், EIS
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.00
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4300 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி வெர்ஷன் விலை ரூ. 12999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஜூலை 31 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், 30எக்ஸ் ஜூம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விவரங்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், 10 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு
ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
8 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி(UFS 3.1)
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.0, PDAF
12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
4300 எம்ஏஹெச் பேட்டரி
25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் கிரே மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகி விடும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் 5ஜி மொபைல் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ப்ளிப் 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2636x1080 பிக்சல் டைனமிக் AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே
- 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 650 ஜிபியு
- 8 ஜிபி ரேம்
- 256 ஜிபி மெமரி
- இசிம் - நானோ சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா
- 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 10 எம்பி செல்ஃபி கேமரா
- 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
- 3300 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,08,180 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4115 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு சிறப்பம்சங்கள்
- 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 12 ஜிபி ரேம், 256 ஜிபி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, OIS + EIS
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.25
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.45
- இன் டிஸ்பஅளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- 4115 எம்ஏஹெச் பேட்டரி
- ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் புளூ மார்பிள் மற்றும் கிரே ஆனிக்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்டு 8 ஜிபி, 128 ஜிபி மாடல் மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களின் விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்குகிறது. 6 ஜிபி ரேம் விற்பனை தேதி அறிவிக்கப்படாமல்லை செப்டம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஜெம்-கட் டெக்ஸ்ச்சர் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் சிறப்பம்சங்கள்
- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி+ 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
- IMG பவர் விஆர் GE8320 ஜிபியு
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிடிஎஸ்-ஹெச்டி சரவுண்ட் சவுண்ட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் வேவ் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 16499 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை சாம்சங் மற்றும் இதர விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதிய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் புதிய விலை ரூ. 17499 ஆக மாறி இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
- 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
- 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
- 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப் சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி
- 5020 எம்ஏஹெச் பேட்டரி
- 22.5 வாட் சார்ஜர்
- 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் பெபிள் கிரே, ஆர்க்டிக் வைட் மற்றும் அக்வா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 360 டிகிரி ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் 360 டிகிரி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் எஃப்சிசி வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய ஸ்மார்ட்போன்கள் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் பின்புறம் பல்வேறு கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் லீக் ஆகி இருக்கும் 360 டிகிரி ரென்டர்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவை செவ்வக வடிவம் கொண்ட மாட்யூலில் பொருத்தப்படுகிறது.

பேக் பேனலின் கீழ்புறத்தில் சாம்சங் லோகோ மற்றும் மேட் பிளாக் ஃபினிஷன் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால், இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.
முன்புறம் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கிறது. ரென்டர்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஃபிலாட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.
ரென்டர்கள் தவிர கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் எஃப்சிசி வலைதளத்தில் எஸ்எம் என்981பி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. எஃப்சிசி விவரங்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் என்எஃப்சி வசதி, ப்ளூடூத் 5, வைபை, ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் எஸ் பென் போனினுள் இருந்து கொண்டே வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 9 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேமுடன் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வெளியீட்டு தேதி உள்பட ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் இணைகிறது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்று இருந்தது. இத்துடன் 4 ஜிபி ரேம் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மாடல் அறிமுகமாகும் என்றும் இத்துடன் 6 ஜிபி ரேம் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படவில்லை.
தற்போதைய தகவல்களின் படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எஃப்ஹெச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், பின்புறம் நான்கு பிரைமரி கேமராக்கள், 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அந்த வரிசையில் தற்சமயம் 256 ஜிபி மெமரி வேரியண்ட் இணைந்துள்ளது. புதிய வேரியண்ட் பியல் புளூ, பியல் வைட் மற்றும் பியல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி எக்ஸ்2 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் நார்டு ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், நான்கு பிரைமரி கேமராக்கள், OIS, 105 டிகிரி செல்ஃபி கேமரா என ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஃபிளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் கூடுதலாக 105 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை. இரு முன்புற கேமராக்களும் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் மிகவும் தெளிவான செல்ஃபி எடுக்க வழி செய்யும் என கூறப்படுகிறது.
பின்புறம் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா மற்றும் மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் 4115 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.






